தங்கமணி (வில்லுப்பாட்டு கலைஞர்): Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|''தங்கமணி'' கலைவளர்மணி ஜி. தங்கமணி (பிறப்பு: ஏப்ரல் 10, 1980) வில்லுப்பாட்டு கலைஞர். தங்கமணியின் சுபராகம் கலைக்குழு நாகர்கோவிலில் உள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக...")
 
mNo edit summary
Line 1: Line 1:
[[File:தங்கமணி.jpg|thumb|''தங்கமணி'']]
[[File:தங்கமணி.jpg|thumb|''தங்கமணி'']]
கலைவளர்மணி ஜி. தங்கமணி (பிறப்பு: ஏப்ரல் 10, 1980) வில்லுப்பாட்டு கலைஞர். தங்கமணியின் சுபராகம் கலைக்குழு நாகர்கோவிலில் உள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக நாகர்கோவிலில் தென்குமரி நாட்டுப்புறக் கலைஞர்கள் கழகம் நடத்தி வருகிறார்.

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
[[File:தங்கமணி சுபராகம்.jpg|thumb|''தங்கமணி சுபராகம் குழுவுடன்'']]

கலைவளர்மணி ஜி. தங்கமணி ஏப்ரல் 10, 1980 அன்று நாகர்கோவிலில் உள்ள மணிமேடை ஜங்ஷனில் தங்கப்பன், தவமணி தம்பதியருக்கு பிறந்தார். பள்ளிப்படிப்பை பத்தாம் வகுப்பு வரை வல்லன்குமாரன்விளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின் படிப்பை விட்டு மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்தார்.  

== கலை வாழ்க்கை ==
== கலை வாழ்க்கை ==
மளிகைக் கடையில் வேலை செய்த போது அருகில் நடந்த கோவில் கொடையின் வில்லுப்பாட்டு கச்சேரியைக் கேட்டு வில்லுப்பாட்டில் ஆர்வம் கொண்டார். தங்கமணியின் வீட்டில் ஆர்வத்தை சொன்ன போது அவரது அம்மா அதனை எதிர்த்தார். ”கல்லடிச்சு சாப்பிட்டாலும் வில்லடிச்சு சாப்பிடக் கூடாது” என வில்லுப்பாட்டு பயிற்சிக்கு தங்கமணி செல்வதைத் தடுத்தார்.

1996 ஆம் ஆண்டு குடும்ப எதிர்ப்பையும் மீறி கலைமாமணி முத்துசாமி புலவரிடம் இரண்டு மாதங்கள் வில்லுப்பாட்டு கற்றார். பின் பகுதி நேரமாக சில குழுக்களில் பக்கப்பாட்டு பாடத் தொடங்கினார். ஆண் பக்கப்பாட்டு பாடிக் கொண்டிருந்த தங்கமணி சின்னச் சின்னக் கதைகள் மெயின் பாடகராக கோவில் திருவிழாக்களில் பாடத் தொடங்கினார்.  

2005 இல் சுண்டபத்திவிளை கலைமாமணி சரஸ்வதி குழுவில் இணைந்து ஆண் பக்கப்பாட்டு பாடுவதும், குடம் அடிப்பதும் செய்தார்.

சரஸ்வதி குழுவில் இருந்த போதே ஆண் வில்லு தனியாகப் பிடிக்கத் தொடங்கினார். புதிய வில்லுப்பாட்டு கதைகளும் எழுதத் தொடங்கினார். முப்பது கதைகளுக்கு மேல் எழுதிப் பாடியுள்ளார். அவர் கதை எழுதுவதைப் பற்றிச் சொல்லும் போது, “ஒவ்வொரு கதை எழுதியதும் நான் [[அ.கா. பெருமாள்]] சாரிடம் அதனைக் காண்பிப்பேன். அவர் கதையில் உள்ள பிழைகளைத் திருத்தித் தந்ததும் அதற்கு அம்பிகா இசையமைத்து தருவார். பின் அதை கூத்தில் பாடுவேன்” என்கிறார்.

====== சுபராகம் குழு ======
====== தென்குமரி நாட்டுப்புறக் கலைஞர்கள் கழகம் ======

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [https://www.thehindu.com/news/national/tamil-nadu/this-villupattu-artiste-now-sells-cassava/article32280875.ece தி இந்து ஆங்கிலம் - தங்கமணி தொழில் பற்றி]

Revision as of 23:46, 20 May 2022

தங்கமணி

கலைவளர்மணி ஜி. தங்கமணி (பிறப்பு: ஏப்ரல் 10, 1980) வில்லுப்பாட்டு கலைஞர். தங்கமணியின் சுபராகம் கலைக்குழு நாகர்கோவிலில் உள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக நாகர்கோவிலில் தென்குமரி நாட்டுப்புறக் கலைஞர்கள் கழகம் நடத்தி வருகிறார்.

தனி வாழ்க்கை

தங்கமணி சுபராகம் குழுவுடன்

கலைவளர்மணி ஜி. தங்கமணி ஏப்ரல் 10, 1980 அன்று நாகர்கோவிலில் உள்ள மணிமேடை ஜங்ஷனில் தங்கப்பன், தவமணி தம்பதியருக்கு பிறந்தார். பள்ளிப்படிப்பை பத்தாம் வகுப்பு வரை வல்லன்குமாரன்விளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின் படிப்பை விட்டு மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

கலை வாழ்க்கை

மளிகைக் கடையில் வேலை செய்த போது அருகில் நடந்த கோவில் கொடையின் வில்லுப்பாட்டு கச்சேரியைக் கேட்டு வில்லுப்பாட்டில் ஆர்வம் கொண்டார். தங்கமணியின் வீட்டில் ஆர்வத்தை சொன்ன போது அவரது அம்மா அதனை எதிர்த்தார். ”கல்லடிச்சு சாப்பிட்டாலும் வில்லடிச்சு சாப்பிடக் கூடாது” என வில்லுப்பாட்டு பயிற்சிக்கு தங்கமணி செல்வதைத் தடுத்தார்.

1996 ஆம் ஆண்டு குடும்ப எதிர்ப்பையும் மீறி கலைமாமணி முத்துசாமி புலவரிடம் இரண்டு மாதங்கள் வில்லுப்பாட்டு கற்றார். பின் பகுதி நேரமாக சில குழுக்களில் பக்கப்பாட்டு பாடத் தொடங்கினார். ஆண் பக்கப்பாட்டு பாடிக் கொண்டிருந்த தங்கமணி சின்னச் சின்னக் கதைகள் மெயின் பாடகராக கோவில் திருவிழாக்களில் பாடத் தொடங்கினார்.

2005 இல் சுண்டபத்திவிளை கலைமாமணி சரஸ்வதி குழுவில் இணைந்து ஆண் பக்கப்பாட்டு பாடுவதும், குடம் அடிப்பதும் செய்தார்.

சரஸ்வதி குழுவில் இருந்த போதே ஆண் வில்லு தனியாகப் பிடிக்கத் தொடங்கினார். புதிய வில்லுப்பாட்டு கதைகளும் எழுதத் தொடங்கினார். முப்பது கதைகளுக்கு மேல் எழுதிப் பாடியுள்ளார். அவர் கதை எழுதுவதைப் பற்றிச் சொல்லும் போது, “ஒவ்வொரு கதை எழுதியதும் நான் அ.கா. பெருமாள் சாரிடம் அதனைக் காண்பிப்பேன். அவர் கதையில் உள்ள பிழைகளைத் திருத்தித் தந்ததும் அதற்கு அம்பிகா இசையமைத்து தருவார். பின் அதை கூத்தில் பாடுவேன்” என்கிறார்.

சுபராகம் குழு
தென்குமரி நாட்டுப்புறக் கலைஞர்கள் கழகம்

வெளி இணைப்புகள்