under review

ச. சாமிமுத்து: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text:  )
No edit summary
 
Line 81: Line 81:
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0lZh9&tag=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%2C+%E0%AE%9A.#book1/ தமிழ் இலகிய வரலாறு: ச. சாமிமுத்து: தமிழ் இணைய மின்னூலகம்]  
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0lZh9&tag=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%2C+%E0%AE%9A.#book1/ தமிழ் இலகிய வரலாறு: ச. சாமிமுத்து: தமிழ் இணைய மின்னூலகம்]  
* கிறித்தவக் காப்பியங்கள்- முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதல் பதிப்பு, 2013.
* கிறித்தவக் காப்பியங்கள்- முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதல் பதிப்பு, 2013.
<br />{{Finalised}}


{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 17:36, 17 August 2023

ச. சாமிமுத்து (சவரிமுத்து சாமிமுத்து) (சாது) (நவம்பர் 1,1931-2021) எழுத்தாளர். கவிஞர். ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய பல நூல்களை, ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். கிறிஸ்தவம் சார்ந்து பல நூல்களை எழுதினார். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை ‘ஆதியாகம காவியம்’ என்ற தலைப்பில் காப்பியமாக இயற்றினார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

ச. சாமிமுத்து, நவம்பர் 1, 1931-ல், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அ.வெள்ளோடு என்னும் கிராமத்தில், சவரிமுத்து-மங்களம் இணையருக்குப் பிறந்தார். திண்டுக்கல் தூய மரியன்னை பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளியல் பட்டம் பெற்றார். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில், ‘சின்ன சவேரியர் ஆக்கிய தமிழ் உரைநடை நூல்கள் - ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ச. சாமிமுத்து, 1960 முதல் 1978 வரை, தேசிய மாணவர் படையில் அதிகாரியாகப் பணியாற்றினார். மனைவி: கிளாரா மேரி. இவர்களுக்கு ஐந்து மகன்கள். ஒரு மகள்.

கல்விப் பணிகள்

ச. சாமிமுத்து, 1958-ல், திருச்சி தூய வளனார் கல்லூரியில் (அன்று தூய சூசையப்பர் கல்லூரி) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். துறைத் தலைவர் , துணைமுதல்வர் எனப் பல்வேறு பதவிகளை வகித்து, 1990-ல் பணி ஓய்வு பெற்றார். பல மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகச் செயல்பட்டார்.

தமிழ் இலக்கிய வரலாறு - பேராசிரியர் ச. சாமிமுத்து

இலக்கிய வாழ்க்கை

ச. சாமிமுத்து சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு நூல்கள், இலக்கிய நூல்கள் எனப் பல நூல்களை எழுதினார். அவற்றுள் 1500 கவிதைகள், 200 கட்டுரைகள், 30 நாடகங்கள், தமிழ் இலக்கிய வரலாறு போன்றவையும் அடக்கம். ச. சாமிமுத்து, சிறந்த மேடைப் பேச்சாளராக விளங்கினார். பல கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். பட்டிமன்றங்கள், இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பதிப்பு

ச. சாமிமுத்து, மனோன்மணீயம் உள்ளிட்ட சில நூல்களைப் பதிப்பித்தார். நூல்களைப் பதிப்பிப்பதற்காக கிளாரா பதிப்பகம் என்ற பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார்.

அமைப்புப் பணிகள்

  • ச. சாமிமுத்து, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக தமிழ் இலக்கிய ஆய்வுப் பண்ணையை நிறுவினார்.
  • தூய வளனார் கல்லூரியில் (அன்றைய தூய சூசையப்பர் கல்லூரி) கிறிஸ்தவ இலக்கிய வளர்ச்சிக்காகப் பல்வேறு கருத்தரங்குகளை நடத்தினார். பல கூட்டங்களை நடத்தினார். கிறித்தவ ஆய்வு மையம் மூலம் கிறிஸ்தவ இலக்கிய ஆய்வு மாணவர்களை ஒருங்கிணைத்தார்.

விருதுகள்

  • முத்தமிழ் மாமணி
  • தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
  • கிறிஸ்தவ இலக்கியச் செம்மல்

மதிப்பீடு

ச. சாமிமுத்து பொது வாசிப்புகுரிய சிறுகதை, நாவல், நாடகங்களை எழுதினார். தமிழ்ப் பேராசிரியர் என்ற வகையில் இலக்கிய, இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார். அவற்றில் தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் கல்லூரி மாணாக்கர் இலக்கண நூல் ஆகியன குறிப்பிடத் தகுந்தன. சாமிமுத்துவின் இலக்கிய ஆய்வுப் பணிகளில் முக்கியமானது, வீரமாமுனிவரைத் தொடர்ந்து இத்தாலியிருந்து இந்தியா வந்து மதம் மற்றும் கல்விப் பணிகளை மேற்கொண்ட, சின்ன சவேரியார் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் தாமஸ் தே ரோசி அடிகளின் (Rev. Fr. James Thomas de Rosi) வாழ்க்கையையும், அவரது நூல்கள் பற்றிய விவரங்களையும் ஆய்வு செய்து வெளிப்படுத்தியதுதான். ஆதியாகம காவியம் நூலும், சின்ன சவேரியார் நூல்கள் பற்றிய திறனாய்வும், ச. சாமிமுத்து, கிறித்தவ இலக்கியத்திற்கு அளித்த கொடையாக, கிறித்தவ இலக்கிய ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகின்றன.

மறைவு

ச. சாமிமுத்து, 2021-ல், காலமானார்.

அறக்கட்டளை

பேராசிரியர் ச. சாமிமுத்து நினைவாக அவர் குடும்பத்தினர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பல்வேறு இலக்கியப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • நிழல்தரும் நெஞ்சங்கள்
  • அலைகடல்கரையினிலே
  • இருவிவிலிய அருட்காட்டிக் கவிதைகள்
சிறுகதைத் தொகுப்பு
  • ச. சாமிமுத்து சிறுகதைகள் தொகுப்பு
  • உறங்காத உறவுகள்
நாவல்
  • வழக்கறிஞன்
நாடகம்
  • கார்காலம் - மூன்று நாடகங்கள்
  • நெஞ்சத்தின் நிறங்கள்
கட்டுரை/இலக்கிய ஆய்வு நூல்கள்
  • இலக்கியச் சொற்பொழிவுக் கட்டுரைகள்
  • சுவைக் கோவை-இலக்கியக் கட்டுரைத் தொகுப்பு
  • தமிழ் வளர்த்த வேதநாயகர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தமிழ் இலக்கியவரலாறு
  • சின்ன சவேரியார் ஆக்கிய உரைநடைகள் பற்றிய திறனாய்வு
  • ஆதியாகம காவியம்
  • சீறாப்புராணம் - கட்டுரைத் தொகுப்பு
  • கல்லூரி மாணாக்கர் இலக்கண நூல்
  • தேன்சொட்டும் தேம்பாவணிச் சோலை
பதிப்பு

உசாத்துணை


✅Finalised Page