second review completed

சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in template)
No edit summary
Line 90: Line 90:


* மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).
* மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).
{{First review completed}}
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]

Revision as of 21:42, 3 February 2024

பள்ளிச்சின்னம்

சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி மலேசியாவில் கோலாலம்பூரில் ஜாலான் கம்போங் செலாமட், சுங்கை பீசியில் அமைந்துள்ளது. சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி அரசாங்க முழு உதவி பெறும் பள்ளி. இப்பள்ளியின் பதிவு எண் WBD 0193.

வரலாறு

பழையக்கட்டடம்

சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி 1960 -ன் தொடக்கத்தில் செயல்படத்தொடங்கியதாக அறியப்படுகின்றது. கம்போங் கூயோவில் வாழ்ந்த மக்கள் தங்கள் குழந்தைகள் கல்வி பெற வேண்டுமென சிறிய பலகைக்குடிலை அமைத்தனர். தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஏழுமலை என்பவரைக் கொண்டு மூன்று மாணவர்களுடன் சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி செயல்படத் தொடங்கியது. 1964 -ல் பள்ளி தீயினால் சேதமடைந்தது. மாணவர்கள் அருகிலிருந்த சீனப்பள்ளியில் பயில அனுமதிக்கப்பட்டனர்.

புதிய பள்ளி

பள்ளிப் புதியக்கட்டடம்

1967-லிருந்து 1968-க்குள் பெற்றோர்களின் முயற்சியில் நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் எழும்பியது. பள்ளியில் 150 மாணவர்கள் இருந்தனர். சுங்கை பீசி தமிழ்ப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர் சி. வேலுசுவாமி. ஜூன் 10, 2000 -ல் இப்பள்ளி  மீண்டும் தீவிபத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டது.

அரசாங்க உதவி

தங்கள் பிள்ளைகளின் கல்வி தடைப்படுவதைத் தடுக்கவும் வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத்தைப்பெறுவதற்கும் பெற்றோர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். 2001-ல் அரசாங்க மானியத்தில்  சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்தைப் பெற்றது. இதில் தலைமையாசிரியர் அறை, துணைத்தலைமையாசிரியர் அறை, வாழ்வியல் கல்வி அறை, அறிவியல் அறை, வகுப்பறைகள், கழிவறைகள் ஆகிய அனைத்தும் இருந்தன. இக்காலக்கட்டத்தில் திருமதி ஆர். ராசம்மா பள்ளியின் தலைமைப் பொறுப்பேற்றார்.

இன்றைய நிலை

தலைமையில் பல மாற்றங்களோடு சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. 2019-ல் சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி உருமாற்றப்பள்ளித் திட்டத்தில் (TS25) இணைக்கப்பட்டது.

தலைமையாசிரியர் பட்டியல்

எண் பெயர் ஆண்டு
1.    சி. வேலுசுவாமி 1972
2. பெரியசாமி 1973 - 1975
3. ஆசிர்வாதம் 1976 - 1979
4. அ.ரங்கநாதன் 1980
5. ராமு 1981 - 1986
6. அம்பிகாபதி 1987 - 1990
7. ராமசாமி 1991 - 1996
8. சுப்ரமணியம் 1997 - 1998
9. ராவணா 1999
10. முனியாண்டி 2000
11. ஆர்.ராசம்மா 2001 - 2008
12. சி. மாரியம்மாள் 2008 - 2013
13. சா. லெட்சுமி 15 அக்டோபர் - 28 பிப்ரவரி 2017
14 ரா. ரத்தினம்மாள் 1 மார்ச் - 31 மே 2018
15 மு. உதயசுந்தரி 1 ஜூன் 2018 - 15 ஜனவரி 2023
16 வே.பாமா 16 ஜனவரி 2023 - தற்போது வரை

உசாத்துணை

  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.