being created

சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

From Tamil Wiki
Revision as of 03:32, 10 April 2024 by Tamizhkalai (talk | contribs)

சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர் (S.A.Vengada Subburaya Nayagar) (பிறப்பு: 1963) எ புதுச்சேரியில் வசித்து வரும் . ஆன்டன் செகாவ், ஆல்ஃபர் காம்யூ, ஹினர் சலீம், தாஹர் பென் ஜீலோவ்ன், லூயி பஸ்தேர் போன்ற பல பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகளை பிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்தார். குறுந்தொகை, ஐங்குறுநூறு. சங்க இலக்கியங்களை பிரஞ்சில் மொழியாக்கம் செய்தார். ஃப்ரான்ஸ் அரசின் ரோமன் ரோலந்த் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

சு. ஆ .வெங்கட சுப்புராய நாயகர், ஏப்ரல் 3, 1963-ல் புதுச்சேரியில் பிறந்தார்மு. சு. ஆறுமுக நாயகர் – ராஜரத்தினம் அம்மாள் இணையருக்குப் பிறந்தார்.. புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் பிரெஞ்சு முதுகலைப் பட்டமும், புதுவைப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு ஆய்வறிஞர் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

பிரெஞ்சு - தமிழ் இலக்கியப் பரிவர்த்தனை எனும் தலைப்பில் சாகித்திய அகாதமியின் ஆய்வுத்திட்டப் பணியினை மேற்கொண்டார். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளில் 130-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் பல தேசிய, சர்வதேச ஆய்வரங்குகளில் வழங்கியுள்ளார். 1994, 2008, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் பிரான்ஸ் சென்று, பிரஞ்சுஅரசின் உதவியுடன் பிரான்ஸில் சில மாதங்கள் பயிற்சியும், நூலகங்களில் ஆய்வும், மொழியாக்கப்பணிகளும் மேற்கொண்டார்.

இதுவரை நான்கு புதினங்களைப் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்துள்ளார். இரு பிரெஞ்சுச் சிறுகதைகளின் மொழியாக்கத் தொகுப்புகளை வெளியிட்டார். தமிழிலிருந்து கதைகள், கவிதைகள் போன்றவற்றையும் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்துள்ளார். சங்க இலக்கியங்களான குறுந்தொகை, ஐங்குறுநூறு இரண்டையும் முழுமையாகப் பிரெஞ்சில் மொழிபெயர்த்தது அவரது பணிகளில் குறிப்பிடத்தக்கது .மேலும் இவர் இடையிடையே பிரெஞ்சு அரசின் ஆதரவுடன் அந்நாட்டுக்குச் சென்று தங்கிப் பல மொழிபெயர்ப்புப் பணிகளையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

விருதுகள், பரிசுகள்

  • இளங்கலை பிரெஞ்சு பட்டத்தில் உயர்ந்த மதிப்பெண்கள்
  • முதுகலை பிரெஞ்சு பட்டத்தில் உயர்ந்த மதிப்பெண்கள்(1987)
  • சிறந்த பிரெஞ்சு கல்வியாளர் விருது, 2012.
  • ‘ஆல்ஃபர் காம்யூ விருது’, புதுச்சேரி, 2013
  • மொழிபெயர்ப்புக்கான ‘ஈரோடு தமிழன்பன் விருது’, புதுச்சேரி, 2014.
  • மொழிபெயர்ப்பு மாமணி விருது’, 2018.
  • மொழிபெயர்ப்புக்கான ஸ்பாரோ இலக்கிய விருது, 2020.
  • ரோமன் ரோலண்ட் புத்தக விருது, பிரெஞ்சு அரசு, 2021.
  • தமிழ்ச்சங்க விருது’, புதுவை தமிழ்ச்சங்கம், 2021.
  • இல்லாரா உத்தியானா ட்யூப்யூஸ் விருது’, இறை ஊழியர் லூயில் சவேனியன் ட்யூப்பூஸ் வரலாற்றுச் சங்கம், புதுச்சேரி, 2021.
  • மொழிபெயர்ப்புக்கான நல்லி – திசை எட்டும் விருது, 2022.
  • மொழிபெயர்ப்புக்கான நல்லி – திசை எட்டும் விருது, 2022.

இலக்கிய இடம்

'கலகம் செய்யும் இடது கை' சிறுகதைத் தொகுப்பின் அணிந்துரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் “வெங்கட சுப்புராய நாயகரின் மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்ககூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கியத் தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கியப் பணி. வெங்கட சுப்புராய நாயகர் அதைச் செய்திருக்கிறார்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல்கள்

தமிழிலிருந்து பிரஞ்ச்
  • ‘Destination: le tamoul parlé’, with an audio CD. April 2008. Published by Astarté Publicaions. Pondicherry.
  • பிரஞ்சு மக்கள் பேச்சுத்தமிழ் கற்க உதவும் கையேடு, குறுந்தகடுடன்.
பிரஞ்சிலிருந்து தமிழ்
  • புதுச்சேரி பொது அறிவு வினா விடை - நயாகரா பதிப்பகம், புதுச்சேரி, 2009.
  • கலகம் செய்யும் இடது கை – (பிரெஞ்சு கதைகளின் மொழியாக்கம்), நற்றிணை பதிப்பகம், சென்னை, 2012.
  • அத்தையின் அருள் - கண்ணம்மா பதிப்பகம், புதுச்சேரி, 2013.
  • அப்பாவின் துப்பாக்கி - ஹினர் சலீம், (பிரெஞ்சிலிருந்து தமிழில்), காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், 2013,
  • கடவுள் கற்ற பாடம் – (பிரஞ்சு கதைகளின் மொழியாக்கம்), நற்றிணை பதிப்பகம், சென்னை, 2015.
  • சூறாவளி - லெகிளெஸியோ, (பிரெஞ்சிலிருந்து தமிழில்), காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், 2015.
  • ஃபுக்குஷிமா - மிக்காயேல் ஃபெரியே, (பிரெஞ்சிலிருந்து தமிழில்), தடாகம் பதிப்பகம், சென்னை. 2016.
  • விரும்பத்தக்கஉடல் - ஹூபெர் ஹதார், (பிரஞ்சிலிருந்து தமிழில்),  காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், 2018.
  • ஆன்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள், தடாகம் பதிப்பகம், சென்னை, 2019.
  • உல்லாசத்திருமணம் - தாஹர் பென் ஜீலோவ்ன், தடாகம் பதிப்பகம், சென்னை. 2020.
  • வாழ்வு… இறப்பு… வாழ்வு… - (லூயி பஸ்தேரின் வாழ்க்கை வரலாறு), தடாகம் பதிப்பகம், சென்னை, 2020.
  • வீழ்ச்சி – அல்பர் கமுய், (பிரெஞ்சிலிருந்து தமிழில்), காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், 2021.
  • தண்டனை - தாஹர் பென் ஜீலோவ்ன், (பிரெஞ்சிலிருந்து தமிழில்), தடாகம் பதிப்பகம், சென்னை, 2022.



உசாத்துணை










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.