ஜி. ராமச்சந்திரன்

From Tamil Wiki
Revision as of 21:58, 2 July 2022 by Ramya (talk | contribs) (Created page with "ஜி. இராமச்சந்திரன்(1904 – 1995) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். காந்திய சிந்தனையாளரும், சமூக சீர்திருத்தவாதியும், கல்வியாளரும் ஆவார். டி.எஸ். செளந்தரம் அம்மாவின் கணவர். == வாழ்க்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜி. இராமச்சந்திரன்(1904 – 1995) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். காந்திய சிந்தனையாளரும், சமூக சீர்திருத்தவாதியும், கல்வியாளரும் ஆவார். டி.எஸ். செளந்தரம் அம்மாவின் கணவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரையில் பிறந்தார். டி.வி. சுந்தரம் அய்யங்காரின் மகளான டி.எஸ். செளந்தரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விதவை மறுமணம், சாதிஒழிப்பு மணம், மொழி, மாநிலம கடந்து என அனைத்து வகையிலும் சீர்திருத்த மணமாக காந்தியின் ஆசியோடு இருவரின் திருமணம் நடந்தது.

சமூக செயற்பாட்டாளர்

காந்தியின் சீடர். கிராமப்பகுதிகளில் காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அரிஜன சேவை சங்கத்தைச் சேர்ந்தவர். டி. எஸ். சௌந்தரத்துடன் இணைந்து ஜி. இராமாச்சந்திரன், திண்டுக்கல் மாவட்டத்தின் சின்னாளப்பட்டி அருகமைந்த தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காந்திகிராமத்தில் 1947ல் காந்தி கிராம அறக்கட்டளையை நிறுவினர். இவ்வறக்கட்டளை மூலம் கிராமப்புற மக்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவச் சேவைகளை வழங்க பல சமூக சேவை நிறுவனங்கள் துவக்கப்பட்டது. அவைகளில் முதன்மையானது காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் ஆகும். காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் நிறுவிய ஜி. இராமச்சந்திரன், அதன் நிறுவனத் துணைவேந்தராக டிசம்பர் 9, 1976 - டிசம்பர் 8, 1979 முடிய பதவி வகித்தார். ஜி. இராமச்சந்திரன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின்(KVIC) பெருந்தலைவராகப் பணியாற்றியவர்.

உசாத்துணை