under review

ஜி. நாகராஜன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
{{ready for review}}
{{ready for review}}
[[File:G.Nagarajan.jpeg|alt=ஜி. நாகராஜன்|thumb|ஜி. நாகராஜன்]]
[[File:G.Nagarajan.jpeg|alt=ஜி. நாகராஜன்|thumb|ஜி. நாகராஜன்]]
ஜி. நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 – ஃபெப்ரவரி 19, 1981) நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். இவர் எழுத்துக்கள் அடித்தள இருள் உலகை நோக்கி, அவைகளின் அறங்களுடன் காட்சிப்படுத்தியது. அது மனிதர்கள் மேல் அவநம்பிக்கையும் கசப்பின் சிரிப்பும் கொண்டது.  எழுதியது கொஞ்சம்தான் என்றாலும் அசலான புனைவுக்கலைஞன். கம்பீரமான உடல்மொழி கொண்டவர்.  
ஜி. நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 – ஃபெப்ரவரி 19, 1981) நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். இவர் எழுத்துக்கள் அடித்தள இருள் உலகை நோக்கி, அவைகளின் அறங்களுடன் காட்சிப்படுத்துகிறது. அது மனிதர்கள் மேல் அவநம்பிக்கையும், கசப்பின் சிரிப்பும் கொண்டது.  எழுதியது கொஞ்சம்தான் என்றாலும் அசலான புனைவுக்கலைஞன். கம்பீரமான உடல்மொழி கொண்டவர்.  

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 13: Line 13:
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:நாளை மற்றுமொரு நாளே.jpeg|alt=நாளை மற்றுமொரு நாளே|thumb|நாளை மற்றுமொரு நாளே]]
[[File:நாளை மற்றுமொரு நாளே.jpeg|alt=நாளை மற்றுமொரு நாளே|thumb|நாளை மற்றுமொரு நாளே]]
1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் குறத்தி முடுக்கு நாவலை வெளியிட்டார். பத்திரிகை நிருபருக்கும் பாலியல் தொழிலாளியான தங்கத்திற்கும் உள்ள உறவு பற்றியும், பொதுவாக நிகழும் பாலியல் தொழிலாளிகளின் சிக்கல்கள் பற்றியும் பேசியது நாவல். நாட்டில் நடப்பதை தான் விரும்பும் அளவு சொல்லமுடியவில்லை என்று வருத்தம் கொண்டார்.
1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் "குறத்தி முடுக்கு" நாவலை வெளியிட்டார். பத்திரிகை நிருபருக்கும் பாலியல் தொழிலாளியான தங்கத்திற்கும் உள்ள உறவு பற்றியும், பொதுவாக நிகழும் பாலியல் தொழிலாளிகளின் சிக்கல்கள் பற்றியும் பேசியது நாவல். நாட்டில் நடப்பதை தான் விரும்பும் அளவு சொல்லமுடியவில்லை என்று வருத்தம் கொண்டார்.

"நாளை மற்றுமொரு நாளே" 1974 ல் வெளியான நாவல். பதற்றமில்லாத நடையில் தமிழன் பார்க்க மறுக்கும் அவல இருள்களை கூறிய, பரபரப்பூட்டிய நாவல். இந்நாவல் உண்மை தாங்கி இருக்கும் ஒரு நாளின் சம்பவங்களின் தொகுப்பு. 'மனிதன் மகத்தான சல்லிப்பயல்' என்று அவர் சொன்னதன் அர்த்தங்கள் தான் இந்த நாவலின் பெரும் வியப்பாக விரிந்து நிற்கிறது.

Line 21: Line 21:
அவருடைய `கண்டதும் கேட்டதும்' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை `பித்தன் பட்டறை’ மூலம் 1971-ம் ஆண்டில் வெளியிட்டார்.
அவருடைய `கண்டதும் கேட்டதும்' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை `பித்தன் பட்டறை’ மூலம் 1971-ம் ஆண்டில் வெளியிட்டார்.

ஆங்கிலத்தில் சில கட்டுரைகள், “With fate conspires” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்காக எழுதியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் சில கட்டுரைகள், “With fate conspire” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்காக எழுதியிருக்கிறார்.
 
== இலக்கிய இடம், மதிப்பீடு ==
 
ஜி. நாகராஜன் இருண்ட கீழ்  உலகின் மிகையற்ற அழுத்தமான சித்திரத்தைப் பதிவு செய்தவர். மானுட உறவின் சாத்தியங்களை ஆராய்கிறார். அதன்மூலம் பெரிதும் கீழ் நடுத்தர மக்களுக்கு உரியதாக இருந்த தமிழிலக்கிய உலகில் அதிர்ச்சி அலைகளை எழுப்பினார்.
 
ஜெயமோகன் தமிழின் "குறிப்பிடத்தக்க நாவல்கள்" வரிசையில் "நாளை மற்றுமொரு நாளே",  "குறத்தி முடுக்கு" நாவல்களை வைக்கிறார்.

== நூல்கள்  ==
== நூல்கள்  ==

Revision as of 06:18, 24 January 2022

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

ஜி. நாகராஜன்
ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 – ஃபெப்ரவரி 19, 1981) நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். இவர் எழுத்துக்கள் அடித்தள இருள் உலகை நோக்கி, அவைகளின் அறங்களுடன் காட்சிப்படுத்துகிறது. அது மனிதர்கள் மேல் அவநம்பிக்கையும், கசப்பின் சிரிப்பும் கொண்டது. எழுதியது கொஞ்சம்தான் என்றாலும் அசலான புனைவுக்கலைஞன். கம்பீரமான உடல்மொழி கொண்டவர்.

பிறப்பு, கல்வி

ஜி.நாகராஜன், செப்டெம்பர் 1, 1929 அன்று தன் பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவதாக மதுரையில் பிறந்தார். மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் பி.கே.என். பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளையும் முடித்தார். மதுரைக் கல்லூரியில் படித்தபோது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சர் சி.வி. ராமனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றார். மதுரைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்துத் தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

ஜி. நாகராஜன் 1959ல் ஆனந்தாவை மணந்தார். ஆனந்தா தீ விபத்தில் இறந்து போனதால், 1962ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

நாளை மற்றுமொரு நாளே
நாளை மற்றுமொரு நாளே

1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் "குறத்தி முடுக்கு" நாவலை வெளியிட்டார். பத்திரிகை நிருபருக்கும் பாலியல் தொழிலாளியான தங்கத்திற்கும் உள்ள உறவு பற்றியும், பொதுவாக நிகழும் பாலியல் தொழிலாளிகளின் சிக்கல்கள் பற்றியும் பேசியது நாவல். நாட்டில் நடப்பதை தான் விரும்பும் அளவு சொல்லமுடியவில்லை என்று வருத்தம் கொண்டார்.

"நாளை மற்றுமொரு நாளே" 1974 ல் வெளியான நாவல். பதற்றமில்லாத நடையில் தமிழன் பார்க்க மறுக்கும் அவல இருள்களை கூறிய, பரபரப்பூட்டிய நாவல். இந்நாவல் உண்மை தாங்கி இருக்கும் ஒரு நாளின் சம்பவங்களின் தொகுப்பு. 'மனிதன் மகத்தான சல்லிப்பயல்' என்று அவர் சொன்னதன் அர்த்தங்கள் தான் இந்த நாவலின் பெரும் வியப்பாக விரிந்து நிற்கிறது.

அவருடைய முதல் கதையான `அணுயுகம்’ 8-06-1957 தேதியுடைய `ஜனசக்தி' வார மலரில் வெளியானது. அவருடைய ஆரம்பகாலப் படைப்புகள் எல்லாமே கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய `ஜனசக்தி', `சாந்தி', `சரஸ்வதி' போன்ற இதழ்களில்தான் வெளியாகின.

அவருடைய `கண்டதும் கேட்டதும்' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை `பித்தன் பட்டறை’ மூலம் 1971-ம் ஆண்டில் வெளியிட்டார்.

ஆங்கிலத்தில் சில கட்டுரைகள், “With fate conspire” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்காக எழுதியிருக்கிறார்.

இலக்கிய இடம், மதிப்பீடு

ஜி. நாகராஜன் இருண்ட கீழ் உலகின் மிகையற்ற அழுத்தமான சித்திரத்தைப் பதிவு செய்தவர். மானுட உறவின் சாத்தியங்களை ஆராய்கிறார். அதன்மூலம் பெரிதும் கீழ் நடுத்தர மக்களுக்கு உரியதாக இருந்த தமிழிலக்கிய உலகில் அதிர்ச்சி அலைகளை எழுப்பினார்.

ஜெயமோகன் தமிழின் "குறிப்பிடத்தக்க நாவல்கள்" வரிசையில் "நாளை மற்றுமொரு நாளே", "குறத்தி முடுக்கு" நாவல்களை வைக்கிறார்.

நூல்கள்

நாவல்கள்

குறத்தி முடுக்கு', 'நாளை மற்றும் ஒரு நாளே' ஆகிய இரண்டு குறு நாவல்களும் 17 சிறுகதைகளுமே எழுதியுள்ளார். அதே போல ஆங்கிலத்தில் கட்டுரைகளும், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.

  • குறத்தி முடுக்கு 1963
  • நாளை மற்றும் ஒரு நாளே 1974
சிறுகதைகள்
  • எங்கள் ஊர்
  • டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
  • யாரோ முட்டாள் சொன்ன கதை
  • தீராக் குறை
  • சம்பாத்தியம்
  • பூர்வாசிரமம்
  • அக்கினிப் பிரவேசம்
  • நான் புரிந்த நற்செயல்கள்
  • கிழவனின் வருகை
  • பூவும் சந்தனமும்
  • ஜீரம்
  • போலியும் அசலும்
  • துக்க விசாரனை
  • மனிதன்
  • இலட்சியம்
  • ஓடிய கால்கள்
  • நிமிஷக் கதைகள்
ஆங்கிலம்
  • With fate conspire (included in ஜி. நாகராஜன் ஆக்கங்கள் நூல், published in Nagercoil, 2007)

மொழியாக்கங்கள்

ஆங்கிலம், பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகள்

  • Tomorrow is one more day - 2018 (Penguin Publisher)
  • Le vagabond et son ombre: G. Nagarajan - 2020 (Institut français de Pondichéry)

உசாத்துணை

https://books.openedition.org/ifp/3242?lang=en#ftn9