under review

நவநீதப் பாட்டியல்

From Tamil Wiki
Revision as of 08:12, 2 November 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நவநீதப் பாட்டியல்

நவநீதப் பாட்டியல் சிற்றிலக்கய இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் ஒன்று. இதை எழுதியவர் நவநீதநடனார்.

ஆசிரியர்

நவநீதப் பாட்டியலின் ஆசிரியர் நவநீத நடனார். பாட்டியல் நூல்களில் இது அகத்தியர் மரபைச் சேர்ந்தது.

பதிப்பு

உ.வே.சாமிநாதய்யர் இந்நூலின் ஏடுகளை சேகரித்து பிழைதிருத்தி படியெடுத்து வைத்திருந்தார், அச்சேற்ற முடியவில்லை. அவருடைய ஆய்வுக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எஸ்.கலியாணசுந்தர ஐயர், ச.கு. கணபதி ஐயர் இருவரும் 1944-ல் கலாக்ஷேத்ரா ருக்மிணி தேவி அருண்டேலின் நிதியுதவியுடன் இந்நூலை பதிப்பித்தனர்.

நூலமைப்பு

இந்நூல் மூன்று உறுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. இவை,

  1. பொருத்தவியல்
  2. செய்யுண் மொழியியல்
  3. பொது மொழியியல்

கலித்துறை என்னும் பாடல் வகையால் ஆனது. கலித்துறைப் பாட்டியல் என்னும் பெயராலும் குறிப்பிடுவது உண்டு. 108 கலித்துறைப் பாடல்கள் அடங்கியது

உசாத்துணை


✅Finalised Page