நல்லம்மாள்

From Tamil Wiki
Revision as of 20:15, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

நல்லம்மாள் :கொங்கு வேளாளக் கவுண்ட குடியின் தொன்மங்களில் பேசப்படும் பெண்மணி. இவர் தற்கொலை செய்துகொண்டு தெய்வமானார்.

தொன்மம்

நல்லம்மாள் கொங்குவேளாளக் கவுண்டர் சாதியில் செல்லன் கூட்டத் குலத்தில் பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையம் கிராமத்தில் பிறந்தாள். இவளின் உடன் பிறந்தோர் ஏழு ஆண்மக்கள். நல்லம்மாள் பெரியவளாகி திருமணமாகி கருவுற்று பிள்ளைப்பேற்றின்போது வலியால் மிகவும் வேதனைப்பட்டாள். தகவல் அறிந்த நல்லம்மாளின் கணவர் தன்னால்தான் அவள் மிகவும் துயருறுகிறாள் என்று மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த நல்லம்மாள் கணவருடன் உடன்கட்டை ஏறினாள். அப்போது, 'செல்லன் குளத்தில் பிறப்பது ஆணாக இருந்தால் அரசு கட்டி ஆளட்டும். பெண்ணாகப் பிறந்தால் பிழைக்காமல் போகட்டும்’ என்று சொல்லி இறந்து போனாள். இந்த சாபம் செல்லன் குலத்தைப் பாதிக்காமல் இருப்பதற்காக, செல்லன் குலத்தில் பெண் பிறந்தால், அதற்கு நல்லம்மாள் என்று பெயர் வைத்து அதன் பின்னரே தங்கள் விருப்பப் பெயரை வைக்கும் மரபு உள்ளதாகச் சொல்லப்படுகிறது

வழிபாடு

நல்லம்மாள் பிறந்த நல்லியாம்பாளையம் ஊரில் ஒரு பெரிய வேப்பமரம் உள்ளது. அது வழிபடப்படுகிறது.

உசாத்துணை

}

{{Finalised} }