being created

திருப்பன்னிப்பாகம் காட்டாளைக் கோவில்

From Tamil Wiki
Revision as of 16:05, 21 February 2022 by Arulj7978 (talk | contribs)

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பஞ்சாயத்தில் காட்டலை என்னும் இடத்தில் திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயத்துடன் தொடர்புடைய காட்டாளை சிவன் மற்றும் காட்டளை அம்மன் கோவில்கள் உள்ளன. சிவன் கோவிலின் மூலவர் லிங்க வடிவ சிவன் அம்மன் கோயிலில் மூல தெய்வம் காட்டாளை அம்மன்.

இடம்

திருபன்னிப்பாகம் சிவன் கோயியிலில் இருந்து அதன் அடுத்து ஓடும் கால்வாயை ஒட்டி போகும் சாலையில் இடது பக்கம் திரும்பி சுமார் 3 கி.மீ. பயணித்தால் கால்வாயின் இடதுபுறம் காட்டாளை சிவன் கோவிலும் வலது புறம் காட்டாளை அம்மன் கோயிலும் உள்ளன. இரண்டு கோயில்களும் சாலையில் இருந்து விலகி ரப்பர் தோட்டங்களின் நடுவில் உள்ளன. சிவன் கோவிலுக்கு சாலை வசதி உள்ளது, அம்மன் கோவில் செல்ல நடை பாதை மட்டுமே உள்ளது.

தொன்மம்

கோயில் அமைப்பு

காட்டாளை அம்மன் கோவில்

கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. காட்டாளை கோவிலில் இடுக்கும் அம்மனை யட்சியாக வழிபடபடுகிறார்கள்.

கருவறை: அம்மன் சிற்பம் நின்ற கோலம் கொண்ட கல்சிற்பம். இரண்டு கைகளும் வரத முத்திரை மற்றும் அபய முத்திரையும் கட்டுகின்றன. வரத ஹஸ்தம் கட்டும் கையில் சிறு கப்பறை உள்ளது. தலைக்கு மேல் நாகக்குடை உள்ளது. மூலச்சிற்பத்தின் அருகே செம்பு விக்கிரகமும் உள்ளது. இதற்கும் முன் இருந்த சுடுமண் சிற்பம் மாற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறையில் பத்திரகாளி மற்றும் இசக்கியம்மன் சிற்பங்களும் உள்ளன.

கோவிலின் அருகே வெட்டவெளியில் பொன்னறுத்தாள் சன்னதியும் கல்லால் ஆன நாகமும் வடக்கு பார்த்தபடி உள்ளன. இங்கு இசக்கியின் கோரம் இல்லாத இசக்கியம்மன் போன்ற ஓட்டுருவ சிற்பம் உள்ளது. கோவிலின் எதிரே சுடலை மாடன் சிற்பமும் சங்கிலி பூதத்தான் சன்னதியும் உள்ளன. கண்டன் சாஸ்தா மற்றும் இடம்புரி வலம்புரி பிள்ளையார் சிற்பங்களும் வடக்கு பார்த்து உள்ளன. கோவிலின் அருகே உடைந்து போன பழங்கால ஓட்டு சிலைகள் உள்ளன. கோவில்வகை ஊற்றுகுழி கிணறும் கிணற்றின் அருகே சப்த கன்னியர் சன்னதியும் வெட்ட வெளியில் உள்ளது.

காட்டாளை சிவன் கோவில்

கிழக்கு பார்த்த கோயில் சுற்றி மதில் சுவர்களுடன் உள்ளது. கோவில் கருவறையில் சிவலிங்கம் எதிரே சிறிய நந்தியும் உள்ளன. கோவில் உள்பிரகாரத்தில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் சன்னதி உள்ளது. வெளிபிராகாரத்தில் தெற்கு பக்கம் சாஸ்தா சன்னதியும் வடக்கில் நாகர் சிற்பங்களும் உள்ளன. மூலவர் இருக்கும் கருவறை மண்டப கட்டுமானம் கருங்கல்லால் ஆனது. அதன் மேல் புதிதாக கட்டப்பட்ட விமானம் உள்ளது.

வரலாறு

காட்டளை அம்மன் கோயில் இருக்கும் இக்காட்டு பகுதியில் முன்னர் மருமக்கள் வழி கிருஷ்ண வகை சாதியினர் வாழ்ந்துள்ளனர். இவர்கள் தோட்ட விவசாயிகள். கொடும் விஷ காய்ச்சல் பரவி சிலர் இறந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் முட்டைகாடு ஊருக்குள் குடி பெயர்ந்தனர். கிருஷ்ண வகையாருக்கு ஊருடன் தொடர்பு முறிந்து ஊர் பாழடைந்தது. பாழடைந்த ஊர் அம்மனை பெருஞ்சிலம்பு ஊர் வணிக செட்டியார்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். நாளடைவில் இது தனிக் குடும்பத்திற்கு சொந்தமான கோவிலாக மாறியது[1].

கன்னியாகுமரி தேவஸ்தானத்தில் இணைக்கப்பட்டுள்ள கோவில் இப்போது ’அருள்மிகு காட்டாலை கண்டன் சாஸ்தா மற்றும் அம்மன் கோவில் சேவா அறக்கட்டளை, பத்மநாபபுரம்’ என்னும் அறகட்டளையின் நிர்வாகத்தில் உள்ளது.

இணைப்புகள்

  1. சிவாலய ஓட்டம், அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், 2021, பி.இ. 14 ப.212.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.