செந்தமிழ் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 09:32, 17 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|செந்தமிழ் செந்தமிழ் - இதழ் வெளிவந்த ஆண்டு (1902) தமிழாய்வுகளுக்கான இதழ். நூறாண்டுகளுக்கும் மேலாக மாதம் தோறும் வெளிவந்தது == வெளியீடு == மதுரையில் பாண்டித்துரைத்தேவர் தொடங...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
செந்தமிழ்

செந்தமிழ் - இதழ் வெளிவந்த ஆண்டு (1902) தமிழாய்வுகளுக்கான இதழ். நூறாண்டுகளுக்கும் மேலாக மாதம் தோறும் வெளிவந்தது

வெளியீடு

மதுரையில் பாண்டித்துரைத்தேவர் தொடங்கிய நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில் 7- டிசம்பர் 1902 முதல் வெளிவரும் இதழ் இது. ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்த 12 இதழ்களைத் தொகுப்பாக்கித் தரமாகக் கட்டகம் செய்து விற்பனை செய்துள்ளது. மதுரை தமிழ்ச்சங்க முத்திசாசாலையில் இருந்து பத்திராதிபர் திரு,நாராயணையங்கார் இதை வெளியிட்டுள்ளார்

உள்ளடக்கம்

செந்தமிழில் தமிழ் ஆய்வுகளுடன் சம்ஸ்கிருத ஆய்வுகளும் வெளிவந்தன. நாராயணஸ்வாமி ஐயர் எழுதிய சமஸ்க்கிருத விருந்த மஞ்சரி போன்றவை இடம் பெற்றுள்ளன. சீனிவாசப் பிள்ளை எழுதியுள்ள தமிழ் வரலாறு போன்ற கட்டுரைகள் உள்ளன.தனி நூலாக வெளிவராத பல பழமையான தமிழ் இலக்கியங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. இரணியவதைப் பரணி என்னும் நூல் அவற்றுள் ஒன்று.சங்கத் தமிழ் நூல்கள் விளக்கம், தமிழ்ப் புலவர்கள் குறிப்பு, தமிழ்த் தேர்வு விபரம், பல்சுவைக் குறிப்புகளை வெளியிட்டது.

உசாத்துணை