under review

திரௌபதைக் குறம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
Line 10: Line 10:
இவர் ஒரு புனைவு  என்றும் அட்டாவதானம் வீராசாமி செட்டியாரே அம்மானைப் பதிப்புகளில் புகழேந்திப் புலவரின் பெயர் சேர்த்தார்  என்றும் தமிழ்க் கதைப்பாடல்களைப் பற்றி ஆங்கிலத்தில் விரிவான நூல் எழுதிய மு.அருணாசலம் சொல்கிறார். செட்டியார் தம் காலத்தில் வழங்கிய வாய்மொழிக் கதைகளை புகழேந்திப் புலவரின் பெயரில் சேர்த்துச் சொன்ன தகவல்களை பீ.ஆர்.என் சன்ஸ் (B.R.N Sons) போன்ற பதிப்பாளர்கள் சொன்ன தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

== திரௌபதி குறம் ==
== திரௌபதி குறம் ==
திரௌபதி குறம் [[குறம்]] என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது.
பாண்டவர்களின் வனவாசம் நடந்துக் கொண்டிருந்த போது திரௌபதி ஒரு நாள் தருமரிடம், "நாயகனே நான் அத்தினாபுரம் நகரைப் பார்க்க வேண்டுமென ஆசையாய் உள்ளது. எனக்கு விடைத் தாருங்கள்" என முறையிடுகிறாள். தன் மனைவி சொல்வதைக் கேட்டு திடுக்கிட்ட தருமர், "ஐயையோ வேண்டாம்! பாம்புக் கொடியுடையோன் உன் வஸ்திரத்தை உரித்த காட்சியை நான் இன்னும் மறக்கவில்லை. அப்படிப் பட்டவன் இருக்கும் இடத்திற்கா நீ போகத் துணிகிறாய்" எனக் கேட்கிறான். திரௌபதியோ தருமர் பேசும் போது இடைமறித்து, "நான் இப்போதிற்கு இவ்வேடத்தில் போக மாட்டேன் நாயகனே. மலைக்குறத்தியாக வேடம் தரித்துப் போவேன். எனக்கு விடை தாருங்கள்" என்கிறாள். அவளது பேச்சை மீற முடியாமல் அரைமனதுடன், "பார்த்து கவனமாக போய் வா" என சம்மதம் தருகிறார் தருமர்.  

Latest revision as of 04:02, 6 May 2024

Thirovbhadhi kuram.jpg

இது தமிழ்நாட்டில் வழக்கில் உள்ள ஒரு நாட்டுப்புறக் கதை. பாண்டவர்கள் பத்து ஆண்டுகள் வனவாசம் சென்ற போது திரௌபதி குறத்தியாக வேடமணிந்து அஸ்தினாபுரியைக் காணச் சென்றதாக அமைந்த மகாபாரத நாட்டுப்புறக் கதைப்பாடல் திரௌபதி குறம். தருமனிடம் விடைபெற்றுக் கொண்டு அஸ்தினாபுரம் சென்று அரண்மனையில் குறத்தி போல் குறி சொல்வதாக அமையும் இந்த நாட்டுப்புறப் பாடல். குறத்தி கெட்ட குறி சொல்ல, அரண்மனை பெண்கள் அவளை குறித்து துரியோதனனிடம் சொல்கின்றனர். அவள் குறியை சொல்வதை நிறுத்தாமல் பாட துரியோதனனின் அவள் மீது சினம் கொண்டு சிறை வைப்பது, அவளை மீட்க அர்ஜூனன் குறவன் வேடம் அணிந்து வருவதுமாக அமையும் இக்கதைப்பாடல்.

திரௌபதி குறத்தில் குற்றாலக் குறவஞ்சியின் சாயல் செல்வாக்கு உள்ளது. குறத்தி குறி கூறல் குறவ சாதியின் வழக்கம். அவர்கள் உணவு முறை, ஆடை அணியும் முறை, திறமை பற்றியெல்லாம் இந்த அம்மானை பேசுகிறது.

பதிப்பு வரலாறு

திரௌபதிக் குறம் கருணானந்த சுவாமி என்பவரால் 1870-ல் வெளியிடப்பட்டது. இந்த அம்மானை 2184 வரிகள் கொண்டது.

ஆசிரியர்

இந்த பாடலை பாடியது புகழேந்திப் புலவர் என்னும் வாய்மொழி மரபு உண்டு. இவர் 13-ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என தன் "இலக்கிய வரலாறு" நூலில் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். ஆய்வாளர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் அதனை ஒத்துக் கொள்கிறார். ஆரிய சேகரன் என்னும் பாண்டிய நாட்டு படைத்தலைவன் காலத்தவர் புகழேந்தி என்பதற்கும் சான்று உண்டு.

இவர் ஒரு புனைவு என்றும் அட்டாவதானம் வீராசாமி செட்டியாரே அம்மானைப் பதிப்புகளில் புகழேந்திப் புலவரின் பெயர் சேர்த்தார் என்றும் தமிழ்க் கதைப்பாடல்களைப் பற்றி ஆங்கிலத்தில் விரிவான நூல் எழுதிய மு.அருணாசலம் சொல்கிறார். செட்டியார் தம் காலத்தில் வழங்கிய வாய்மொழிக் கதைகளை புகழேந்திப் புலவரின் பெயரில் சேர்த்துச் சொன்ன தகவல்களை பீ.ஆர்.என் சன்ஸ் (B.R.N Sons) போன்ற பதிப்பாளர்கள் சொன்ன தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

திரௌபதி குறம்

திரௌபதி குறம் குறம் என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது.

பாண்டவர்களின் வனவாசம் நடந்துக் கொண்டிருந்த போது திரௌபதி ஒரு நாள் தருமரிடம், "நாயகனே நான் அத்தினாபுரம் நகரைப் பார்க்க வேண்டுமென ஆசையாய் உள்ளது. எனக்கு விடைத் தாருங்கள்" என முறையிடுகிறாள். தன் மனைவி சொல்வதைக் கேட்டு திடுக்கிட்ட தருமர், "ஐயையோ வேண்டாம்! பாம்புக் கொடியுடையோன் உன் வஸ்திரத்தை உரித்த காட்சியை நான் இன்னும் மறக்கவில்லை. அப்படிப் பட்டவன் இருக்கும் இடத்திற்கா நீ போகத் துணிகிறாய்" எனக் கேட்கிறான். திரௌபதியோ தருமர் பேசும் போது இடைமறித்து, "நான் இப்போதிற்கு இவ்வேடத்தில் போக மாட்டேன் நாயகனே. மலைக்குறத்தியாக வேடம் தரித்துப் போவேன். எனக்கு விடை தாருங்கள்" என்கிறாள். அவளது பேச்சை மீற முடியாமல் அரைமனதுடன், "பார்த்து கவனமாக போய் வா" என சம்மதம் தருகிறார் தருமர்.

அழகிய திரௌபதி மலைக்குறத்தி வேடம் பூண்டாள். குறத்திக்கு தன்னுடன் எடுத்துச் செல்ல மாயக்கூடை வேண்டும். அதனை எண்ணியதும் திரௌபதி கிருஷ்ணனை நோக்கி,

ராவணனை உடல் பிளந்து சீதை சிறை மீட்பீர்
அன்றொரு நாள் துரியோதனன் சபைதனிலே நானும்
அலரும்போ தெந்தனுக்கு வந்து மிக அருளி
இசைவான குறக்கூடை எனக்கு தர வேணும்
நினைத்த குறி நானுரைக்க நல்ல செம்பொன்கூடை
நீலவர்ணமாயவரே எனக்குத் தரவேணும்

என வரம் கேட்டு பாடுகிறாள். காற்றில் வந்த திரௌபதியின் குரல் கேட்டு கிருஷ்ணன் உடனே அவளுக்கு கூடையை வழங்குகிறான். அவள் முன் வந்து விழுந்த கூடையை எடுத்துக் கொண்டு அஸ்தினாபுரம் விரைகிறாள் திரௌபதி. அங்கே,

எங்கள் அது குறச்சாதி ஏச்சான சாதி
எங்களுக்கு மேலான அரசர்களேடுகளும்
வெள்ளெலி கறி சமைத்து விருந்துகளைச் செய்வோம்
விஸ்தார ஆமையுடன் கீரிப்பிள்ளை தின்போம்
கொக்கு நாரையுடன் அடித்துக் கொண்டு கறி சமைப்போம்
கொண்டு முசல்தான் பிடித்து குழம்புகள் செய்வோம்
பெருச்சாளி தான் பிடித்து பொரியலாவது செய்வோம்
பாம்பு தின்போம் பல்லி திம்போம் பச்சோணான் அருவோம்

என்று தெருவழியே பாடிக் கொண்டு போகிறாள்.

குறத்தி துரியோதனனின் இருக்கும் வீதி தாண்டி கர்ணன், துச்சாதனன் வாழும் வீதி தாண்டி பாடிக் கொண்டே செல்கிறாள். வீதியில் நின்று எல்லோரும் அவளை வேடிக்கைப் பார்க்கிறார்கள். அவள் அழகைக் கண்டு எல்லோரும் மெய்மறந்து நிற்கின்றனர். குறத்தியிடம் வீதியில் நின்றவர்கள், "குறத்திப் பெண்ணே உன் ஊர் எது?" என வினவுகின்றனர்.

அதற்கு அவள்,

மூவர் தமிழ் பாடு தமிழ் எங்களது நாடு
நீலமலை நிமலமலை எங்களது நாடு
நித்த நித்தம் குளம்பாடி திரிவமடி நாங்கள்
பச்சமலை பவளமலை எங்களது நாடு

என்று சொல்லிக் கொண்டே போகிறாள்.

கௌரவர்கள் தெரு வழியே பாடிக் கொண்டுப் போகிறாள். அவளைப் பார்த்த துரியோதனனின் மனைவி அவளை அழைத்து குறிக் கேட்கிறாள். குறத்தி தன் முன்னே நெல் பரப்பிக் குறி சொல்கிறாள், "அரசியே! பெண்ணே! இந்த நாட்டில் பெரும் போர் ஒன்று வரப் போகிறது. போரில் கௌரவர்கள் பலர் மடிவார்கள். அந்த போருக்கு பின்னே பாண்டவர்கள் இந்நாட்டை ஆள்வார்கள்" எனச் சொன்னது அதனைக் கேட்டு துரியோதனனின் மனைவி கோபம் கொள்கிறாள். குறத்தி அதனை அறிந்து நிறுத்தாமல் அஸ்தினாபுரிக்கு வரப்போகும் துர்சகுனங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே போகிறாள். குறத்தியின் பேச்சு அரண்மனைப் பெண்கள் அனைவருக்கும் கோபத்தை வரவழைக்கிறது. அவர்கள் சென்று துரியோதனனிடம் நடந்தைச் சொல்கின்றனர். அரவுக் கொடியோன் குறத்தியை அழைத்தான்.

சபை முன்னே, "இப்போது நீ குறி சொல்" எனக் கேட்டான். குறத்தி நீட்டி முழங்கிப் பாட ஆரம்பித்தாள்.

ஐவருக்கும் உகந்ததொரு அபிஷேக பத்தினி
ஆரணங்கு திரௌபதையை சபைதனிலே இழுத்தீர்
பண்ணாத பங்கமெல்லாம் பண்ணி வைத்தார் சபையில்
கட்டழகி திரௌபதையாள் மனங்கலங்கி அப்போ
கர்த்தவர் மாயவரை கைதொழுது நின்றாள்
பத்தினியாள் திரௌபதைக்கு மாளாத்துகில்கள்
வளருதென்று சபைதனிலே மெச்சி நின்றார் பெரியோர்
பார் சபைகளில் விரித்தக் கூந்தலடியம்மை
பதினெட்டாம் நாளையிலே பிடைபொருதும் சண்டை
நூற்றுவர் பூமுடியை நொறுங்கடித்த பின்பு அன்றாட
முடியும் ஐவருட சபதம்
பத்தினியாள் சாபத்தினால் பாரதப்போர் தன்னில்
பஞ்சவர் கையாலே மாண்டிடுவாள் அம்மே

என்று பாடி முடித்தாள்.

அவள் பாடியதும் துரியோதனனுக்குத் தாங்க முடியாத கோபம் ஏற்படுகிறது. இந்தக் குறத்திக்கு கைகால்களில் விலங்கிடுங்கள் என ஆணையிடுகிறான். குறத்தி அதன்பிறகு நிறுத்தாமல் அவன் அழிவைப் பாடிக் கொண்டிருக்கிறாள். அவனோ அவள் அசைய முடியாதபடி விலங்கை இறுக்கிப் பூட்டுங்கள் என்கிறான்.

திரௌபதி சிறைப்பட்ட செய்தி பாண்டவர்களை அடைகிறது. தருமர் அர்ஜூனனை அழைத்து, "நீ குறவன் வேடமணிந்து துரியோதனனிடம் இரந்து வேண்டி திரௌபதியை மீட்டு வா" என்கிறான். அண்ணன் சொல் பணிந்து அர்ஜூனனும் குறவன் வேடமணிந்து அஸ்தினாபுரம் நகர் வழியே தன் மனைவியைக் காணவில்லை என இரந்து பாடிச் சென்றான்.

மாலையிட்ட நாள் முதலாய எனைப் பிரிந்ததில்லை
மாதுநல்லாள் வீடுவந்து வாரமொன்பதாச்சே
எட்டொருநாள் ஆச்சுதம்மா என்வீடு வந்து
கொம்பனையாள் வீடுவரவில்லை என்றுரைத்தான்
குடிப்பழுது வந்திடுமே குறக்கூட்டம் தனக்கு
ஏழான சாதியற்குள் கீழான சாதி

என்றவன் உரைக்க. அதனைக் கேட்டு அரண்மனையில் அமைச்சரும் மற்றவர்களும் குறத்தி விலங்கை அகற்றி அனுப்புமாறு ஆணையிடுகிறார்கள். துரியோதனனும் அதன்படியே செய்தான். அர்ஜூனனும், திரௌபதியை அழைத்துக் கொண்டு வனம் சென்றான்.

உசாத்துணை

  • அர்ச்சுனனின் தமிழ் காதலிகள், ஆசிரியர்: அ.கா.பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், 2012

✅Finalised Page