being created

தொ.மு.சி. ரகுநாதன்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 8: Line 8:
தொ.மு.சி. யின் தாத்தா சிதம்பரத் தொண்டைமான் தமிழறிஞர். அவர் `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியுள்ளார். தொ.மு.சி. யின் அப்பா தொண்டைமான் முத்தையா  ஓவியர்; புகைப்படக் கவிஞர். அண்ணன் பாஸ்கர தொண்டைமான்  பேச்சாளர்; எழுத்தாளர்.  பிற்காலத்தில் அவர் மாவட்ட ஆட்சியாளராகவும் இருந்தார். தொண்டைமான் முத்தையாவுக்கும் அவரின் இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக அக்டோபர் 20, 1923இல் திருநெல்வேலியில் பிறந்தார்.  

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==   
   
-

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:தொ.மு.சி. ரகுநாதன்.jpg|thumb|தொ.மு.சி. ரகுநாதன்]]
இவரது முதல் சிறுகதை 1941-ல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிந்தது. முதல் நாவல் ‘புயல்’ 1945-ல் வெளியானது. தமிழகக் கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வை உருக்கமாக விவரிக்கும் ‘பஞ்சும் பசியும்’ இவரது முக்கியமான நாவல்.  

Line 75: Line 75:
# சோவியத் நாட்டுக் கவிதைகள்
# சோவியத் நாட்டுக் கவிதைகள்
# தந்தையின் காதலி
# தந்தையின் காதலி
# தாய் (மாக்சிம் கார்க்கி)
# தாய் (மாக்சிம் கார்க்கியின் ‘தி மதர்’ )
# நான் இருவர்
# நான் இருவர்
# லெனின் கவிதாஞ்சலி  
# லெனின் கவிதாஞ்சலி (விளடிமிர் இலிச் லெனின் ‘மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா’ )

== விருதுகள், பரிசுகள் ==
== விருதுகள், பரிசுகள் ==
Line 84: Line 84:
# சோவியத் லேண்ட் நேரு விருது
# சோவியத் லேண்ட் நேரு விருது
# தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு
# தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு
# பாரதி விருது
# பாரதி விருது - 2001

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[[Category: Tamil Content]]
[[Category: Tamil Content]]

Revision as of 17:49, 29 January 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

This page is being created by User:Dr.P.Saravanan

தொ. மு. சிதம்பர ரகுநாதன்

தொ.மு.சி. ரகுநாதன் (அக்டோபர் 20, 1923 - டிசம்பர் 31, 2001) ‘தொ.மு.சி’ என்று பரவலாக அறியப்பட்டார். இயற்பெயர் தொ. மு. சிதம்பர ரகுநாதன். இவர் கம்யூனிஸ்ட் எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், விமர்சகர். இவரின் ‘பஞ்சும் பசியும்’ (1951) நாவல் தமிழ் நாவல்களில் முதன் முதலில் பிறமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகக் கருதப்படுகிறது. இதனை கமில் சுவலபில் ‘செக்’ மொழியில் மொழிபெயர்த்தார். தொ.மு.சி. ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். இவர், ‘சாந்தி’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களைத் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகம் செய்துவைத்தார். புதுமைப்பித்தன் இவரைத் ‘தன் வாரிசு’ என்று குறிப்பிட்டார். இவரின் படைப்புகளில் முற்போக்குச் சிந்தனைகள் கலைநோக்குடன் அல்லாமல் பிரச்சாரத் தன்மையில் வெளிப்பட்டிருக்கும். இவரது ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

பிறப்பு, கல்வி

தொ.மு.சி. யின் தாத்தா சிதம்பரத் தொண்டைமான் தமிழறிஞர். அவர் `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியுள்ளார். தொ.மு.சி. யின் அப்பா தொண்டைமான் முத்தையா ஓவியர்; புகைப்படக் கவிஞர். அண்ணன் பாஸ்கர தொண்டைமான் பேச்சாளர்; எழுத்தாளர்.  பிற்காலத்தில் அவர் மாவட்ட ஆட்சியாளராகவும் இருந்தார். தொண்டைமான் முத்தையாவுக்கும் அவரின் இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக அக்டோபர் 20, 1923இல் திருநெல்வேலியில் பிறந்தார்.

தனிவாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

தொ.மு.சி. ரகுநாதன்

இவரது முதல் சிறுகதை 1941-ல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிந்தது. முதல் நாவல் ‘புயல்’ 1945-ல் வெளியானது. தமிழகக் கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வை உருக்கமாக விவரிக்கும் ‘பஞ்சும் பசியும்’ இவரது முக்கியமான நாவல்.

இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

தொ.மு.சி. புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்குப் பின், அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  1. நீயும் நானும்
  2. ஷணப்பித்தம்
  3. சேற்றிலே மலர்ந்த செந்தாமரை
  4. ரகுநாதன் கதைகள்
கவிதை தொகுப்புகள்
  1. ரகுநாதன் கவிதைகள்
  2. கவியரங்கக் கவிதைகள்
  3. காவியப் பரிசு
  4. திருநெல்வேலி காந்திமதியம்மை பேரில் கவித்துறை அந்தாதி
நாவல்கள்
  1. புயல்
  2. பஞ்சும் பசியும்
  3. முதலிரவு (தமிழ்நாட்டரசால் தடை செய்யப்பட்டது)
  4. கன்னிகா
நாடகங்கள்
  1. சிலை பேசிற்று
  2. மருது பாண்டியன்
வாழ்க்கை வரலாறு
  1. புதுமைப்பித்தன் வரலாறு
ஆய்வு நூல்
  1. இளங்கோ அடிகள் யார்?
இலக்கிய விமர்சனம்
  1. அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
  2. கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)
  3. சமுதாய இலக்கியம்
  4. பாஞ்சாலி சபதம் - உறைபொருளும் மறைபொருளும்
  5. பாரதி - சில பார்வைகள்
  6. பாரதியும் ஷெல்லியும்
  7. பாரதி - காலமும் கருத்தும்
  8. புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத் தனங்களும்
  9. விடுதலை வீரர்கள் ஐவர்
மொழிபெயர்ப்பு நூல்கள்
  1. இதயத்தின் கட்டளை
  2. சந்திப்பு
  3. சோவியத் நாட்டுக் கவிதைகள்
  4. தந்தையின் காதலி
  5. தாய் (மாக்சிம் கார்க்கியின் ‘தி மதர்’ )
  6. நான் இருவர்
  7. லெனின் கவிதாஞ்சலி (விளடிமிர் இலிச் லெனின் ‘மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா’ )

விருதுகள், பரிசுகள்

  1. சாகித்திய அகாதமி விருது - 1983
  2. சோவியத் லேண்ட் நேரு விருது
  3. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு
  4. பாரதி விருது - 2001

உசாத்துணை