ஜெயமோகன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Article on Jeyamohan's biography. Many details are yet to be filled.)
Line 1: Line 1:
This is a stub page, you can add content to this
[[File:B. Jeyamohan .jpg|thumb|ஜெயமோகன் ]]
பி. ஜெயமோகன் (ஏப்ரல் 22, 1962) தமிழ் எழுத்தாளர், இலக்கிய செயற்பாட்டளர் மற்றும் இலக்கிய விமர்சகர் ஆவார். மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான 'வெண்முரசு' பெருநாவல் இவரின் தலைசிறந்த படைப்பாக அறியப்படுகிறது. விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கொற்றவை, காடு, ஏழாம் உலகம் போன்ற நாவல்கள், 'அறம்' சிறுகதை தொகுதி, இவை பெரிதும் பேசப்படும் இவரின் பிற படைப்புகள்.
குமரி மாவட்டம் திருவரம்பு பகுதியை பூர்வீகமாக கொண்ட இவரின் பல படைப்புகள் குமரிநிலம் மற்றும் கேரள  பண்பாட்டு பின்புலம் கொண்டவை.  தன் காலத்து திரைத்துறையின் மிக முக்கியமான திரைக்கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக அறியப்படுபவர்.


==பிறப்பு & தொடக்ககாலம்==
எஸ். பாகுலேயன் பிள்ளை - விசாலாட்சி இணையர்க்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் ஜெயமோகன். அருமனையில் பிறந்த இவர், ஒன்றாம் வகுப்பு முடிக்கும் வரை கேரளாவில் பத்மனாபபுரத்தில்  வளர்ந்தார். இரண்டாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை  கன்யாகுமரி கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளியிலும்  பின்பு முழுக்கோடு அரசு தொடக்கப்பள்ளியில்  படித்தார்.ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றுவரை அருமனை [நெடியசாலை] அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து 1978 ல் தனது பள்ளிப்படிப்பு முடித்தார். இந்த பள்ளிபருவத்தில் தனது தாய், தனது பள்ளி ஆசிரியர்கள் இருவர், இவரின் இலக்கிய ஆர்வத்தில் பெருமளவு பாதித்திருக்கின்றனர். 'ரத்னபாலா' எனும் சிறுவர் இதழுக்கு தனது முதல் கதை பிரசுராமகிய பின், கல்கி, குமுதம், விகடன் உள்ளிட்ட இதழ்களுக்கு பல புனைப்பெயர்களில் கதைகள் எழுதியுள்ளார்.<ref><nowiki>https://www.jeyamohan.in/about/</nowiki></ref>


==மேற்படிப்பு==
1978ல் மார்த்தாண்டம் [இப்போது நேசமணி நினைவு] கிறித்தவக் கல்லூரியில் வணிகவியல் துறை எடுத்து புதுமுகப்படிப்பை (PUC) முடித்தார்.  1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தவர்,1982ல் கல்லூரிப்படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினார்.<ref><nowiki>https://www.jeyamohan.in/about/</nowiki></ref>


=இலக்கிய வாழ்க்கை=
தனது நண்பன் மற்றும் பெற்றோர், மூவரின் தற்கொலைகளினால் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகி சிறிது காலம் துறவியாக அலைந்தவர், பின்பு காசர்கோட்டில் தொலைபேசி நிலைய ஊழியராக சேர்ந்தார். இக்காலகட்டங்களில் இடதுசாரி அமைப்புகளுடன் தொழிற்சங்கம், இலக்கியம் சார்ந்து பயணித்து இலக்கிய கோட்பாட்டு விவாத அனுபவம் பெற்றார். பின்பு  1985ல் அறிமுகமாகிய தனது இலக்கிய வழிகாட்டியான எழுத்தாளர் சுந்தர ராமசாமி தன்னை எழுத ஊக்குவிக்க, கைதி, நதி உள்ளிட்ட கவிதைகள், படுகை, போதி உள்ளிட்ட சிறுகதைகள் எழுதப்பட்டு வெளியாகி அன்றைய பிற மூத்த எழுத்தாளர்களாலும் கவனிக்கப்பட்டன. 1987ல் அறிமுகமான கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா அவரது இலக்கிய ஆர்வத்தை மேலும் ஊக்குவித்து வழிகாட்டினார்.<ref>https://www.jeyamohan.in/about/</ref>


'''நாவல்கள்'''


1988ல் எழுதிய தனது முதல் நாவல் 'ரப்பர்' 1990ல் நடைபெற்ற 'அகிலன் நினைவு' போட்டியில் பங்கேற்று விருது வென்றது.
தாகம் [தமிழ் புத்தகாலயம்] அதை வெளியிட்டது. அந்த வெளியீட்டு விழாவில் அப்போதைய தமிழ் நாவல்களின் தொடர்கதைத்தன்மை, சிக்கலின்மை, குறுநாவல்களுக்குரிய குணங்கள் குறித்தும்,  சிக்கலான, விரிவான தத்துவ மற்றும் வரலாற்று தரிசனத்தை ஒரு நாவல் கொண்டிருக்க வேண்டியதை குறித்தும் ஆற்றிய உரை அப்போது நீண்ட விவாதங்களை உருவாக்கியது. அந்த விவாதத்தின், தன் பார்வையின் நீட்சியாக 1992ல் நாவல் என்ற நூலை எழுதினார்.1997ல் 'விஷ்ணுபுரம்' பெருநாவல் வெளியானது. புராணத்தன்மை கொண்ட இந்த நாவல் இந்தியாவின் பல்வேறு ஞானமரபுகளின் உரையாடலை, விவாதங்களை மையமாக கொண்டது. 1999ல் வெளியான 'பின்தொடரும் நிழலின் குரல்' நாவல் இடதுசாரி தத்துவங்களின் அரசியல் செயல்பாடுகள் அடையும்/ செய்யும் வீழ்ச்சிகள், அது ஏற்படுத்தும் தத்துவ சிக்கல்கள் குறித்து பேசுகிறது.
2003ல் காடு நாவலும், ஏழாம் உலகம் நாவலும் வெளியாகின. 2005ல் கொற்றவை நாவல் வெளியானது.2014ல் துவங்கி 2020 வரை சுமார் 26000 பக்கங்களும், 25 பாகங்களும் கொண்ட உலகின் மிகநீண்ட நாவல் வெண்முரசு  எழுதப்பட்டு கொண்டிருக்கும் போதே தனது வலைத்தளத்தில் நாளும் ஒரு அத்தியாயம் என வெளியிட்டார்.


'''சிறுகதைகள்'''


{{stub page}}
2005ல்  'பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும்' சிறுகதைதொகுதி வெளியானது.
 
2006ல் 'விசும்பு' அறிவியல் சிறுகதைதொகுதி வெளியானது. இது குறித்து எனிஇந்தியன் பதிப்பாசிரியர் கூறுவதாவது:
 
"ஜெயமோகனின் அறிவியல் கதைகள் சமூக, தத்துவ அடிப்படைகளில் இயங்குவதைக் காணலாம். விஞ்ஞானம் என்பது வெறும் தொழில் நுட்பம் மட்டுமல்ல. ஒரு சமூகம் தன் இயல்புக்குத் தக்க மேற்கொள்ளும் தேர்வுகள்தான் என்பது ஜெயமோகனின் பல கதைகளின் அடிநாதமாய் உள்ளது. அந்தத் தேர்வுகளைக் கேள்விக்குள்ளாக்கும் கலைஞனின் சுதந்திர வேட்கையும் சமூக முன்னெடுப்பும் தணியாத ஆவலும் இவற்றில் காணக் கிடைக்கின்றன."<ref><nowiki>https://www.jeyamohan.in/454/</nowiki></ref>
 
2011ல் வெளியான அறம் சிறுகதை தொகுதி நிஜத்தில் வாழ்ந்த மனிதர்களை, அவர்களின் உயர்விழுமியங்களை பற்றி பேசுவது.
 
மார்ச் 2020, கொரோனா பரவலின் போது வீடடங்கில் இருந்த காலக்கட்டத்தில் புனைவு களியாட்டு சிறுகதைகள் என்று 100 சிறுகதைகளை தொடர்ச்சியாக தன் வலைத்தளத்தில் வெளியிட்டார்.
 
=இலக்கிய பார்வை=
 
=திரைப்பட பணி=

Revision as of 16:43, 27 January 2022

ஜெயமோகன்

பி. ஜெயமோகன் (ஏப்ரல் 22, 1962) தமிழ் எழுத்தாளர், இலக்கிய செயற்பாட்டளர் மற்றும் இலக்கிய விமர்சகர் ஆவார். மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான 'வெண்முரசு' பெருநாவல் இவரின் தலைசிறந்த படைப்பாக அறியப்படுகிறது. விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கொற்றவை, காடு, ஏழாம் உலகம் போன்ற நாவல்கள், 'அறம்' சிறுகதை தொகுதி, இவை பெரிதும் பேசப்படும் இவரின் பிற படைப்புகள். குமரி மாவட்டம் திருவரம்பு பகுதியை பூர்வீகமாக கொண்ட இவரின் பல படைப்புகள் குமரிநிலம் மற்றும் கேரள பண்பாட்டு பின்புலம் கொண்டவை. தன் காலத்து திரைத்துறையின் மிக முக்கியமான திரைக்கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக அறியப்படுபவர்.

பிறப்பு & தொடக்ககாலம்

எஸ். பாகுலேயன் பிள்ளை - விசாலாட்சி இணையர்க்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் ஜெயமோகன். அருமனையில் பிறந்த இவர், ஒன்றாம் வகுப்பு முடிக்கும் வரை கேரளாவில் பத்மனாபபுரத்தில் வளர்ந்தார். இரண்டாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை கன்யாகுமரி கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளியிலும் பின்பு முழுக்கோடு அரசு தொடக்கப்பள்ளியில் படித்தார்.ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றுவரை அருமனை [நெடியசாலை] அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து 1978 ல் தனது பள்ளிப்படிப்பு முடித்தார். இந்த பள்ளிபருவத்தில் தனது தாய், தனது பள்ளி ஆசிரியர்கள் இருவர், இவரின் இலக்கிய ஆர்வத்தில் பெருமளவு பாதித்திருக்கின்றனர். 'ரத்னபாலா' எனும் சிறுவர் இதழுக்கு தனது முதல் கதை பிரசுராமகிய பின், கல்கி, குமுதம், விகடன் உள்ளிட்ட இதழ்களுக்கு பல புனைப்பெயர்களில் கதைகள் எழுதியுள்ளார்.[1]

மேற்படிப்பு

1978ல் மார்த்தாண்டம் [இப்போது நேசமணி நினைவு] கிறித்தவக் கல்லூரியில் வணிகவியல் துறை எடுத்து புதுமுகப்படிப்பை (PUC) முடித்தார். 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தவர்,1982ல் கல்லூரிப்படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினார்.[2]

இலக்கிய வாழ்க்கை

தனது நண்பன் மற்றும் பெற்றோர், மூவரின் தற்கொலைகளினால் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகி சிறிது காலம் துறவியாக அலைந்தவர், பின்பு காசர்கோட்டில் தொலைபேசி நிலைய ஊழியராக சேர்ந்தார். இக்காலகட்டங்களில் இடதுசாரி அமைப்புகளுடன் தொழிற்சங்கம், இலக்கியம் சார்ந்து பயணித்து இலக்கிய கோட்பாட்டு விவாத அனுபவம் பெற்றார். பின்பு 1985ல் அறிமுகமாகிய தனது இலக்கிய வழிகாட்டியான எழுத்தாளர் சுந்தர ராமசாமி தன்னை எழுத ஊக்குவிக்க, கைதி, நதி உள்ளிட்ட கவிதைகள், படுகை, போதி உள்ளிட்ட சிறுகதைகள் எழுதப்பட்டு வெளியாகி அன்றைய பிற மூத்த எழுத்தாளர்களாலும் கவனிக்கப்பட்டன. 1987ல் அறிமுகமான கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா அவரது இலக்கிய ஆர்வத்தை மேலும் ஊக்குவித்து வழிகாட்டினார்.[3]

நாவல்கள்

1988ல் எழுதிய தனது முதல் நாவல் 'ரப்பர்' 1990ல் நடைபெற்ற 'அகிலன் நினைவு' போட்டியில் பங்கேற்று விருது வென்றது. தாகம் [தமிழ் புத்தகாலயம்] அதை வெளியிட்டது. அந்த வெளியீட்டு விழாவில் அப்போதைய தமிழ் நாவல்களின் தொடர்கதைத்தன்மை, சிக்கலின்மை, குறுநாவல்களுக்குரிய குணங்கள் குறித்தும், சிக்கலான, விரிவான தத்துவ மற்றும் வரலாற்று தரிசனத்தை ஒரு நாவல் கொண்டிருக்க வேண்டியதை குறித்தும் ஆற்றிய உரை அப்போது நீண்ட விவாதங்களை உருவாக்கியது. அந்த விவாதத்தின், தன் பார்வையின் நீட்சியாக 1992ல் நாவல் என்ற நூலை எழுதினார்.1997ல் 'விஷ்ணுபுரம்' பெருநாவல் வெளியானது. புராணத்தன்மை கொண்ட இந்த நாவல் இந்தியாவின் பல்வேறு ஞானமரபுகளின் உரையாடலை, விவாதங்களை மையமாக கொண்டது. 1999ல் வெளியான 'பின்தொடரும் நிழலின் குரல்' நாவல் இடதுசாரி தத்துவங்களின் அரசியல் செயல்பாடுகள் அடையும்/ செய்யும் வீழ்ச்சிகள், அது ஏற்படுத்தும் தத்துவ சிக்கல்கள் குறித்து பேசுகிறது. 2003ல் காடு நாவலும், ஏழாம் உலகம் நாவலும் வெளியாகின. 2005ல் கொற்றவை நாவல் வெளியானது.2014ல் துவங்கி 2020 வரை சுமார் 26000 பக்கங்களும், 25 பாகங்களும் கொண்ட உலகின் மிகநீண்ட நாவல் வெண்முரசு எழுதப்பட்டு கொண்டிருக்கும் போதே தனது வலைத்தளத்தில் நாளும் ஒரு அத்தியாயம் என வெளியிட்டார்.

சிறுகதைகள்

2005ல் 'பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும்' சிறுகதைதொகுதி வெளியானது.

2006ல் 'விசும்பு' அறிவியல் சிறுகதைதொகுதி வெளியானது. இது குறித்து எனிஇந்தியன் பதிப்பாசிரியர் கூறுவதாவது:

"ஜெயமோகனின் அறிவியல் கதைகள் சமூக, தத்துவ அடிப்படைகளில் இயங்குவதைக் காணலாம். விஞ்ஞானம் என்பது வெறும் தொழில் நுட்பம் மட்டுமல்ல. ஒரு சமூகம் தன் இயல்புக்குத் தக்க மேற்கொள்ளும் தேர்வுகள்தான் என்பது ஜெயமோகனின் பல கதைகளின் அடிநாதமாய் உள்ளது. அந்தத் தேர்வுகளைக் கேள்விக்குள்ளாக்கும் கலைஞனின் சுதந்திர வேட்கையும் சமூக முன்னெடுப்பும் தணியாத ஆவலும் இவற்றில் காணக் கிடைக்கின்றன."[4]

2011ல் வெளியான அறம் சிறுகதை தொகுதி நிஜத்தில் வாழ்ந்த மனிதர்களை, அவர்களின் உயர்விழுமியங்களை பற்றி பேசுவது.

மார்ச் 2020, கொரோனா பரவலின் போது வீடடங்கில் இருந்த காலக்கட்டத்தில் புனைவு களியாட்டு சிறுகதைகள் என்று 100 சிறுகதைகளை தொடர்ச்சியாக தன் வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இலக்கிய பார்வை

திரைப்பட பணி

  1. https://www.jeyamohan.in/about/
  2. https://www.jeyamohan.in/about/
  3. https://www.jeyamohan.in/about/
  4. https://www.jeyamohan.in/454/