திருவருட்பா

From Tamil Wiki
Revision as of 16:14, 3 March 2022 by Jeyamohan (talk | contribs)
திருவருட்பா

திருவருட்பா (1967- 1988) வடலூர் இராமலிங்க வள்ளலார் எழுதிய பாடல்களின் தொகுப்பு. இதில் இராமலிங்க வள்ளலார் பாடிய 5818 பாடல்கள் உள்ளன. ஆறு திருமுறைகளாக இது பகுக்கப்பட்டுள்ளன.

வெளியீடு

இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் எளிமையான நடையில் பெரும்பாலும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பண்டாரப்பாடல்களின் சந்தங்களுடன் அமைந்திருந்தன. ஆகவே அவை அச்சில் வராமலேயே பெரும்புகழ்பெற்றிருந்தன. வழிபாடுகளில் அவற்றை பாடினார்கள். அவற்றை பாடி அலையும் பண்டாரங்கலும் இருந்தனர்.1860 கள் முதல் சிறு பதிப்பாளர்கள் குஜிலிப் பதிப்புகளாக அவற்றை வெளியிட்டு சந்தைகளில் விற்றுவந்தனர். அவை பாடபேதங்களும் பிழையும் மலிந்தவையாக இருப்பதைக் கண்ட வள்ளலாரின் மாணவர் இறுக்கம் இரத்தின முதலியார் முறையான பதிப்பு கொண்டுவர விரும்பினார். ஏடுகளையும் கைப்பிரதிகளையும் தொகுத்தனர். அவற்றை முன்னரே அச்சிட்டுவெளியிட்டவர்களைச் சந்தித்து பிழையுடன் அச்சிடவேண்டாமென தடுத்தாலும், இழப்பீட்டுப் பணம் கொடுத்தாலும் அவை அச்சில்வந்துகொண்டே இருந்தன. ஆனால் வள்ளலார் தன் கவிதைகள் நூல்வடிவில் வருவதை விரும்பவில்லை, ஆகவே அனுமதி கொடுக்கவில்லை.

இதுசார்ந்து இறுக்கம் இரத்தின முதலியார் ஏராளமான கடிதங்களை இராமலிங்க வள்ளலாருக்கு அனுப்பினார். வள்ளலார் பதிலளிக்காமையால் கைப்பிரதிகளை அனுப்பிவைக்கும்படியும் அவை வந்துசேரும்வரை ஒருவேளை உணவே உண்ணப்போவதாக அறிவித்தார். அதையடுத்து இராமலிங்க வள்ளலார் கைப்பிரதிகள் சிலவற்றை அனுப்பினார். ஆனால் ஐந்தாண்டுகளாகியும் அனுமதி வழங்கவில்லை 1865ல் மீண்டும் இறுக்கம் இரத்தின முதலியார் கடிதம் எழுதி மன்றாடவே வள்ளலார் அனுமதி வழங்கி கடிதம் எழுதினார்.