being created

திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்.png|thumb|திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்]]
[[File:திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்.png|thumb|திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்]]
திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் (திரு.வி.க) (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம்) (ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953) தமிழறிஞர், மேடைப் பேச்சாளர்.
திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் (திரு.வி.க) (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம்) (ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953) தமிழறிஞர், சைவ அறிஞர், தொழிற்சங்க முன்னோடி, இதழியல் முன்னோடி, பேச்சாளர், தனித்தமிழியாக்க முன்னோடிகளில் ஒருவர். தமிழ் மறுமலர்ச்சியின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக திரு.வி.க மதிப்பிடப்படுகிறார்
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம்(தற்போது தண்டலம்) சிற்றூரில் விருத்தாசல முதலியார், சின்னம்மாள் இணையருக்கு ஆறாவது மகனாக ஆகஸ்ட் 26, 1883-ல் பிறந்தார். தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியராகப் பணியாற்றினார். வணிகத்தில் ஈடுபட்டார். ஆசிரியராகத் திருவாரூரில் பணி செய்தபோது கலியாணசுந்தரமும் அங்கேயே வளர்ந்தார். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். பச்சையம்மாள் இறந்த பின் சின்னம்மாளை மணந்தார். சின்னம்மாளுக்கு நான்கு ஆண் மக்கள், நான்கு பெண் மக்கள்.

தொடக்கத்தில் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் ராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் பயின்றார். 1894-ல் வெஸ்லி பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் முடங்கியது. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. 1904-ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அதன்பின் பள்ளிப்படிப்பு நின்றது.
===== பெற்றோர் =====
திரு.வி.கவின் தந்தை பெயர் திருவாரூர் விருத்தாசல முதலியார். அவர்களின் பூர்வீகம் திருவாரூர். விருத்தாசல முதலியாரின் அன்னை பெயர் கனகம்மாள். விருத்தாசல முதலியார் இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். இராமநாடக ஆசிரியர், இராமநாடக நடத்துநர். தமிழ்ப்பள்ளி ஒன்றை தொடங்கி அங்கே ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை இராயப்பேட்டையில் அர்சிமண்டி ஒன்றை சிலகாலம் நடத்தினார். செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வாரும் குத்தகைதாரராகச் செயல்பட்டார். பெரும்பொருள் ஈட்டினார்.  

உவெசுலி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்றார். கதிரவேற்பிள்ளை மறைந்த பின் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களைப் பாடம் கேட்டார்.
விருத்தாசல முதலியாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பச்சையம்மாள். இரண்டாம் மனைவி சின்னம்மாள். பச்சையம்மாளுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். பச்சையம்மாள் மறைந்தபின் விருத்தாசல முதலியார் சின்னம்மாளை மணந்தார். சின்னம்மாள் எட்டு குழந்தைகளைப் பெற்றார். அதில் ஐந்தாவது குழந்தை திரு.வி. உலகநாத முதலியார். ஆறாவது குழந்தை திரு.வி.கல்யாணசுந்தர முதலியார். 
 
===== பிறப்பு =====
விருத்தாசல முதலியார் சென்னைக்கு அருகே உள்ள குன்றத்தூர் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வாருவதற்கான ஒப்பந்தத்தை பிரித்தானிய அரசிடமிருந்து பெற்றார். அந்தப் பணிக்காக  காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம்(தற்போது தண்டலம்) சிற்றூரில் குடியிருந்தார்.  அப்போது விருத்தாசல முதலியார், சின்னம்மாள் இணையருக்கு ஆறாவது மகனாக ஆகஸ்ட் 26, 1883-ல் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் பிறந்தார்.
 
விருத்தாசல முதலியார் முதலியார் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். பச்சையம்மாள் இறந்த பின் சின்னம்மாளை மணந்தார். சின்னம்மாளுக்கு நான்கு ஆண் மக்கள், நான்கு பெண் மக்கள். ஐந்தாவது மகனாகிய திரு.வி.உலகநாத முதலியாரும் ஆறாவது குழந்தையான திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரும் இறுதிவரை இணைந்தே வாழ்ந்தார்கள்.
 
===== கல்வி =====
 
====== பள்ளிக்கல்வி ======
கல்யாணசுந்தர முதலியார் தொடக்கத்தில் தந்தையிடம் கல்வி பயின்றார். 1890ல் விருத்தாசல முதலியார் தன் குழந்தைகளின் கல்வியின்பொருட்டு சென்னையில் ராயப்பேட்டையில் குடியேறினார்.  திரு.வி.க ஆரியன் தொடக்கப் பள்ளியில் பயின்றார். அப்பள்ளியில் கருத்துவேறுபாடும் பிளவும் உருவாகவே 1894-ல் வெஸ்லி பள்ளியில் (உவெசுலி பள்ளி) நான்காம் வகுப்பில் சேர்ந்தார்.
 
மிகவும் பருமனாக இருந்த கல்யாணசுந்தர முதலியாருக்கு ஒரு சாமியார் அளித்த சித்த மருந்தை விருத்தாசல முதலியார் அளித்ததாகவும், அந்த மருந்துடன் செய்யவேண்டிய கடுமையான பத்தியமுறைகளை கடைப்பிடிக்க முடியாமல் திருவிகவின் வலது கையும் காலும் முடங்கியதாகவும் அவருடைய வரலாற்றை எழுதிய அவருடைய நெடுங்கால உதவியாளர் சக்திதாசன் சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். அப்போது திரு.வி.கவுக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தியவர் தலித் சிந்தனையாளரான [[அயோத்திதாச பண்டிதர்]].
 
உடல்நிலை மேம்பட்ட பின் 1908-ஆம் ஆண்டில் மீண்டும் வெஸ்லி பள்ளியில் சேர்ந்தார். வெஸ்லி பள்ளியில் டேவிட் தேவதாஸ் என்னும் ஆசிரியரிடம் ஆங்கிலம் பயின்றார். [[நா.கதிரைவேற் பிள்ளை]] வெஸ்லி பள்ளியின் தமிழாசிரியராக வந்தார். அவரிடம் தமிழ் கற்றார். கதிரைவேற்பிள்ளைக்கும் வடலூர் [[இராமலிங்க வள்ளலார்]] ஆதரவாளர்களுக்கும் இடையே வழக்கு ([[அருட்பா மருட்பா விவாதம்|அருட்பா மருட்பா]] விவாதம்) நிகழ்ந்தபோது தன் ஆசிரியர் கதிரைவேற்பிள்ளைக்காக நீதிமன்றத்தில் சாட்சியம் சொன்னார். அதன்பொருட்டு நீதிமன்றம் செல்லவேண்டியிருந்தமையால் தேர்வு எழுதுவதற்கான வருகைப்பதிவு இருக்கவில்லை. பள்ளி நிர்வாகம் திருவிகவை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அத்துடன் கல்வி நின்றது
 
====== தமிழ்க்கல்வி ======
பள்ளிக்கல்வி நின்றபின் கதிரைவேற்பிள்ளையிடம் தொடர்ச்சியாக தமிழ் கற்று வந்தார். கதிரைவேற்பிள்ளை மறைந்த பின் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களைப் பாடம் கேட்டார். இராயப்பேட்டை சிதம்பர முதலியாரிடம் திருக்குறள் கற்றார். மயிலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தேவப்பிரகாசம் பண்டிதரிடம் கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்ற நூல்களைப் பயின்றார்.  இராயப்பேட்டை குகானந்த நிலையம் என்னும் இடத்தில் வந்து தங்கும் வழக்கம் கொண்டிருந்த  [[மறைமலையடிகள்]] சிலகாலம் திரு.வி.கவுக்கு தமிழ்நூல்களைப் பாடம் சொன்னார்.
 
====== ஆங்கிலக் கல்வி ======
மதராஸ் டைம்ஸ் என்னும் ஆங்கில நாளிதழின் ஆசிரியரான கிளின்பார்லோ என்னும் அறிஞர் நடத்திவந்த ஷேக்ஸ்பியர் கிளப் என்னும் அமைப்பின் உறுப்பினராகி திருவிக ஆங்கில இலக்கியங்களைக் கற்றார். குகானந்தநிலையத்திற்கு வந்து தங்கும் சச்சிதானந்தம் பிள்ளை என்பவரிடமிருந்து மேலைநாட்டு அரசியல், சமூகவியல் சிந்தனைகளை கற்றார்.
 
====== மதக்கல்வி ======
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளிடம் சைவசித்தாந்தப் பாடங்களைக் கற்றார். மருவூர் கணேச சாஸ்திரி, கடலங்குடி நடேச சாஸ்திரி ஆகியோரிடம் சம்ஸ்கிருத நூல்களை பாடம் கேட்டார். புதுப்பேட்டையில் வாழ்ந்த சமண ஆசிரியர்களான பார்சுவநாத நயினார், சக்ரவர்த்தி நயினார் ஆகியோரிடம் சமணநூல்களை கற்றார். அயோத்திதாச பண்டிதர் நடத்திய சாக்கிய பௌத்த சங்கம் என்னும் அமைப்பில் இருந்து பௌத்த தத்துவங்களைப் பயின்றார். அப்துல் கரீம் என்னும் இஸ்லாமிய அறிஞரிடம் இஸ்லாமிய மார்க்க கருத்துக்களை பயின்றார்.
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் கமலாம்பிகையை 1912-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். 1918-ல் மனைவி, பிள்ளைகளை இழந்தார்.
திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் கமலாம்பிகையை 1912-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். 1918-ல் மனைவி, பிள்ளைகளை இழந்தார்.

Revision as of 22:29, 1 April 2024

திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் (திரு.வி.க) (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம்) (ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953) தமிழறிஞர், சைவ அறிஞர், தொழிற்சங்க முன்னோடி, இதழியல் முன்னோடி, பேச்சாளர், தனித்தமிழியாக்க முன்னோடிகளில் ஒருவர். தமிழ் மறுமலர்ச்சியின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக திரு.வி.க மதிப்பிடப்படுகிறார்

பிறப்பு, கல்வி

பெற்றோர்

திரு.வி.கவின் தந்தை பெயர் திருவாரூர் விருத்தாசல முதலியார். அவர்களின் பூர்வீகம் திருவாரூர். விருத்தாசல முதலியாரின் அன்னை பெயர் கனகம்மாள். விருத்தாசல முதலியார் இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். இராமநாடக ஆசிரியர், இராமநாடக நடத்துநர். தமிழ்ப்பள்ளி ஒன்றை தொடங்கி அங்கே ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை இராயப்பேட்டையில் அர்சிமண்டி ஒன்றை சிலகாலம் நடத்தினார். செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வாரும் குத்தகைதாரராகச் செயல்பட்டார். பெரும்பொருள் ஈட்டினார்.

விருத்தாசல முதலியாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பச்சையம்மாள். இரண்டாம் மனைவி சின்னம்மாள். பச்சையம்மாளுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். பச்சையம்மாள் மறைந்தபின் விருத்தாசல முதலியார் சின்னம்மாளை மணந்தார். சின்னம்மாள் எட்டு குழந்தைகளைப் பெற்றார். அதில் ஐந்தாவது குழந்தை திரு.வி. உலகநாத முதலியார். ஆறாவது குழந்தை திரு.வி.கல்யாணசுந்தர முதலியார்.

பிறப்பு

விருத்தாசல முதலியார் சென்னைக்கு அருகே உள்ள குன்றத்தூர் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வாருவதற்கான ஒப்பந்தத்தை பிரித்தானிய அரசிடமிருந்து பெற்றார். அந்தப் பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம்(தற்போது தண்டலம்) சிற்றூரில் குடியிருந்தார். அப்போது விருத்தாசல முதலியார், சின்னம்மாள் இணையருக்கு ஆறாவது மகனாக ஆகஸ்ட் 26, 1883-ல் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் பிறந்தார்.

விருத்தாசல முதலியார் முதலியார் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். பச்சையம்மாள் இறந்த பின் சின்னம்மாளை மணந்தார். சின்னம்மாளுக்கு நான்கு ஆண் மக்கள், நான்கு பெண் மக்கள். ஐந்தாவது மகனாகிய திரு.வி.உலகநாத முதலியாரும் ஆறாவது குழந்தையான திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரும் இறுதிவரை இணைந்தே வாழ்ந்தார்கள்.

கல்வி
பள்ளிக்கல்வி

கல்யாணசுந்தர முதலியார் தொடக்கத்தில் தந்தையிடம் கல்வி பயின்றார். 1890ல் விருத்தாசல முதலியார் தன் குழந்தைகளின் கல்வியின்பொருட்டு சென்னையில் ராயப்பேட்டையில் குடியேறினார். திரு.வி.க ஆரியன் தொடக்கப் பள்ளியில் பயின்றார். அப்பள்ளியில் கருத்துவேறுபாடும் பிளவும் உருவாகவே 1894-ல் வெஸ்லி பள்ளியில் (உவெசுலி பள்ளி) நான்காம் வகுப்பில் சேர்ந்தார்.

மிகவும் பருமனாக இருந்த கல்யாணசுந்தர முதலியாருக்கு ஒரு சாமியார் அளித்த சித்த மருந்தை விருத்தாசல முதலியார் அளித்ததாகவும், அந்த மருந்துடன் செய்யவேண்டிய கடுமையான பத்தியமுறைகளை கடைப்பிடிக்க முடியாமல் திருவிகவின் வலது கையும் காலும் முடங்கியதாகவும் அவருடைய வரலாற்றை எழுதிய அவருடைய நெடுங்கால உதவியாளர் சக்திதாசன் சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். அப்போது திரு.வி.கவுக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தியவர் தலித் சிந்தனையாளரான அயோத்திதாச பண்டிதர்.

உடல்நிலை மேம்பட்ட பின் 1908-ஆம் ஆண்டில் மீண்டும் வெஸ்லி பள்ளியில் சேர்ந்தார். வெஸ்லி பள்ளியில் டேவிட் தேவதாஸ் என்னும் ஆசிரியரிடம் ஆங்கிலம் பயின்றார். நா.கதிரைவேற் பிள்ளை வெஸ்லி பள்ளியின் தமிழாசிரியராக வந்தார். அவரிடம் தமிழ் கற்றார். கதிரைவேற்பிள்ளைக்கும் வடலூர் இராமலிங்க வள்ளலார் ஆதரவாளர்களுக்கும் இடையே வழக்கு (அருட்பா மருட்பா விவாதம்) நிகழ்ந்தபோது தன் ஆசிரியர் கதிரைவேற்பிள்ளைக்காக நீதிமன்றத்தில் சாட்சியம் சொன்னார். அதன்பொருட்டு நீதிமன்றம் செல்லவேண்டியிருந்தமையால் தேர்வு எழுதுவதற்கான வருகைப்பதிவு இருக்கவில்லை. பள்ளி நிர்வாகம் திருவிகவை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அத்துடன் கல்வி நின்றது

தமிழ்க்கல்வி

பள்ளிக்கல்வி நின்றபின் கதிரைவேற்பிள்ளையிடம் தொடர்ச்சியாக தமிழ் கற்று வந்தார். கதிரைவேற்பிள்ளை மறைந்த பின் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களைப் பாடம் கேட்டார். இராயப்பேட்டை சிதம்பர முதலியாரிடம் திருக்குறள் கற்றார். மயிலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தேவப்பிரகாசம் பண்டிதரிடம் கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்ற நூல்களைப் பயின்றார். இராயப்பேட்டை குகானந்த நிலையம் என்னும் இடத்தில் வந்து தங்கும் வழக்கம் கொண்டிருந்த மறைமலையடிகள் சிலகாலம் திரு.வி.கவுக்கு தமிழ்நூல்களைப் பாடம் சொன்னார்.

ஆங்கிலக் கல்வி

மதராஸ் டைம்ஸ் என்னும் ஆங்கில நாளிதழின் ஆசிரியரான கிளின்பார்லோ என்னும் அறிஞர் நடத்திவந்த ஷேக்ஸ்பியர் கிளப் என்னும் அமைப்பின் உறுப்பினராகி திருவிக ஆங்கில இலக்கியங்களைக் கற்றார். குகானந்தநிலையத்திற்கு வந்து தங்கும் சச்சிதானந்தம் பிள்ளை என்பவரிடமிருந்து மேலைநாட்டு அரசியல், சமூகவியல் சிந்தனைகளை கற்றார்.

மதக்கல்வி

பாம்பன் குமரகுருதாச சுவாமிகளிடம் சைவசித்தாந்தப் பாடங்களைக் கற்றார். மருவூர் கணேச சாஸ்திரி, கடலங்குடி நடேச சாஸ்திரி ஆகியோரிடம் சம்ஸ்கிருத நூல்களை பாடம் கேட்டார். புதுப்பேட்டையில் வாழ்ந்த சமண ஆசிரியர்களான பார்சுவநாத நயினார், சக்ரவர்த்தி நயினார் ஆகியோரிடம் சமணநூல்களை கற்றார். அயோத்திதாச பண்டிதர் நடத்திய சாக்கிய பௌத்த சங்கம் என்னும் அமைப்பில் இருந்து பௌத்த தத்துவங்களைப் பயின்றார். அப்துல் கரீம் என்னும் இஸ்லாமிய அறிஞரிடம் இஸ்லாமிய மார்க்க கருத்துக்களை பயின்றார்.

தனிவாழ்க்கை

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் கமலாம்பிகையை 1912-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். 1918-ல் மனைவி, பிள்ளைகளை இழந்தார்.

ஆசிரியப் பணி

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் 1906-ல் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டதால் அவ்வேலையிலிருந்து நீங்கினார். 1909-ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.

அமைப்புப் பணிகள்

தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்தார்.

இதழியல்

தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அரசியல், சமுதாயம், சமயம் ஆகிய துறைகளில் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.

நூல் பட்டியல்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908 மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921 பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927 நாயன்மார் வரலாறு - 1937 முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938 உள்ளொளி - 1942 திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944 திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944 உரை நூல்கள் பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907 பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923 காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941 திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939 திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941

அரசியல்

தேசபக்தாமிர்தம் (1919) என் கடன் பணி செய்து கிடப்பதே (1921) தமிழ்நாட்டுச் செல்வம் (1924) தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு (1928) சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து (1930) தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 (1935) தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 (1935) இந்தியாவும் விடுதலையும் (1940) தமிழ்க்கலை (1953)

சமயம்

சைவசமய சாரம் - 1921 நாயன்மார் திறம் - 1922 தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923 சைவத்தின் சமசரசம் - 1925 முருகன் அல்லது அழகு - 1925 கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928 இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929 தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929 சைவத் திறவு - 1929 நினைப்பவர் மனம் - 1930 இமயமலை (அல்லது) தியானம் - 1931 சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933 சமரச தீபம் - 1934 சித்தமார்க்கம் - 1935 ஆலமும் அமுதமும் - 1944 பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949

பாடல்கள்

முருகன் அருள் வேட்டல் - 1932 திருமால் அருள் வேட்டல் - 1938 பொதுமை வேட்டல் - 1942 கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945 புதுமை வேட்டல் - 1945 சிவனருள் வேட்டல் - 1947 கிறிஸ்து மொழிக்குறள் - 1948 இருளில் ஒளி - 1950 இருமையும் ஒருமையும் - 1950 அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951 பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951 சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951 முதுமை உளறல் - 1951 வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953 இன்பவாழ்வு - 1925

பயண இலக்கியம்

இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறித்த தொகுப்பு நூல்) பொதுவுடைமை தொடர்பான கட்டுரைகள் தொழிலாளர் லட்சியங்களைப் பற்றி ஓர் இந்திய ஒர்க் ஷாப்பிலிருந்து கர்னாடிக் மில் வேலைநிறுத்தம் தொழிலாளர் நிலையும் சென்னை சர்க்காரும் இந்திய தொழிலாளரின் சர்வதேச நோக்கு ஆம்ஸ்டர்டாம் சர்வதேச ஸ்தாபனமும், மாஸ்கோ சர்வதேச ஸ்தாபனமும் பெரம்பூர் பட்டாளத்தில் போலீஸ் அட்டூழியம் வேலைநிறுத்த உரிமை - கில்பர்ட் ஸ்லேடருக்குப் பதில் மில் வட்டாரத்துக் கலகங்கள்

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.