தமிழ் இலக்கிய வரலாறு, மு.அருணாசலம்

From Tamil Wiki
Revision as of 08:14, 9 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "தமிழ் இலக்கிய வரலாறு, மு.அருணாசலம். ( ) தமிழ் இலக்கியவரலாறு பற்றி எழுதப்பட்ட கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட முழுமையான நூல். தமிழில் இவ்வகையில் முன்னோடியான பெரும்படைப்பு. பிற்காலக்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ் இலக்கிய வரலாறு, மு.அருணாசலம். ( ) தமிழ் இலக்கியவரலாறு பற்றி எழுதப்பட்ட கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட முழுமையான நூல். தமிழில் இவ்வகையில் முன்னோடியான பெரும்படைப்பு. பிற்காலக் கலைக்களஞ்சியங்கள் இந்நூலையே பெரும்பாலும் ஆதாரமாகக் கொண்டிருந்தன. மு. அருணாச்சலம் இதன் ஆசிரியர். (பார்க்க மு. அருணாசலம் )

எழுத்து, வெளியீடு

மு.அருணாசலம் ஊர்ஊராகச் சென்று தேடி அலைந்து 150-க்கும் மேற் பட்ட ஓலைச்சுவடிகளைத் தன் வீட்டில் சேகரித்து வைத்திருந்தார். தொடர்ந்து பல நூல்களைப் பதிப்பித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ் இலக்கிய வரலாறு குறித்த விரிவான ஆய்வுகள் செய்து நூற்றாண்டு வாரியாக தமிழ் இலக்கிய வரலாறு நூல்கள் வரிசையை எழுதினார். அறிஞர்கள் கா.சுப்ரமணிய.பிள்ளை, தஞ்சை சீனிவாசபிள்ளை ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய வரலாற்று நூல்களே அத்துறையில் அவருக்கு முன்னோடி நூல்கள்.

அமைப்பு

ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பதினேழாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கிய வரலாற்றை 15 நூல்களில் 5,404 பக்கங்களில் அரிய தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இந்நூல்களுக்கான பொருளடக்கத்தை இறுதியாக 417 பக்கங்களில் பார்க்கர் நிறுவனம் பகுத்து தொகுத்துக் கொடுத்துள்ளது. மிக அரிதான பெயர்கூட அறியப்படாத தமிழ் நூல்களைப் பற்றியும் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் பல தகவல்களை இந்நூலில் காணலாம்.

நூல் முழுமையாக இணையநூலகச் சேமிப்பில்

தமிழ் இலக்கிய வரலாறு : ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் – 2

தமிழ் இலக்கிய வரலாறு : தமிழ்ப் புலவர் வரலாறு பத்தாம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாறு : பதினோராம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாறு : பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் – 2

தமிழ் இலக்கிய வரலாறு பதின்மூன்றாம் நூற்றாண்டு : தமிழ்ப் புலவர் வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு : தமிழ்ப் புலவர் வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு : பதினைந்தாம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாறு : பதினாறாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : பதினாறாம் நூற்றாண்டு பாகம் – 2

தமிழ் இலக்கிய வரலாறு : பதினாறாம் நூற்றாண்டு பாகம் – 3

தமிழ் இலக்கிய வரலாறு : பதினேழாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை