ஜி. நாகராஜன்

From Tamil Wiki
Revision as of 01:23, 23 January 2022 by Muthu kalimuthu (talk | contribs)

ஜி. நாகராஜன் (1-9-1929 – 19-2-1981) தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். இவர் எழுத்துக்கள் அடித்தள இருள் உலகை நோக்கிச் செல்லும் பார்வை கொண்டது . அது மனிதர்கள் மேல் அவநம்பிக்கையும் கசப்பின் சிரிப்பும் கொண்டது. முழுக்கமுழுக்க நவீனத்துவம் உருவாக்கிய வாழ்க்கை நோக்கு அது. நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். எழுதியது கொஞ்சம்தான் என்றாலும் அசலான புனைவுக்கலைஞன். கம்பீரமான உடல்மொழி கொண்டவர்.