நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 15:00, 6 July 2022 by Ramya (talk | contribs) (Created page with "நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை(1906) தமிழ் நாடக வளர்ச்சியில் பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர். == வாழ்க்கைக் குறிப்பு == நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை 1906இல் தஞ்சாவூரில் சுப்ரய பிள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை(1906) தமிழ் நாடக வளர்ச்சியில் பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை 1906இல் தஞ்சாவூரில் சுப்ரய பிள்ளை, குப்பம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப்பள்ளிக்கூடத்தில் பயின்றார். தந்தை காச்ஸ்டபிள். சகோதரர் கோவிந்தராஜ்பிள்ளை. சிறுவயதிலிருந்தே நாடகம் பார்த்து வளர்ந்ததால் படிப்பை விட நாடகத்தில் நாட்டம் கொண்டார்.

கலை வாழ்க்கை

நாடகப் பயிற்சிக்காக ஹார்மோனியம் நடராஜப்பிள்ளை கம்பெனியில் சேர்ந்தார். பின்னர் ஜகந்நாதஐயர் நாடகக் குழுவில் சேர்ந்தார். இதில் ஐந்து வயதுக்கும் மேற்பட்ட பதினைந்து வயதிற்கும் உட்பட்ட சிறுவர்கள் அதிகம் நடித்ததால் “பாய்ஸ் கம்பெனி” என்று அறியப்பட்டது. இங்கு நாடக நுணுக்கங்கள் கற்றார்.

ஜகந்நாதஐயர் நாடகக் குழுவிலிருந்து வெளியேறி பங்குதாரர்களைச் சேர்த்து ’ஸ்ரீ தேவிபாலவிநோத சபா’ என்ற பெயரில் நாடகக் கம்பெனி தொடங்கினார். முதல் நாடகத்தை தஞ்சையில் அரங்கேற்றினார். தொடர்ந்து திருச்சி, தஞ்சை, திருப்பூரில் நாடகம் அரங்கேற்றினார். அறுபதுக்கும் பேற்பட்ட நாடக உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக கம்பெனி மாறியது. வசனங்கள் மட்டுமல்லாமல் காட்சிக்கும், கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். புராண நாடகங்களை அரங்கேற்றுவதில் ஆர்வம் காட்டினார்.

நடித்த நாடகங்கள்

  • பவளக்கொடி
  • வள்ளி திருமணம்

அரங்கேற்றிய நாடகங்கள்

  • கிருஷ்ணலீலா
  • தசாவதாரம்
  • சம்பூர்ண ராமாயணம்
  • ஏசுநாதர்
  • குமார விஜயம்
  • சக்திலீலா
  • ஞானசெளந்தரி

விருதுகள்

உசாத்துணை