சுரதா

From Tamil Wiki
Revision as of 22:48, 23 September 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "சுரதா ( ) தமிழ்க் கவிஞர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என அறியப்பட்டவர்களில் ஒருவர். மரபுக்கவிதைகள் எழுதியவர். உவமைக்கவிஞர் என அழைக்கப்பட்டார். திரைப்படப் பாடல்களும் எழுதிய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுரதா ( ) தமிழ்க் கவிஞர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என அறியப்பட்டவர்களில் ஒருவர். மரபுக்கவிதைகள் எழுதியவர். உவமைக்கவிஞர் என அழைக்கப்பட்டார். திரைப்படப் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

சுரதாவின் இயற்பெயர் த. இராசகோபாலன். பழைய தஞ்சை மாவட்டத்தில் பழையன்னூர் என்னும் ஊரில் அர.திருவேங்கடம் - சண்பகம் இணையருக்கு 23 நவம்பர் 1921 ல் பிறந்தார்.இவருக்கு ஒரு தமக்கை, வேதவல்லி.

இராஜாமடம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் இலவச மாணவர்விடுதிகளில் தங்கி பள்ளியிறுதி வரை கல்வி பயின்ற சுரதா ஆறுமுக பத்தர், சிங்காரவேலு நயினார், மெய்யக்கோனார், அரங்கசாமிப் பிள்ளை, கோவிந்தராச நாட்டார், சாமி வேலாயுதம் பிள்ளை போன்றவர்களிடம் தமிழ் கற்றார். சீர்காழி அருணாச்சல தேசிகரிடம் தமிழிலக்கணம் பயின்றார்.

தனிவாழ்க்கை

சுரதா தன் 18 ஆம் வயதில் பாரதிதாசனை புதுச்சேரிக்குச் சென்று சந்தித்தார். சிலகாலம் பாரதிதாசனிடம் உதவியாளராக இருந்தார். இதழியலிலும் திரைத்துறையிலும் பணியாற்றிய சுரதா முழுக்க முழுக்க எழுத்தைச் சார்ந்தே வாழ்ந்தார்.