being created

ஜெயமோகன்: Difference between revisions

From Tamil Wiki
Line 53: Line 53:
====== நாவல்கள் ======
====== நாவல்கள் ======


* ரப்பர், முதல் பதிப்பு, 1990, ‘தாகம்’ [தமிழ்ப் புத்தகாலயம்], சென்னை. புதிய பதிப்பு, 2005, கவிதா பதிப்பகம், கோவை.  
* ரப்பர், முதல் பதிப்பு-1990, ‘தாகம்’ [தமிழ்ப் புத்தகாலயம்], சென்னை. புதிய பதிப்பு-2005, கவிதா பதிப்பகம், கோவை.
* விஷ்ணுபுரம், முதல் பதிப்பு, 1997, அகரம் சிவகங்கை. புதிய பதிப்பு, 2006, கவிதா பதிப்பகம், கோவை.
* விஷ்ணுபுரம், முதல் பதிப்பு-1997, அகரம் சிவகங்கை. புதிய பதிப்பு-2006, கவிதா பதிப்பகம், கோவை.
* பின்தொடரும் நிழலின் குரல், முதல் பதிப்பு, 1999, தமிழினி, சென்னை.
* பின்தொடரும் நிழலின் குரல், முதல் பதிப்பு-1999, தமிழினி, சென்னை.
* [https://littamilpedia.org/index.php/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D) கன்னியாகுமரி], முதல் பதிப்பு, 2000, தமிழினி, சென்னை. புதிய பதிப்பு, 2006, கவிதா பதிப்பகம்.
* [https://littamilpedia.org/index.php/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D) கன்னியாகுமரி], முதல் பதிப்பு-2000, தமிழினி, சென்னை. புதிய பதிப்பு-2006, கவிதா பதிப்பகம்.
* காடு, முதல் பதிப்பு, 2003, தமிழினி, சென்னை. புதிய பதிப்பு, 2006, தமிழினி, சென்னை.  
* காடு, முதல் பதிப்பு-2003, தமிழினி, சென்னை. புதிய பதிப்பு-2006, தமிழினி, சென்னை.
* [https://littamilpedia.org/index.php/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D) ஏழாம் உலகம்], முதல் பதிப்பு, 2003, தமிழினி, சென்னை. இரண்டாம் பதிப்பு, 2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* [https://littamilpedia.org/index.php/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D) ஏழாம் உலகம்], முதல் பதிப்பு-2003, தமிழினி, சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* அனல்காற்று, முதல் பதிப்பு, 2009, தமிழினி, சென்னை.
* அனல்காற்று, முதல் பதிப்பு-2009, தமிழினி, சென்னை.
* இரவு, முதல்பதிப்பு, 2010, தமிழினி, சென்னை.
* இரவு, முதல்பதிப்பு-2010, தமிழினி, சென்னை.
* உலோகம், முதல் பதிப்பு, 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* உலோகம், முதல் பதிப்பு-2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* கன்னிநிலம், கயல்கவின் பதிப்பகம், சென்னை.  
* கன்னிநிலம், கயல்கவின் பதிப்பகம், சென்னை.  
* வெள்ளையானை, எழுத்து பிரசுரம், மதுரை.
* வெள்ளையானை, எழுத்து பிரசுரம், மதுரை.
Line 73: Line 73:


====== குறுநாவல்கள் ======
====== குறுநாவல்கள் ======
* ஜெயமோகன் குறுநாவல்கள், முதல் பதிப்பு, 2004, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு, 2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* ஜெயமோகன் குறுநாவல்கள், முதல் பதிப்பு-2004, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.


====== புதுக்காப்பியம் ======
====== புதுக்காப்பியம் ======
* கொற்றவை, முதல் பதிப்பு, 2005, தமிழினி, சென்னை. இரண்டாவது பதிப்பு, 2011, தமிழினி, சென்னை.
* கொற்றவை, முதல் பதிப்பு-2005, தமிழினி, சென்னை. இரண்டாவது பதிப்பு-2011, தமிழினி, சென்னை.


====== சிறுகதைத் தொகுப்புகள் ======
====== சிறுகதைத் தொகுப்புகள் ======
* திசைகளின் நடுவே, முதல் பதிப்பு, 1992, அன்னம் சிவகங்கை. புதிய பதிப்பு, 2004, கவிதா பதிப்பகம், சென்னை.  
* திசைகளின் நடுவே, முதல் பதிப்பு-1992, அன்னம் சிவகங்கை. புதிய பதிப்பு-2004, கவிதா பதிப்பகம், சென்னை.
* மண், முதல் பதிப்பு, 1993, ஸ்னேகா பதிப்பகம், சென்னை. புதிய பதிப்பு, 2004, கவிதா பதிப்பகம், சென்னை.  
* மண், முதல் பதிப்பு-1993, ஸ்னேகா பதிப்பகம், சென்னை. புதிய பதிப்பு-2004, கவிதா பதிப்பகம், சென்னை.
* ஆயிரங்கால் மண்டபம், முதல் பதிப்பு, 1998, அன்னம், சிவகங்கை. புதிய பதிப்பு, கவிதா பதிப்பகம், சென்னை.
* ஆயிரங்கால் மண்டபம், முதல் பதிப்பு-1998, அன்னம், சிவகங்கை. புதிய பதிப்பு, கவிதா பதிப்பகம், சென்னை.
* கூந்தல், முதல் பதிப்பு, 2003, கவிதா பதிப்பகம், கோவை.
* கூந்தல், முதல் பதிப்பு-2003, கவிதா பதிப்பகம், கோவை.
* ஜெயமோகன் சிறுகதைகள், முதல் பதிப்பு, 2004, உயிர்மை பதிப்பகம், இரண்டாம் பதிப்பு, 2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* ஜெயமோகன் சிறுகதைகள், முதல் பதிப்பு-2004, உயிர்மை பதிப்பகம், இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* நிழல்வெளிக்கதைகள் (தேவதைக் கதைகளும் பேய்க்கதைகளும்),  உயிர்மை பதிப்பகம், 2005, சென்னை, இரண்டாம் பதிப்பு, 2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* நிழல்வெளிக்கதைகள் (தேவதைக் கதைகளும் பேய்க்கதைகளும்), முதல் பதிப்பு-2005, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* விசும்பு– (அறிவியல் புனைகதைகள்), முதல்பதிப்பு, 2006, எனி இண்டியன் பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு, 2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* விசும்பு– (அறிவியல் புனைகதைகள்), முதல்பதிப்பு-2006, எனி இண்டியன் பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* ஊமைச்செந்நாய், முதல்பதிப்பு, 2008, உயிர்மை பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* ஊமைச்செந்நாய், முதல்பதிப்பு-2008, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
* அறம், (சிறுகதைத் தொகுப்பு) முதல் பதிப்பு, 2011, வம்சி புத்தகநிலையம், திருவண்ணாமலை.
* அறம், (சிறுகதைத் தொகுப்பு) முதல் பதிப்பு-2011, வம்சி புத்தகநிலையம், திருவண்ணாமலை.
* ஈராறுகால்கொண்டெழும் புரவி, சொல்புதிது பதிப்பகம்.  
* ஈராறுகால்கொண்டெழும் புரவி, சொல்புதிது பதிப்பகம்.  
* வெண்கடல், வம்சி பதிப்பகம், சென்னை.
* வெண்கடல், வம்சி பதிப்பகம், சென்னை.

Revision as of 09:45, 26 February 2022


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்

ஜெயமோகன் (ஏப்ரல் 22, 1962) இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர். உலகின் மிகப் பெரிய நாவலான வெண்முரசினை எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி ஆகிய மாபெரும் ஆளுமைகள் வரிசையில் வைத்துச் சிறப்பிக்கப்படுபவர். இவரின் எழுத்துக்களத்தின் முதன்மைக் கருக்களாக ஆன்மிகத் தேடலும் அற உசாவலும் உள்ளன. மேடைப் பேச்சாளர், இதழாளர் (சொல்புதிது), கலை, இலக்கியம், தத்துவம் சார்ந்த துறைகளில் கறாரான விமர்சகர், தமிழ்த் திரைத்துறையிலும் மலையாளத் திரைத்துறையிலும் கதை, திரைக்கதை, வசனம் முதலியவற்றை எழுதியவர். இவர் தமிழ், மலையாள பத்திரிகைகளில் எழுதும் முழுநேர எழுத்தாளர். இவருடைய முதல் நாவலுக்கு (ரப்பர் - 1990) ‘சம்ஸ்கிருதி சம்மான் விருது’ கிடைத்தது. நடுவண் அரசு இவரின் இலக்கியச் சேவையைப் பாராட்டி ‘பத்மஸ்ரீ’ விருதினை வழங்க முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைக் குறிப்புகள்

பிறப்பு

எஸ். பாகுலேயன் பிள்ளை - பி. விசாலாட்சி அம்மா தம்பதியினருக்கு ஏப்ரல் 22, 1962 இல் அருமனை அரசு மருத்துவமனையில் ஜெயமோகன் பிறந்தார்.

எழுத்தாளர் ஜெயமோகன் (இளமையில்)
எழுத்தாளர் ஜெயமோகன் (இளமையில்)
கல்வி

பத்மநாபபுரத்தில் ஒன்றாம் வகுப்பு படித்தார். இரண்டாம் வகுப்பினைக் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் என்ற ஊரில் அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றார். அதன்பின்னர் முழுக்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை அருமனை [நெடியசாலை] அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1978 இல் பள்ளிப் படிப்பை முடித்தார். பள்ளி நாட்களிலேயே எழுத ஆரம்பித்தார். முதல்கதை ‘ரத்னபாலா’ என்ற சிறுவர் இதழில் வெளிவந்தது.

சிறுவயதில் முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ. நூலகம், அருமனை அரசு நூலகம் ஆகியவைற்றைப் பெரிதும் பயன்படுத்தினார். அதன்பின்னர் திருவட்டாறு ஸ்ரீ சித்ரா நூலகத்தில் மலையாள நாவல்களைப் படித்தார்.

1979இல் புகுமுக வகுப்பில் வணிகவியல்துறையைத் தேர்ந்தெடுத்து மார்த்தாண்டம் [இப்போது நேசமணி நினைவு] கிறித்தவக் கல்லூரியில் பயின்றார். 1980 இல் நாகர்கோவில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். 1982 வரை பயின்றார். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யவில்லை.

பணி

1984 இல் கேரளத்தில் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியில் சேர்ந்தார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் குடும்பம் (நன்றி-விகடன்)
எழுத்தாளர் ஜெயமோகனின் குடும்பம் (நன்றி-விகடன்)
குடும்பம்

இவருடைய மனைவி பெயர் எஸ். அருண்மொழி நங்கை. தொலைபேசித் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். அவர் ‘பனி உருகுவதில்லை’ என்ற கட்டுரைத் தொகுப்பினை எழுதியுள்ளார். இவர்களுக்கு அஜிதன், சைதன்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பங்களிப்பு

முதல் படைப்பு

இவர் 1986 இல் காசர்கோட்டில் இருந்தபோது ‘நுரைக்குமிழி’ என்ற சிறுகதையை எழுதினார் அது ஜுலை 12, 1987இல் கல்கி பத்திரிகையில் வெளிவந்தது. அந்தக் கதை தாம்பத்திய பிரச்னையை மையப்படுத்தி எழுதப்பட்டதாகும். அப்போது இவருக்கு வயது 24 என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் ’கைதி’ என்ற கவிதை 1987 இல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த ‘கொல்லிப்பாவை’ இதழில் வெளியாயிற்று.

1987 இல் கணையாழியில் ‘நதி’ என்ற சிறுகதை அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. இதனைத் தொடர்ந்து நிகழ் இதழில் ‘படுகை’, ‘போதி’ முதலிய கதைகள் வெளிவந்தன. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியோர் இக்கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர்.

1988 இல் ‘ரப்பர்’ என்ற நாவலை எழுதினார். அதனை 1990 இல் அகிலன் நினைவுப் போட்டிக்காகச் சுருக்கி அனுப்பினார். அதற்கு விருது கிடைத்தது. தாகம் [தமிழ்ப் புத்தகாலயம்] அதை 1990இல் வெளியிட்டது.

இலக்கிய வாழ்க்கை

‘ரப்பர்’ நாவல் அந்த வெளியீட்டு விழாவில், ‘தமிழ் நாவல்கள் தொடர்கதைகள் அல்லது குறுநாவல்களாக உள்ளன. நாவல்களுக்குச் சிக்கலான ஊடு பிரதித்தன்மையும் தரிசன தளமும் தேவை என்று தமிழ் நாவல்களின் போதாமையைப் பற்றியும் அவற்றின் வடிவம் சார்ந்தும் இவர் உரையாற்றினார். அந்த உரை பல ஆண்டுகள் நீண்ட விவாதங்களை உருவாக்கியது. அதன் நீட்சியாகவே 1992 இல்  ‘நாவல்’ என்ற விமர்சன நூலை எழுதினார்.

இவர் தன்னுடைய வாசகர் குழுவை ஒருங்கிணைத்து ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ என்பதை ஆகஸ்ட் 2009இல் தொடங்கினார். இந்த அமைப்பு தமிழின் மூத்த படைப்பாளர்களைச் சிறப்பிக்கும் நோக்கோடு ஆண்டுதோறும் விஷ்ணுபுரம் இலக்கிய விருதினை நல்கி வருகிறது.

விருதுகள்

எழுத்தாளர் ஜெயமோகன்

இவருடைய முதல் நாவலுக்கு (ரப்பர் - 1990) ‘சம்ஸ்கிருதி சம்மான் விருது’ கிடைத்தது.

படைப்புகள்

எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்
நாவல்கள்
  • ரப்பர், முதல் பதிப்பு-1990, ‘தாகம்’ [தமிழ்ப் புத்தகாலயம்], சென்னை. புதிய பதிப்பு-2005, கவிதா பதிப்பகம், கோவை.
  • விஷ்ணுபுரம், முதல் பதிப்பு-1997, அகரம் சிவகங்கை. புதிய பதிப்பு-2006, கவிதா பதிப்பகம், கோவை.
  • பின்தொடரும் நிழலின் குரல், முதல் பதிப்பு-1999, தமிழினி, சென்னை.
  • கன்னியாகுமரி, முதல் பதிப்பு-2000, தமிழினி, சென்னை. புதிய பதிப்பு-2006, கவிதா பதிப்பகம்.
  • காடு, முதல் பதிப்பு-2003, தமிழினி, சென்னை. புதிய பதிப்பு-2006, தமிழினி, சென்னை.
  • ஏழாம் உலகம், முதல் பதிப்பு-2003, தமிழினி, சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • அனல்காற்று, முதல் பதிப்பு-2009, தமிழினி, சென்னை.
  • இரவு, முதல்பதிப்பு-2010, தமிழினி, சென்னை.
  • உலோகம், முதல் பதிப்பு-2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • கன்னிநிலம், கயல்கவின் பதிப்பகம், சென்னை.
  • வெள்ளையானை, எழுத்து பிரசுரம், மதுரை.
  • ‘வெண்முரசு’ நாவல் - மொத்தம் 26 பகுதிகள், – கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • கதாநாயகி, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • அந்த முகில் இந்த முகில், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • குமரித்துறைவி, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • குகை, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • நான்காவது கொலை, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
குறுநாவல்கள்
  • ஜெயமோகன் குறுநாவல்கள், முதல் பதிப்பு-2004, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
புதுக்காப்பியம்
  • கொற்றவை, முதல் பதிப்பு-2005, தமிழினி, சென்னை. இரண்டாவது பதிப்பு-2011, தமிழினி, சென்னை.
சிறுகதைத் தொகுப்புகள்
  • திசைகளின் நடுவே, முதல் பதிப்பு-1992, அன்னம் சிவகங்கை. புதிய பதிப்பு-2004, கவிதா பதிப்பகம், சென்னை.
  • மண், முதல் பதிப்பு-1993, ஸ்னேகா பதிப்பகம், சென்னை. புதிய பதிப்பு-2004, கவிதா பதிப்பகம், சென்னை.
  • ஆயிரங்கால் மண்டபம், முதல் பதிப்பு-1998, அன்னம், சிவகங்கை. புதிய பதிப்பு, கவிதா பதிப்பகம், சென்னை.
  • கூந்தல், முதல் பதிப்பு-2003, கவிதா பதிப்பகம், கோவை.
  • ஜெயமோகன் சிறுகதைகள், முதல் பதிப்பு-2004, உயிர்மை பதிப்பகம், இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • நிழல்வெளிக்கதைகள் (தேவதைக் கதைகளும் பேய்க்கதைகளும்), முதல் பதிப்பு-2005, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • விசும்பு– (அறிவியல் புனைகதைகள்), முதல்பதிப்பு-2006, எனி இண்டியன் பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • ஊமைச்செந்நாய், முதல்பதிப்பு-2008, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • அறம், (சிறுகதைத் தொகுப்பு) முதல் பதிப்பு-2011, வம்சி புத்தகநிலையம், திருவண்ணாமலை.
  • ஈராறுகால்கொண்டெழும் புரவி, சொல்புதிது பதிப்பகம்.
  • வெண்கடல், வம்சி பதிப்பகம், சென்னை.
  • உச்சவழு, நற்றுணை பதிப்பகம், சென்னை.
  • பிரதமன், நற்றுணை பதிப்பகம், சென்னை.
  • பத்து லட்சம் காலடிகள், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • ஆயிரம் ஊற்றுகள், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • மலை பூத்தபோது, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • தேவி, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • எழுகதிர், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • ஐந்து நெருப்பு, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • முதுநாவல், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • தங்கப்புத்தகம், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • ஆனையில்லா!, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • பொலிவதும் கலைவதும், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • வான் நெசவு, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • இரு கலைஞர்கள், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
ஆன்மிகம்/தத்துவம்
  • இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், முதல் பதிப்பு, 2002, தமிழினி பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • இந்தியஞானம், முதல்பதிப்பு, 2008, தமிழினி, சென்னை.
  • சிலுவையின் பெயரால், முதல்பதிப்பு உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • இந்துமதம் சில விவாதங்கள், சொல்புதிது பதிப்பகம், கடலூர்.
  • இந்து மெய்ம்மை, – விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • ஆலயம் எவருடையது?, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
அரசியல்
  • சாட்சிமொழி, முதல்பதிப்பு-2008, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • இன்றைய காந்தி, முதல்பதிப்பு-2009, தமிழினி, சென்னை.
  • அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்திய போராட்டம், முதல்பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • ஜனநாயகச் சோதனைச் சாலையில், முதல் பதிப்பு-2016, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட், மதுரை.
பண்பாடு / வரலாறு
  • பண்படுதல், முதல்பதிப்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • தன்னுரைகள், முதல்பதிப்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • எதிர்முகம், இணைய விவாதங்கள் முதல்பதிப்பு, 2006, தமிழினி, சென்னை,
  • கொடுங்கோளூர் கண்ணகி, [மொழியாக்கம்] முதல்பதிப்பு, 2005, தமிழினி, சென்னை.
  • பொன்னிறப்பாதை, சொல்புதிது பதிப்பகம், கடலூர்.
  • விதிசமைப்பவர்கள், கயல்கவின் பதிப்பகம், சென்னை.
  • ஆகவே கொலைபுரிக, கயல்கவின் பதிப்பகம், சென்னை.
  • சொல்முகம், நற்றுணை பதிப்பகம், சென்னை.
  • தனிக்குரல், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • தன்மீட்சி, தன்னறம் பதிப்பகம்.
  • அபிப்பிராய சிந்தாமணி (நகைச்சுவை கட்டுரைகள்), கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • சாதி: ஓர் உரையாடல், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • ஒருபாலுறவு, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • தன்னைக் கடத்தல், முதல் பதிப்பு - 2022, தன்னறம் நூல்வெளி, திருவண்ணாமலை.
வாழ்க்கை வரலாறு
  • சுரா: நினைவின் நதியில், உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • முன்சுவடுகள், உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • கமண்டல நதி (நாஞ்சில்நாடன் படைப்புலகம்), முதல் பதிப்பு, 2007, தமிழினி பதிப்பகம், சென்னை.
  • லோகி [லோகிததாஸ் நினைவு], முதல்பதிப்பு, 2008, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • கடைத்தெருவின் கலைஞன் [ஆ. மாதவன் பற்றி], முதல்பதிப்பு, 2010, தமிழினி, சென்னை.
இலக்கிய அறிமுகம்
  • சங்கச் சித்திரங்கள் [சங்க இலக்கிய அறிமுகம்], முதல் பதிப்பு, 2005, கவிதா பதிப்பகம். புதிய பதிப்பு, 2011, தமிழினி, சென்னை.
  • மேற்குச்சாளரம் [மேலை இலக்கிய அறிமுகம்], முதல்பதிப்பு, 2008, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • கண்ணீரைப் பின்தொடர்தல் [இருபத்திரண்டு இந்திய நாவல்கள்], முதல் பதிப்பு, 2006, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • நாவல், முதல் பதிப்பு, 1992, மடல் பதிப்பகம், பெங்களூர், இரண்டாம் பதிப்பு, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • பொன்னிறப்பாதை, சொல்புதிது பதிப்பகம், கடலூர்.
  • விதிசமைப்பவர்கள், கயல்கவின் பதிப்பகம், சென்னை.
  • சொல்முகம், நற்றிணை பதிப்பகம், சென்னை.
  • நவீனத்தமிழிலக்கிய அறிமுகம், முதல்பதிப்பு, 1998, காவ்யா, பெங்களூரு. மூன்றாம் பதிப்பு, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • எழுதும்கலை, முதல்பதிப்பு, 2008, தமிழினி, சென்னை.
  • எழுதுக, முதல் பதிப்பு - 2022, தன்னறம் நூல்வெளி, திருவண்ணாமலை.
இலக்கிய விமர்சனம்
  • ஆழ்நதியை தேடி, முதல் பதிப்பு, 2006, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • நவீனத்துவத்துக்குப் பின் தமிழ்க் கவிதை (தேவதேவனை முன்வைத்து), கவிதா பதிப்பகம், கோவை. 1999.
  • உள்ளுணர்வின் தடத்தில் [கவிதை விமர்சனம்], முதல் பதிப்பு, 2004, தமிழினி, சென்னை.
  • ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப்பார்வை, முதல்பதிப்பு, 2006, எனி இண்டியன் பதிப்பகம், சென்னை.
  • புதியகாலம் [இலக்கிய விமர்சனம்], முதல்பதிப்பு, 2009, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • பூக்கும் கருவேலம் (பூமணியின் படைப்புலகம்) தமிழினி, சென்னை.
  • ஒளியாலானது (தேவதேவனின் புனைவுலகம்) சொல்புதிது பதிப்பகம், சென்னை.
  • எழுதியவனைக் கண்டுபிடித்தல் (இலக்கியவிவாதக் கட்டுரைகள்), கயல்கவின் பதிப்பகம், சென்னை.
  • இலக்கிய முன்னோடிகள் வரிசை (ஏழு நூல்கள்), முதற்பதிப்பு, 2003, தமிழினி, சென்னை
  • நத்தையின் பாதை
  • இலக்கியத்தின் நுழைவாயிலில்
  • வாசிப்பின் வழிகள்
  • வணிக இலக்கியம்
அனுபவம்
  • வாழ்விலே ஒருமுறை, முதல் பதிப்பு, கவிதா பதிப்பகம், கோவை. இரண்டாம் பதிப்பு, 2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • நிகழ்தல் – (அனுபவக்குறிப்புகள்), 2007, முதல்பதிப்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • இன்று பெற்றவை [நாட்குறிப்புகள்], முதல் பதிப்பு, 2008, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு, முதல்பதிப்பு, 2007, வம்சி புக்ஸ், திருவண்ணாமலை.
  • நாளும்பொழுதும் [அனுபவக்குறிப்புகள்], நற்றிணை பதிப்பகம், சென்னை.
  • இவர்கள் இருந்தார்கள் (நினைவுக்குறிப்புகள்), நற்றிணை பதிப்பகம், சென்னை.
பயணம்
  • புல்வெளிதேசம் (ஆஸ்திரேலிய பயணக்கட்டுரை), முதல்பதிப்பு, 2008,  உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • குகைகளின் வழியே
  • இந்தியப் பயணம்
  • அருகர்களின் பாதை
  • ஜப்பான் ஒரு கீற்றோவியம்
  • நூறு நிலங்களின் மலை
நாடகம்
  • வடக்குமுகம், முதல் பதிப்பு, 2004, தமிழினி, சென்னை.
சிறுவர் இலக்கியம்
  • பனிமனிதன், முதல்பதிப்பு, 2002, கவிதா, கோவை. இரண்டாம் பதிப்பு, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • வெள்ளி நிலம்,  ஆனந்தவிகடன் பதிப்பகம், சென்னை.
  • உடையாள் (சிறுவர் புதினம்), விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
மொழிபெயர்ப்பு
  • இயற்கையை அறிதல் எமர்சன், முதல் பதிப்பு, தமிழினி, சென்னை. மறுபதிப்பு - 2022, தன்னறம் நூல்வெளி, திருவண்ணாமலை.
  • தற்கால மலையாளக் கவிதைகள், முதல் பதிப்பு, 1992, ஆல்பா வெளியீடு. இரண்டாம் பதிப்பு, 2004, காவ்யா, சென்னை.
  • இன்றைய மலையாளக் கவிதைகள், முதல் பதிப்பு, 2002, தமிழினி, சென்னை.
  • சமகால மலையாளக் கவிதைகள், முதல் பதிப்பு, 2005, தமிழினி, சென்னை.
தொகைநூல்கள்
  • அசோகமித்திரன் அறுபதாண்டு நிறைவுவிழா மலர், 1993, கனவு வெளியீடு.
  • சுந்தர ராமசாமி அறுபதாண்டு நிறைவுவிழா மலர், 1994, கனவு வெளியீடு.
  • இலக்கிய உரையாடல்கள் பேட்டிகள், முதல் பதிப்பு, 2005, எனி இண்டியன் பதிப்பகம், சென்னை.
மலையாளம்
  • நெடும்பாதையோரம், முதல்பதிப்பு, 2002, கரண்ட் புக்ஸ், திரிச்சூர்.
  • உறவிடங்கள், மாத்ருபூமி பதிப்பகம்,
  • நூறு சிம்ஹாசனங்கள், மாத்ருபூமி, கைரளி பதிப்பகங்கள்.
பொது
  • நலம் (ஆரோக்கியக் கட்டுரைகள்), 2008,

உசாத்துணை