நாகபிரகாஷ்

From Tamil Wiki
Revision as of 10:19, 29 June 2022 by Ramya (talk | contribs) (Created page with "நாகபிரகாஷ் (பிறப்பு: ஜூன் 1997) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதையாசிரியர். தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். == பிறப்பு, கல்வி == நாகபிரகாஷ் சேலம் மாவட்டத்தில் ஜூன் 1997இல் வெ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாகபிரகாஷ் (பிறப்பு: ஜூன் 1997) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதையாசிரியர். தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

நாகபிரகாஷ் சேலம் மாவட்டத்தில் ஜூன் 1997இல் வெங்கடேசன், சுகவனேஷ்வரி இணையருக்கு மகனாகப் பிறந்தார். எட்டாம் வகுப்பில் பள்ளி இடைநின்றதால், முழுநேர வேலைக்குச் சென்றார். பைத்தான் நிரலாக்கம், பகுப்பாய்வு முறைகள், அடிப்படை புள்ளியியல் போன்ற இணையப் பட்டயப் படிப்புகளைப் படித்தார். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலம் இளநிலைக் கல்வியாக பொது மேலாண்மை, அமெரிக்க எம்ஐடி வழங்கும் MicroMasters பட்டயங்கள் படித்தார். வெள்ளிக் கொலுசுப் பட்டறைகளில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தார். இணைய முகவங்களிலும் டேட்டா எண்ட்ரி வேலையிலும் பணியாற்றினார். பத்தொன்பதாம் வயதிலிருந்து தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி செய்து வருகிறார். தகவல் தர ஆய்வாளராக உள்ளார். ஆரதிகிருஷ்ணாவை 2021ல் மணந்து கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

முதல் தொகுப்பு ”எரி” யாவரும் பதிப்பக வெளியீடாக ஜனவரி 2020ல் வெளியானது. வலைதளம், இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள், பயணக்கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். ஆதர்ச எழுத்தாளராக அசோகமித்திரன், ஜெயமோகன், கு.அழகிரிசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

  • எரி (சிறுகதைகள் தொகுப்பு)

வெளி இணைப்புகள்

  • நாகபிரகாஷ் வலைதளம்
  • நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை - https://www.jeyamohan.in/129045/