under review

திவாகர வாமன முனிவர்

From Tamil Wiki
Revision as of 14:45, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

திவாகர வாமன முனிவர்: ( பொ.யு. 14-ஆம் நூற்றாண்டு) சமண முனிவர். ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசிக்கு உரை எழுதியவர்.

காலம்

திவாகர வாமன முனிவர் வாமனாச்சாரியார் என்றும், மல்லி சேனாச்சாரியார் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவருடைய மாணவர் புஷ்பசேனர் முனிவர் அல்லது புஷ்பசேனாச்சாரியார். திவாகர வாமன முனிவர் விஜயநகரப் பேரரசை நிறுவிய ஹரிஹரர் - புக்கர் இருவரில் புக்கரின் படைத்தலைவரான இருகப்ப நாயக்கரின் ஆசிரியராக இருந்தார். ஆகவே இவருடைய காலம் பொயு 14-ஆம் நூற்றாண்டு என்று கூறலாம். இருகப்ப நாயக்கரும் அவருடைய தந்தை சைசப்ப நாயக்கரும் ஹரிஹரரின் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்று ஆய்வாளர் டாக்டர் ஹல்ட்ஷ் கூறுகிறார்.

நூல்கள்

திவாகர வாமன முனிவர் உபயபாஷா கவிச்சக்கரவர்த்தி என அழைக்கப்படுகிறார். சம்ஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய இரண்டிலும் தேர்ச்சி கொண்டிருந்தார். மேருமந்தர புராணத்தில் அதை இயற்றியவர் திவாகர வாமன முனிவர் என்றும், அவரே நீலகேசிக்கு உரை எழுதியவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. சமணநூலான நீலகேசிக்கு அவர் உரை எழுதினார்.

உசாத்துணை


✅Finalised Page