being created

நாகராஜா கோவில்

From Tamil Wiki
Revision as of 11:54, 22 July 2023 by Arulj7978 (talk | contribs)

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் நகரில் உள்ள நாக வழிபாட்டு ஆலயம். மூலவர் நாகராஜர். ஆலயத்தில் அனந்த கிருஷ்ணனுக்கு சன்னதி உள்ளது. அனந்த கிருஷ்ணன் பெயரிலேயே திருவிழா மற்றும் தேரோட்டம் நடக்கிறது. நாகர்கோவில் ஊர் பெயர் நாகராஜா கோவில் காரணமாக உருவானது .

இடம்

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் நகரில் ஒழுகினசேரி என்னும் பகுதியில் உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பெயர்

நாகர்கோவில் என்னும் பெயர் பழங்காலத்தில் நாகராஜா கோவிலை குறிப்பதாகவே இருந்துள்ளது. பின்னர் கோவிலை சுற்றி உள்ள ஊர் பெயராகவும் அவ்வூர் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலை நகராகவும் மாறியுள்ளது. நாகர்கோவில் என்னும் பெயர் வழங்கப் பட்டிருந்தாலும் கோட்டாறு என்னும் பெயரே பெருவழக்காக இருந்துள்ளது. கி.பி. 1800 க்குப் பின் புரட்டஸ்டாண்டுக் கிறிஸ்த்தவர்கள் வருகைக்குப் பின்னர் நாகர்கோவில் என்னும் பெயர் பெருவழக்காக மாறியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மூலவர்

கோவில் மூன்று கருவறைகளைக் கொண்டது. மூலக்கருவறை நாகராஜா அல்லது நாகரம்மன் கருவறை என அழைக்கப்படுகிறது. மூலக்கருவறை காலத்தால் பழையது. இக்கருவறை மண்சுவரால் எழுப்பப்பட்டு மூங்கில் கம்புகளில் தென்னை ஓலைகளால் வெயப்பட்ட கூரைக் கொண்டது. கருவறை முன்பாக வாகனம், பலிபீடம் இல்லை. கருவறைக்குள் இருக்கும் மூல கற்சிலை நான்கு தலைகள் கொண்டது. இச்சிலை ஐந்து தலைக்கொண்ட உலோக அங்கியால் பொதியப்பட்டுள்ளது. ஐந்தாவது தலை அறுபட்ட நிலையில் காணப்படுகிறது.

சிவன் கருவறையில் மூலவர் ஆவுடையாரில் லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவன் கருவறையின் முன் அறையில் நந்தி சிலை உள்ளது.

அனந்த கிருஷ்ணன் கருவறையில் அனந்த கிருஷ்ணனன் சிலையும் அதன் இருபுறங்களிலும் பாமா மற்றும் ருக்மிணி சிற்ப்பங்கள் உள்ளன.

தொன்மம்

நாகராஜா கோவிலுக்கு எழுதப்பட்ட தலவரலாறு கிடையாது. செவிவழி கதைகளே உள்ளன.

கோவில் இப்போது இருக்கும் இடம் ஒரு காலத்தில் புல்லும் புதறுமாக இருந்துள்ளது. ஒரு இளம்பெண் புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென ரத்தம் கண்டு அஞ்சி பார்த்த போது ஐந்து தலை நாகம் ஒன்றின் தலையில் அறிவாள் வெட்டி ரத்தம் வருவதை காண்கிறாள். அவள் பக்கத்திலிருந்த தன் ஊர் மக்களிடம் நடந்ததை கூற அவர்கள் அங்கு வந்து பார்த்து பரிகாரமாக அவ்விடத்தில் சிறு கோவில் ஒன்றை கட்டினர்.

களக்காட்டு மன்னர் ஒருவர் காட்டுப்பகுதிகளை சீர்செய்து நாடாக்க அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அதிகாரிகள் மக்களை அழைத்துக் கொண்டு காடுகளை சீர்திருத்தினர். அப்போது ஓரிடத்தில் கல் ஒன்று சேதப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. அதைப்பார்த்தவர்களுக்கு நாகப்பிம்பம் தெரிந்துள்ளது. அன்று இரவு களக்காடு மன்னர் கனவில் தோன்றிய நாகர் உன் ஆட்கள் தன்னை சிதைத்ததாகவும் உன்னை பீடித்துள்ள தொழுநோய் தீர எனக்கு ஆலய்ம எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி மன்னர் நாகர்க்கு கோவில் எழுப்பினார்.

நாகவழிபாடு

நாகவழிபாடு மிகத் தொன்மையானது. விஷத்தினல் எதிரிகளைக் கொல்லும் சக்த்தியை பாம்புகள் கொண்டிருப்பதால் அவற்றுக்கும் கடவுளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பி வழிப்பட்டனர். நாட்டுப்புறத் தெய்வங்காளின் கூறுகளை உள்ளடக்கிய வழிபாட்டு முறை. புராணங்கள் அதிக அளவில் உள்வாங்கி கொண்டிருக்கின்றன. கேரளத்திலும் குமரி மாவட்டத்திலும் சர்ப்ப(பாம்பு)க் காவுகள் அதிகமாக ஊள்ளன.

நாகராஜா கோவிலில் நாகவழிபாடு மிகப் பழங்காலத்திலே இருந்துள்ளது. நாகரம்மன் அல்லது நாகராஜா என்னும் இக்கொவில் மூல தெய்வத்திற்க்கு நேர்ச்சை செய்வதன் மூலம் சரும வியாதிகளைப் போக்கி நலம் பெறலாம் என்னும் நம்பிக்கை இங்கு பல காலமாக இருந்து வருகிறது.

கோவில் அமைப்பு

கோவில் வளாகத்தை சுற்றி உயர்ந்த மதில் சுவர் கல் நாகர் உருவங்களுடன் இருக்கிறது. கோவில் சதுரவடிவில் அமைந்துள்ளது. கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் வளாகத்தின் கிழக்கிலும் தெற்க்கிலும் வாசல்கள் உள்ளன. அனந்த கிருஷ்ணன் சன்னதியின் எதிரிலும், நாகராஜர் சன்னதி எதிருலுமாக வாசல்கள் உள்ளன. கோவில் முகப்பு நுழைவாயில் கேரளபாணியில் அமைந்துள்ளது.

கோவில் வளாகம்

பக்தர் குளம்: கோவில் முன்புறம் இருக்கிற பிரதான வாயில் கிழக்கு வாயில் அல்லது உமை பங்கனேரி வாயில் என அறியப்படுகிறது. கிழக்கு வாயிலின் இருபுறம் தொங்கும் மாலை மற்றும் போக்களின் ஓவியங்களுடன் கேரள பாணி ஓட்டுகூரையுடன் உள்ளது. கிழக்கு வாயில் வழி உள்ளே நுழைந்ததும் வலதுப்பக்கம் வடகிழக்கு மூலையில் நீராழி என அழைக்க்ப்படும் சதுர வடிவ பக்தர் குளம் உள்ளது. பக்தர் குளம் 8 சென்ட் பரப்பளவில் சுற்றி வடக்கிலும் கிழக்கிலும் தென்னை, வேம்பு முதலிய மரங்கள் உள்ளன. குளத்தை சுற்றியமைந்துள்ள மதில்சுவரில் நாக சிற்பங்கள் அதிகம் காணப்படுகிறது.

அரசடி விநாயகர்: கிழக்கு வாயில் வழியாக கோவில் இருப்பிடத்திற்க்குள் நுழைந்ததும் இடப்புறம் அரச மரத்தின் அடியில் அமைக்க்ப்பட்ட மேடையில் மேற்கு நோக்கி விநாயகர் சிற்பம் உள்ளது. சுற்றிலும் நிறைய நாக சிற்ப்பங்களும் உள்ளன.

கோயில் முன் தோற்றம்: அரசமரத்தின் மேற்க்கு திசையில் கோவில் முன்பகுதி உள்ளது.

வெளி பிரகாரம்
உள் பிரகாரம்
கருவறைகள்

சிற்பங்கள்

கல் சிற்பங்கள்
உலோகச் சிற்பங்கள்
மரச் சிற்பங்கள்

வாகனங்கள்

திருவிழாக்கள்

வரலாறு

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.