சுவாமிநாத பண்டிதர்: Difference between revisions

From Tamil Wiki
(சுவாமிநாத பண்டிதர்)
 
Line 26: Line 26:
== மறைவு ==
== மறைவு ==
இவர் 1937 ஆம் ஆண்டு மறைந்தார் என்று சொல்லப்படுகிறது.
இவர் 1937 ஆம் ஆண்டு மறைந்தார் என்று சொல்லப்படுகிறது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

* யாழ்ப்பாணத்து தமிழறிஞர்கள்
* [https://www.thejaffna.com/eminence/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d யாழ்ப்பாணத்து தமிழறிஞர்கள்]
* [https://www.tamildigitallibrary.in/book-search.php?tag=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88 பதிப்பித்த நூல்கள்]

Revision as of 15:20, 6 March 2022

சுவாமி நாத பண்டிதர் என்று அழைக்கப்படும் இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த இவர் சைவ நூல்களை அச்சில் கொண்டு வந்த முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

தம்பையாப் பிள்ளை என்ற இயர்பெயர் கொண்ட இவர் யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள வண்ணார்பண்ணை என்னும் ஊரில் சின்னத்தம்பிப் பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.

இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் ஆரம்பக் கல்வி கற்றார். பின் ஆறுமுக நாவலரின் மருமகனும் பெரும் புலவருமான ந. ச. பொன்னம்பலபிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். பின் அவருடன் சில காலம் இலங்கையில் உள்ள சைவக்கோவில்களுக்கு புராணம் பாடச் சென்றார்.

பங்களிப்புகள்

நூல்கள்.png

இவர் சென்னைக்கு வந்து 1905 ஆம் ஆண்டு சைவவித்தியாநுபாலன அச்சுக்கூடம் என்னும் அச்சகம் ஒன்றை உருவாக்கி சைவ நூல்களை வெளியிட ஆரம்பித்தார். முதன்முதலில் திருவாதவூரடிகள் புராணம் என்ற நூலை 1906 ஆம் ஆண்டு வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.

பதிப்பித்த நூல்கள்

  • சிவஞான போத மாபாடியம்
  • திருக்கோவையார் உண்மை
  • தேவார அடங்கன்முறை
  • திருவிளையாடற் புராணம்
  • குமரகுருபரர் பிரபந்தம்
  • சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தம்

மற்றவை

இவர் சைவ சமயத்தின் மேல் பற்று கொண்டு பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் திருச்செந்தூரில் சுப்பிரமணிய வித்யாசாலை என்றப் பள்ளியை ஏற்படுத்தப் பொருள் உதவிகள் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

தருமபுர ஆதீனத்தினத்தாரால் வெளியிடப்பட்ட பல நூல்கள் இவரின் மேற்பார்வையின்கீழ் வெளியிடப்பட்டன. இவருக்கு தருமபுர ஆதீனம் வித்வத்சிரோமணி என்ற பட்டம் வழங்கியது.

மறைவு

இவர் 1937 ஆம் ஆண்டு மறைந்தார் என்று சொல்லப்படுகிறது.

உசாத்துணை