under review

தமிழ் இலக்கிய வரலாறு, மு.அருணாசலம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected text format issues)
 
Line 24: Line 24:
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0013049_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf தமிழ் இலக்கிய வரலாறு: பதினேழாம் நூற்றாண்டு பாகம் – 1]

* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0013047_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf தமிழ் இலக்கிய வரலாறு: நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை]

==உசாத்துணை==
== உசாத்துணை ==
* [https://www.hindutamil.in/news/literature/89610-.html மு.அருணாசலம்: அறியப்படாத இலக்கிய ஆளுமை | மு.அருணாசலம்: அறியப்படாத இலக்கிய ஆளுமை - hindutamil.in]
* [https://www.hindutamil.in/news/literature/89610-.html மு.அருணாசலம்: அறியப்படாத இலக்கிய ஆளுமை | மு.அருணாசலம்: அறியப்படாத இலக்கிய ஆளுமை - hindutamil.in]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJY2#book1/ தமிழ் இலக்கிய வரலாறு]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJY2#book1/ தமிழ் இலக்கிய வரலாறு]

Latest revision as of 19:34, 5 July 2023

இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, மு.அருணாசலம் தமிழ் இலக்கியவரலாறு பற்றி எழுதப்பட்ட கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட முழுமையான நூல். தமிழில் இவ்வகையில் முன்னோடியான பெரும்படைப்பு. பிற்காலக் கலைக்களஞ்சியங்கள் இந்நூலையே பெரும்பாலும் ஆதாரமாகக் கொண்டிருந்தன. மு. அருணாசலம் இதன் ஆசிரியர்.

எழுத்து, வெளியீடு

மு.அருணாசலம் ஊர்ஊராகச் சென்று தேடி அலைந்து 150-க்கும் மேற் பட்ட ஓலைச்சுவடிகளைத் தன் வீட்டில் சேகரித்து வைத்திருந்தார். தொடர்ந்து பல நூல்களைப் பதிப்பித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ் இலக்கிய வரலாறு குறித்த விரிவான ஆய்வுகள் செய்து நூற்றாண்டு வாரியாக தமிழ் இலக்கிய வரலாறு நூல்கள் வரிசையை எழுதினார். அறிஞர்கள் புலவர்கள் ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய வரலாற்று நூல்களே அத்துறையில் அவருக்கு முன்னோடி நூல்கள்.

அமைப்பு

ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பதினேழாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கிய வரலாற்றை 15 நூல்களில் 5,404 பக்கங்களில் அரிய தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இந்நூல்களுக்கான பொருளடக்கத்தை இறுதியாக 417 பக்கங்களில் பார்க்கர் நிறுவனம் பகுத்து தொகுத்துக் கொடுத்துள்ளது.

இலக்கிய இடம்

தமிழிலக்கிய வரலாறு

மு.அருணாசலத்தின் தமிழ் இலக்கிய வரலாறு அவர் தன் மாணவர்களின் உதவியுடன் எழுதிய ஒரு முழுமையான தொகுப்புநூல். மிக அரிதான பெயர்கூட அறியப்படாத தமிழ் நூல்களைப் பற்றியும் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் பல தகவல்களை இந்நூலில் காணலாம். எந்தச் சிறுசெய்தியும் விடப்படலாகாது என்னும் உணர்வுடன், தெளிவான ஆதாரங்களைக்கொண்டு செய்யப்பட்ட காலப்பகுப்புடன் இந்நூல் அமைந்துள்ளது. தமிழிலக்கிய வரலாற்றின் மூலநூல் என்றே ஆய்வாளர்களால் கருதப்படுகிறது ,

நூல்

நூல் முழுமையாக இணையநூலகச் சேமிப்பில்

உசாத்துணை

✅Finalised Page