under review

சீவகசிந்தாமணி, உ.வே.சா.பதிப்பு: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சீவகசிந்தாமணி உ.வே.சா பதிப்பு ( 1887) உ.வே.சாமிநாதையர் ஏட்டுச்சுவடிகளில் இருந்து பதிப்பித்த சீவகசிந்தாமணி. உ.வே.சாமிநாதையரின் முதல் பதிப்பு நூல் இது. சீவகசிந்தாமணிக்கு இதுவே முதல்...")
 
(Corrected error in line feed character)
 
(10 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
சீவகசிந்தாமணி உ.வே.சா பதிப்பு ( 1887) உ.வே.சாமிநாதையர் ஏட்டுச்சுவடிகளில் இருந்து பதிப்பித்த சீவகசிந்தாமணி. உ.வே.சாமிநாதையரின் முதல் பதிப்பு நூல் இது. சீவகசிந்தாமணிக்கு இதுவே முதல் முழுமையான பதிப்பு.
[[File:சீவகசிந்தாமணி.png|thumb|சீவகசிந்தாமணி 1887 ]]
 
சீவகசிந்தாமணி உ.வே.சா பதிப்பு (1887) உ.வே.சாமிநாதையர் ஏட்டுச்சுவடிகளில் இருந்து பதிப்பித்த சீவகசிந்தாமணி. உ.வே.சாமிநாதையரின் முதல் பதிப்பு நூல் இது. சீவகசிந்தாமணிக்கு இதுவே முதல் முழுமையான பதிப்பு.
== பதிப்பு முயற்சி ==
== பதிப்பு முயற்சி ==
[[உ.வே.சாமிநாதையர்]]  கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றுகையில் அவருக்கு அரியலூரிலிருந்து  கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்த சேலம் இராமசாமி முதலியாரிடம் அறிமுகம் ஏற்பட்டது. அவர் உ.வே.சாமிநாதையருக்கு ஐம்பெருங்காப்பியங்களைப் பற்றிச் சொல்லி சீவகசிந்தாமணியின் ஓர் இலம்பகத்தையும் அளித்தார். அவருக்கு பாடம்சொல்லும்பொருட்டு  சீவகசிந்தாமணியை பயின்ற உ.வே.சாமிநாதையர்  சமண நண்பர்களின் உதவியுடன் சமணமதத்தின் கருத்துக்களையும், திருத்தக்கதேவரின் வாழ்க்கையையும் பற்றி அறிந்துகொண்டார். பின்னர் அந்நூலை பதிப்பிக்க முயன்றார். சமணக் காப்பியத்தை பதிப்பிப்பதை சைவர்கள் எதிர்த்தபோது தமிழ்ப்பணியே முதன்மையானது, மதநம்பிக்கை அல்ல என்று தன் முடிவை முன்வைத்தார்

சிந்தாமணி பதிப்பே சாமிநாதையரின் முதல் பதிப்பு முயற்சி. ஏற்கனவே பவர் என்னும் ஆங்கிலேயர் பதிப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சுநூல் இருந்தது. தியாகராசசெட்டியார் தம்மிடமிருந்த பிரதியை அனுப்பி வைத்தார். சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலியிலிருந்து சில ஏட்டுப்பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். பல பிரதிகளையும் ஒப்பிட்டு, பாடபேதங்களைக் குறித்து நூலை செம்மைசெய்தார்.  சிந்தாமணியை முழுமையாக அச்சிடும்பொருட்டு சுவடிகளை மேலும் தேடி விருஷபதாச முதலியாரிடம்  சுவடிகளைப் பெற்றார். அவ்வாறாக சிந்தாமணியின் 23 நகல்களை உ.வே.சா. சேர்த்தார்

அன்றைய பதிப்புமுறை என்பது பதிப்பிக்கவிருக்கும் நூலை வாங்குவதாக செல்வந்தர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு நூலை அச்சிடுவது. உ.வே.சாமிநாதையர் தமிழார்வம் கொண்ட செல்வந்தர்களைச் சந்தித்து  ஆதரவு பெற்று  நூலை அச்சிட்டார். சோடசவதனம் சுப்பராய செட்டியாரும், ராஜ பாலாச்சாரியாரும் வேலுச்சாமிப் பிள்ளையும் கையெழுத்து அதில் உதவினர்.  அச்சிடுவதற்காகச் சென்னை சென்று ராமசாமி முதலியார் இல்லத்தில் தங்கியிருந்தார். சென்னைக்கும் கும்பகோணத்திற்குமாக பயணம் செய்து அச்சுப்பணியை நிகழ்த்தினார்.

உ.வே.சாமிநாதையர் சீவகசிந்தாமணியை விரிவான முன்னுரை, நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, கதைச்சுருக்கம் ஆகியவற்றுடன் அக்டோபர் 1887ல் பதிப்பித்தார். தமிழ்ப்பதிப்பியக்கத்தில் முன்னோடியான முயற்சியாக அது அமைந்தது  
உ.வே.சாமிநாதையர் சீவகசிந்தாமணியை விரிவான முன்னுரை, நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, கதைச்சுருக்கம் ஆகியவற்றுடன் அக்டோபர் 1887-ல் பதிப்பித்தார். தமிழ்ப்பதிப்பியக்கத்தில் முன்னோடியான முயற்சியாக அது அமைந்தது  
 
== உதவியோர் ==
== உதவியோர் ==
பதிப்புப் பணியில் சி.வை.தாமோதரம் பிள்ளை வழிகாட்டி உதவியதாக உ.வே.சாமிநாதையர் முன்னுரையில் சொல்கிறார். வீடூர் சந்திரநாதச் செட்டியார் நூல் ஒப்புநோக்க உதவினார். தேரழுந்தூர் சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார், திருமானூர் கிருஷ்ணையர் ஆகியோரை உ.வே.சாமிநாதையர் நினைவுகூர்கிறார்.

== பிரதிகள் ==
== பிரதிகள் ==
உ.வே.சாமிநாதையர் தன் பிரதிகளை இவ்வாறு பட்டியலிடுகிறார். கீழ்க்கண்டவர்களிடமிருந்து பிரதிகள் கிடைத்தன.
உ.வே.சாமிநாதையர் தன் பிரதிகளை இவ்வாறு பட்டியலிடுகிறார். கீழ்க்கண்டவர்களிடமிருந்து பிரதிகள் கிடைத்தன.
* சுப்ரமணிய தேசிகர்
* சுப்ரமணிய தேசிகர்
* மீனாட்சிசுந்தரம் பிள்ளை
* மீனாட்சிசுந்தரம் பிள்ளை
* தியாகராஜச் செட்டியார்
* தியாகராஜச் செட்டியார்
* சி.வை.தாமோதரம் பிள்ளை  
* சி.வை.தாமோதரம் பிள்ளை  
Line 26: Line 21:
* சின்னச்சாமிப் பிள்ளை
* சின்னச்சாமிப் பிள்ளை
* இராமசாமி முதலியார்
* இராமசாமி முதலியார்
* உடையூர் சுப்ரமணிய பிள்ளை
* உடையூர் சுப்ரமணிய பிள்ளை
* திருநெல்வேலி சாலிவாடீஸ்வர ஓதுவார்
* திருநெல்வேலி சாலிவாடீஸ்வர ஓதுவார்
Line 38: Line 32:
* இராமநாதபுரம் பொன்னுச்சாமித்தேவர்
* இராமநாதபுரம் பொன்னுச்சாமித்தேவர்
* சேலம் இராமசாமி முதலியார்
* சேலம் இராமசாமி முதலியார்
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
நூலில் கீழ்க்கண்ட பகுதிகள் உள்ளன.
நூலில் கீழ்க்கண்ட பகுதிகள் உள்ளன.
* முகவுரை
* முகவுரை
* நூலாசிரியர் வரலாறு
* நூலாசிரியர் வரலாறு
* நூலைப்பற்றிச் சில குறிப்புகள்
* நூலைப்பற்றிச் சில குறிப்புகள்
* விசேடக்குறிப்பு
* விசேடக்குறிப்பு
* உரையாசிரியாரான நச்சினார்க்கினியர் வரலாறு
* உரையாசிரியாரான நச்சினார்க்கினியர் வரலாறு
Line 54: Line 45:
* கோவிந்தையார் இலம்பகம்
* கோவிந்தையார் இலம்பகம்
* காந்தருவதத்தையார் இலம்பகம்
* காந்தருவதத்தையார் இலம்பகம்
* குணமாலையார் இலம்பகம்
* குணமாலையார் இலம்பகம்
* பதுமையார் இலம்பகம்
* பதுமையார் இலம்பகம்
Line 65: Line 55:
* இலக்கணையார் இலம்பகம்
* இலக்கணையார் இலம்பகம்
* முக்தி இலம்பகம்
* முக்தி இலம்பகம்
* வாழ்த்து  
* வாழ்த்து  
* சில பிரதிகளில் காணப்பட்ட செய்யுட்கள்
* சில பிரதிகளில் காணப்பட்ட செய்யுட்கள்
Line 72: Line 61:
* அருதப முதலியவற்றின் அகராதி
* அருதப முதலியவற்றின் அகராதி
* விளங்கா மேற்கோள் அகராதி
* விளங்கா மேற்கோள் அகராதி
* மேற்கோள்நூல்கள் பற்றிய அகராதி.
* மேற்கோள்நூல்கள் பற்றிய அகராதி
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 20:12, 12 July 2023

சீவகசிந்தாமணி 1887

சீவகசிந்தாமணி உ.வே.சா பதிப்பு (1887) உ.வே.சாமிநாதையர் ஏட்டுச்சுவடிகளில் இருந்து பதிப்பித்த சீவகசிந்தாமணி. உ.வே.சாமிநாதையரின் முதல் பதிப்பு நூல் இது. சீவகசிந்தாமணிக்கு இதுவே முதல் முழுமையான பதிப்பு.

பதிப்பு முயற்சி

உ.வே.சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றுகையில் அவருக்கு அரியலூரிலிருந்து கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்த சேலம் இராமசாமி முதலியாரிடம் அறிமுகம் ஏற்பட்டது. அவர் உ.வே.சாமிநாதையருக்கு ஐம்பெருங்காப்பியங்களைப் பற்றிச் சொல்லி சீவகசிந்தாமணியின் ஓர் இலம்பகத்தையும் அளித்தார். அவருக்கு பாடம்சொல்லும்பொருட்டு சீவகசிந்தாமணியை பயின்ற உ.வே.சாமிநாதையர் சமண நண்பர்களின் உதவியுடன் சமணமதத்தின் கருத்துக்களையும், திருத்தக்கதேவரின் வாழ்க்கையையும் பற்றி அறிந்துகொண்டார். பின்னர் அந்நூலை பதிப்பிக்க முயன்றார். சமணக் காப்பியத்தை பதிப்பிப்பதை சைவர்கள் எதிர்த்தபோது தமிழ்ப்பணியே முதன்மையானது, மதநம்பிக்கை அல்ல என்று தன் முடிவை முன்வைத்தார் சிந்தாமணி பதிப்பே சாமிநாதையரின் முதல் பதிப்பு முயற்சி. ஏற்கனவே பவர் என்னும் ஆங்கிலேயர் பதிப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சுநூல் இருந்தது. தியாகராசசெட்டியார் தம்மிடமிருந்த பிரதியை அனுப்பி வைத்தார். சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலியிலிருந்து சில ஏட்டுப்பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். பல பிரதிகளையும் ஒப்பிட்டு, பாடபேதங்களைக் குறித்து நூலை செம்மைசெய்தார். சிந்தாமணியை முழுமையாக அச்சிடும்பொருட்டு சுவடிகளை மேலும் தேடி விருஷபதாச முதலியாரிடம் சுவடிகளைப் பெற்றார். அவ்வாறாக சிந்தாமணியின் 23 நகல்களை உ.வே.சா. சேர்த்தார்

அன்றைய பதிப்புமுறை என்பது பதிப்பிக்கவிருக்கும் நூலை வாங்குவதாக செல்வந்தர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு நூலை அச்சிடுவது. உ.வே.சாமிநாதையர் தமிழார்வம் கொண்ட செல்வந்தர்களைச் சந்தித்து ஆதரவு பெற்று நூலை அச்சிட்டார். சோடசவதனம் சுப்பராய செட்டியாரும், ராஜ பாலாச்சாரியாரும் வேலுச்சாமிப் பிள்ளையும் கையெழுத்து அதில் உதவினர். அச்சிடுவதற்காகச் சென்னை சென்று ராமசாமி முதலியார் இல்லத்தில் தங்கியிருந்தார். சென்னைக்கும் கும்பகோணத்திற்குமாக பயணம் செய்து அச்சுப்பணியை நிகழ்த்தினார்.

உ.வே.சாமிநாதையர் சீவகசிந்தாமணியை விரிவான முன்னுரை, நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, கதைச்சுருக்கம் ஆகியவற்றுடன் அக்டோபர் 1887-ல் பதிப்பித்தார். தமிழ்ப்பதிப்பியக்கத்தில் முன்னோடியான முயற்சியாக அது அமைந்தது

உதவியோர்

பதிப்புப் பணியில் சி.வை.தாமோதரம் பிள்ளை வழிகாட்டி உதவியதாக உ.வே.சாமிநாதையர் முன்னுரையில் சொல்கிறார். வீடூர் சந்திரநாதச் செட்டியார் நூல் ஒப்புநோக்க உதவினார். தேரழுந்தூர் சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார், திருமானூர் கிருஷ்ணையர் ஆகியோரை உ.வே.சாமிநாதையர் நினைவுகூர்கிறார்.

பிரதிகள்

உ.வே.சாமிநாதையர் தன் பிரதிகளை இவ்வாறு பட்டியலிடுகிறார். கீழ்க்கண்டவர்களிடமிருந்து பிரதிகள் கிடைத்தன.

  • சுப்ரமணிய தேசிகர்
  • மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • தியாகராஜச் செட்டியார்
  • சி.வை.தாமோதரம் பிள்ளை
  • மழவை மகாலிங்கையர்
  • அஷ்டாவதானம் சபாபதி முதலியார்
  • தி.க.சுப்பராயச் செட்டியார்
  • சின்னச்சாமிப் பிள்ளை
  • இராமசாமி முதலியார்
  • உடையூர் சுப்ரமணிய பிள்ளை
  • திருநெல்வேலி சாலிவாடீஸ்வர ஓதுவார்
  • ஈஸ்வரமூர்த்திக் கவிராயர்
  • தூத்துக்குடி குமாரசாமிப் பிள்ளை
  • சிதம்பரம் தர்மலிங்கம் செட்டியார்
  • தஞ்சை மருதமுத்து உபாத்தியாயர்
  • விருஷபதாச முதலியார்
  • கூடலூர் விஜயபால நயினார்
  • வீடூர் சந்திரநாதச் செட்டியார்
  • இராமநாதபுரம் பொன்னுச்சாமித்தேவர்
  • சேலம் இராமசாமி முதலியார்

உள்ளடக்கம்

நூலில் கீழ்க்கண்ட பகுதிகள் உள்ளன.

  • முகவுரை
  • நூலாசிரியர் வரலாறு
  • நூலைப்பற்றிச் சில குறிப்புகள்
  • விசேடக்குறிப்பு
  • உரையாசிரியாரான நச்சினார்க்கினியர் வரலாறு
  • சீவகன் சரித்திரச்சுருக்கம்
  • ஸ்ரீபுராணத்துள்ள சீவக சரித்திரம்
  • சீவகசிந்தாமணி நச்சினார்க்கினியர் உரை
  • நாமகள் இலம்பகம்
  • கோவிந்தையார் இலம்பகம்
  • காந்தருவதத்தையார் இலம்பகம்
  • குணமாலையார் இலம்பகம்
  • பதுமையார் இலம்பகம்
  • கேகசரியார் இலம்பகம்
  • கனகமாலையார் இலம்பகம்
  • விமலையார் இலம்பகம்
  • சுரமஞ்சரியார் இலம்பகம்
  • மண்மகள் இலம்பகம்
  • பூமகள் இலம்பகம்
  • இலக்கணையார் இலம்பகம்
  • முக்தி இலம்பகம்
  • வாழ்த்து
  • சில பிரதிகளில் காணப்பட்ட செய்யுட்கள்
  • உரைச்சிறப்பு பாயிரச் செய்யுட்கள்
  • சீவகசிந்தாமணிச் செய்யுண் முதற்குறிப்பககராதி
  • அருதப முதலியவற்றின் அகராதி
  • விளங்கா மேற்கோள் அகராதி
  • மேற்கோள்நூல்கள் பற்றிய அகராதி

✅Finalised Page