being created

திருப்பன்னிப்பாகம் காட்டாளைக் கோவில்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 5: Line 5:

== கோயில் அமைப்பு ==
== கோயில் அமைப்பு ==
கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. காட்டாளை கோவிலில் இடுக்கும் அம்மனை யட்சியாக வழிபடபடுகிறார்கள்.
மூலச்சிற்பம்: அம்மன் சிற்பம் நின்ற கோலம் கொண்ட கல்சிற்பம். இரண்டு கைகளும் வரத முத்திரை மற்றும் அபய முத்திரையும் கட்டுகின்றன. வரத ஹஸ்தம் கட்டும் கையில் சிறு கப்பறை உள்ளது. தலைக்கு மேல் நாகக்குடை உள்ளது. மூலச்சிற்பத்தின் அருகே செம்பு விக்கிரகமும் உள்ளது. இதற்கும் முன் இருந்த சுடுமண் சிற்பம் மாற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் அருகே வெட்டவெளியில் கல்லால் ஆன நாகமும் பெண்தெய்வங்களும் வடக்கு பார்த்தபடி உள்ளன. இங்கு இசக்கியின் கோரம் இல்லாத இசக்கியம்மன் போன்ற ஓட்டுருவ சிற்பம் உள்ளது. கோவிலின் எதிரே சுடலை மாடன் மற்றும் சுடலை பேய்ச்சி ஆகியோரின் கல் சிற்பங்கள் உள்ளன.

== வரலாறு ==
== வரலாறு ==
காட்டளை அம்மன் இருக்கும் இக்காட்டு பகுதியில் முன்னர் மருமக்கள் வழி கிருஷ்ண வகை சாதியினர் வாழ்ந்துள்ளனர். இவர்கள் தோட்ட விவசாயிகள். கொடும் விஷ காய்ச்சல் பரவி சிலர் இறந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் முட்டைகாடு ஊருக்குள் குடி பெயர்ந்தனர். கிருஷ்ண வகையாருக்கு ஊருடன் தொடர்பு முறிந்து ஊர் பாழடைந்தது. பாழடைந்த ஊர் அம்மனை பெருஞ்சிலம்பு ஊர் வணிக செட்டியார்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். நாளடைவில் இது தனிக் குடும்பத்திற்கு சொந்தமான கோவிலாக மாறியது<ref>சிவாலய ஓட்டம், அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், 2021, பி.இ. 14 ப.212.</ref>.

== காட்டாளை சிவன் கோவில் ==
== காட்டாளை சிவன் கோவில் ==
== உசாத்துணை ==
<references />
{{being created}}
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 04:03, 20 February 2022

கன்னியாகுமரி மாவட்டம் திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயத்துடன் தொடர்புடைய காட்டாளை அம்மன் கோவில். மகாதேவர் ஆலயத்துடன் தொடர்புடைய காட்டளை சிவன் கோவிலும் உள்ளது. மூல தெய்வம் யட்சியாக வழிபடப்படுகிறது. காட்டாளை கோவில் செட்டியார் சாதிக் குடும்பத்திற்கு தனிப்பட்ட உரிமை கொண்டது.

இடம்

நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் தக்கலை ஊரிலிருந்து சுருளக்கோடு சாலையில் 6 கி.மீ. தொலைவில் முட்டைக்காடு சந்திப்பிலிருந்து 3 கி.மீ. பயணித்து திருபன்னிப்பாகம் சிவன் கோயிலை அடையலாம். சிவன் கோயிலை ஒட்டி கல்வாய் ஓடுகிறது. கால்வாயை கடந்து காட்டுவழி 6 கி.மீ. நடந்து கோவிலுக்கு செல்ல வேண்டும். கோயில் வாழை, கமுகு, தென்னை, காய்கறி தோட்டங்களை கடந்து அடர்ந்த காட்டினுள் உள்ளது. காட்டாளை என்பது அடர்ந்த காட்டை குறிப்பது.

கோயில் அமைப்பு

கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. காட்டாளை கோவிலில் இடுக்கும் அம்மனை யட்சியாக வழிபடபடுகிறார்கள்.

மூலச்சிற்பம்: அம்மன் சிற்பம் நின்ற கோலம் கொண்ட கல்சிற்பம். இரண்டு கைகளும் வரத முத்திரை மற்றும் அபய முத்திரையும் கட்டுகின்றன. வரத ஹஸ்தம் கட்டும் கையில் சிறு கப்பறை உள்ளது. தலைக்கு மேல் நாகக்குடை உள்ளது. மூலச்சிற்பத்தின் அருகே செம்பு விக்கிரகமும் உள்ளது. இதற்கும் முன் இருந்த சுடுமண் சிற்பம் மாற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கோவிலின் அருகே வெட்டவெளியில் கல்லால் ஆன நாகமும் பெண்தெய்வங்களும் வடக்கு பார்த்தபடி உள்ளன. இங்கு இசக்கியின் கோரம் இல்லாத இசக்கியம்மன் போன்ற ஓட்டுருவ சிற்பம் உள்ளது. கோவிலின் எதிரே சுடலை மாடன் மற்றும் சுடலை பேய்ச்சி ஆகியோரின் கல் சிற்பங்கள் உள்ளன.

வரலாறு

காட்டளை அம்மன் இருக்கும் இக்காட்டு பகுதியில் முன்னர் மருமக்கள் வழி கிருஷ்ண வகை சாதியினர் வாழ்ந்துள்ளனர். இவர்கள் தோட்ட விவசாயிகள். கொடும் விஷ காய்ச்சல் பரவி சிலர் இறந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் முட்டைகாடு ஊருக்குள் குடி பெயர்ந்தனர். கிருஷ்ண வகையாருக்கு ஊருடன் தொடர்பு முறிந்து ஊர் பாழடைந்தது. பாழடைந்த ஊர் அம்மனை பெருஞ்சிலம்பு ஊர் வணிக செட்டியார்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். நாளடைவில் இது தனிக் குடும்பத்திற்கு சொந்தமான கோவிலாக மாறியது[1].

காட்டாளை சிவன் கோவில்

உசாத்துணை

  1. சிவாலய ஓட்டம், அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், 2021, பி.இ. 14 ப.212.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.