சி. தட்சிணாமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
Line 37: Line 37:
தொடக்கத்தில் சுடுமண், உலோகம் போன்ற பிற ஊடகங்களில் சிற்பங்கள் செய்தாலும் தன் கடைசி 25 வருடங்கள் கல்லிலேயே சிற்பங்கள் செய்தார். பெரும்பாலும் பெண் உருவங்களை செதுக்கினார். இருக்கும் கல்லை பெரியளவில் செதுக்கி குறைக்காமல் அச் சிற்பங்களில் ஏற்கனவே இருக்கும் மேடு பள்ளங்களை இடைவெளிகளை உபயோகித்து அதையே லாவகமாக கண் காது என்று செதுக்கி உருவங்களாக மாற்றுவார். கற்களின் அமைப்புகளுக்கு ஏற்ப தன் படைப்புகளை உருவாக்கும் இப்பாணியை மகாபலிபுரம் சிற்பங்களிலிருந்து பெற்றுக் கொண்டதாக தட்சிணாமூர்த்தி கூறியிருக்கிறார். பெண் தலைகளை மட்டும் செதுக்கியிருக்கிறார். பெரிய பெண் உருவங்கள் தனியாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட உருவங்களுடன் அடுக்கடுக்காக நெருங்கியும் படைக்கப்பட்டிருக்கும். இந்த உருவங்கள் யாவும் முழுமையாக கால் வரை அமையாமல் கால் முட்டியுடன் முடிந்திருக்கும். உருவங்கள் தட்டையாக கைகால் மற்றும் அங்கங்கள் உடலுடன் நெருங்கி இருப்பதால் பல சிற்பங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது கல் தூண் போலவும் அருகில் வரும் போது அதில் உருவங்கள் தெரியும் விதத்திலும் அமைந்திருக்கும் அழகியலை கொண்டிருக்கிறது. கலைஞரும் லலித் கலா அகாடமியின் செயலாளருமாக இருந்த பழனியப்பன் கூறியது, "தட்சிணாமூர்த்தி பெண் உருவங்களை அதற்கான நளினத்துடன் படைத்த போது கூடவே துணிச்சலுடனும் மேதைமையை வெளிப்படுத்தும் முக அமைப்புகளையும் அச்சிற்பங்கள் கொண்டிருந்தது." என்றார். பளிங்கு சிற்பங்களுக்கு முக்கியத்துவம் இருந்த பாம்பே கலை உலகின் கவனத்தை மெதுவாக கருங்கல் சிற்பங்களை நோக்கி திருப்பினார் தட்சிணாமூர்த்தி. சென்னை மற்றும் தென்னிந்திய சூழலில் உளியை தவிர்த்து முதன்முதலாக கல் செதுக்கும் இயந்திரம் உபயோகித்து பெருமளவில் நவீன கல் சிற்பங்கள் செதுக்க ஆரம்பித்த சிற்பிகளில் தட்சிணாமூர்த்தியும் ஒருவர்.

இவர் லலித் கலா அகாடமியில் பணிபுரிந்த போது தென்னிந்திய கலைஞர்களுக்கு டெல்லியில் அங்கீகாரங்கள் கிடைக்க செய்தார். பல கலைஞர்களுக்கு நல்கைகள்(scholarships) கிடைக்க காரணமானார். தட்சிணாமூர்த்தி பல கலை கண்காட்சிகளை ஒருங்கிணைத்தார். அதன் மூலம் இளம் படைப்பாளிகள் பயன் பெற முடிந்தது.  கே. முரளிதரன், சிங்கப்பூர் சிற்பியான பி. ஞான போன்றவர்கள் தட்சிணாமூர்த்தியின் மாணவர்கள் ஆவர்.
தட்சிணாமூர்த்தி லலித் கலா அகாடமியில் பணிபுரிந்த போது தென்னிந்திய கலைஞர்களுக்கு டெல்லியில் அங்கீகாரங்கள் கிடைக்க செய்தார். பல கலைஞர்களுக்கு நல்கைகள்(scholarships) கிடைக்க காரணமானார். தட்சிணாமூர்த்தி பல கலை கண்காட்சிகளை ஒருங்கிணைத்தார். அதன் மூலம் இளம் படைப்பாளிகள் பயன் பெற முடிந்தது.  கே. முரளிதரன், சிங்கப்பூர் சிற்பியான பி. ஞான போன்றவர்கள் தட்சிணாமூர்த்தியின் மாணவர்கள் ஆவர்.

தமிழ்நாட்டில் நவீன ஓவியங்கள் இலக்கிய சிற்றிதழ்கள் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட போது ஆதிமூலம் போன்ற ஓவியர்களை போல அதற்கு தட்சிணாமூர்த்தியும் பங்காற்றினார். பல தமிழ் நூல்களுக்கு அட்டைப்படம் மற்றும் ஓவியங்கள் வரைந்து கொடுத்துள்ளார்.இன்று நவீன தமிழ் புத்தகங்களில் நவீன கலைப்படைப்புகள் இடம்பெறும் மரபிற்கு ஆதிமூலமும் தட்சிணாமூர்த்தியும் முன்னோடிகளாக இருந்தனர். நவீன தமிழிலக்கிய பரப்புடனான உறவை எப்போதும் பேணினார்.

Revision as of 20:44, 7 April 2022

சி. தட்சிணாமூர்த்தி(1943-2016) தமிழ்நாட்டின் நவீன சிற்ப ஓவிய கலைஞர்களில் ஒருவர். பெண்களை நாட்டுப்புற அழகியலை நவீன பாணியில் சிற்பங்களாக வடித்தவர். அச்சுக்கலை, வண்ணக்கலை, உலோகம், சுடுமண் போன்ற ஊடகங்களில் படைப்புகள் செய்பவராக இருந்தாலும் பிறகு கல்லை தன் பிரதான ஊடகமாக கைகொண்டவர். தட்சிணாமூர்த்தி தமிழ் இலக்கிய சிற்றிதழ்கள், நூல்களுக்கான அட்டைப்படம் மற்றும் ஓவியங்கள் வரைந்து கொடுத்துள்ளார். சென்னை ஓவியக் கல்லூரியில் சுடுமண் துறையின் ஆசிரியராகவும், பிறகு அத்துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய மற்றும் வெளிநாடுகளில் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். லலித் கலா அகாடமியின் தேசிய விருது பெற்றவர்.

பிறப்பு, இளமை

தட்சிணாமூர்த்தி 1943-ல் வட ஆற்காடு டாக்டர் அம்பேத்கர் மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்தார். அப்பா சின்னராஜ் முதலியார், அம்மா குப்பம்மாள்.

குடியாத்தம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சிறுவயதில் இருந்தே தட்சிணாமூர்த்திக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. இவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் குடியிருந்த குயவர் உருவங்களை உருவாக்குவதை பார்த்து ரசித்து தானும் களிமண்ணில் சிறு உருவங்கள் செய்து பார்த்திருக்கிறார். ஒன்பதாம் வகுப்பில் அவருக்கு ஓவியம் தேர்வு பாடமாக அமைந்தது அவருக்கு உந்துதலாக அமைந்தது. பள்ளி கலை ஆசிரியராக இருந்த எஸ்.பி. கந்தசாமி தட்சிணாமூர்த்தியின் ஓவிய ஆர்வத்துக்கு தூண்டுதலானார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவருடைய பெற்றோர் அவரை பொறியியல் படிப்பில் சேர்க்க ஆசைப்பட்டனர். அவரோ சென்னை கலைப் பள்ளியில் சேரும் ஆர்வத்தில் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு லாரி ஏறினார்.

தனி வாழ்க்கை

1972-ல் எம்.என். வசந்தகுமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மகன் அன்புக்குமரன், மகள் அபிராமி.

கலை வாழ்க்கை

கலைக் கல்லூரி

அரசு கலை மற்றும் கைவினை கல்லூரியில் வண்ணக்கலை துறை மாணவனாக 1960-ல் சேர்ந்தார். இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்த போது அவருடைய ஓவியம் தேசிய ஓவியக் கண்காட்சியில் பங்கு பெற்றது.

சந்தானராஜ், தனபால் போன்ற மூத்த கலைஞர்கள் தட்சிணாமூர்த்தியை பெரியளவில் பாதித்திருக்கிறார்கள். அந்தோணிதாஸ், எச். வி. ராம்கோபால், எஸ். முருகேசன் போன்றவர்களும் தட்சிணாமூர்த்திக்கு ஆசிரியர்களாக இருந்தனர். கலைக் கல்லூரியின் சிற்பத் துறையில் மாணவர்கள் குறைவாக இருந்ததால், கல்லூரி முதல்வர் பணிக்கர் ஆலோசனையின்படி தினம் 2 மணிநேரம் தனபால் மாஸ்டரின் சிற்ப வகுப்பிற்கு சென்று கற்றுக் கொண்டார். நாட்டார் கலை மரபின் அய்யனார் சிற்பங்கள், ஆப்பிரிக்க சிற்பங்கள் தட்சிணாமூர்த்தியின் படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

1966-ல் பணிக்கர் தலைமையில் சோழ மண்டல கலை கிராமம் தொடங்கப்பட்ட போது அதன் உறுப்பினராக தட்சிணாமூர்த்தியும் சேர்ந்து கொண்டார். 1968-1969-ல் ராதா சில்க் எம்போரியத்தில் வடிவமைப்பாளராக பணியாற்றினார். 1969-ல் சோழமண்டலம் பிளவுபட்ட போது அதிலிருந்து விலகி எஸ். கன்னியப்பனிடம் சென்று சேர்ந்தார். அவரின் ஆலோசனையின் படி அதே ஆண்டு கலைத் தொழில் கல்லூரியின் சுடுமண் கலைத் துறையில் பகுதிநேர மாணவரானார். 1970-ல் அத்துறையின் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பிறகு சுடுமண் துறைத் தலைவரானார். காலையில் கல்லூரி நேரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வந்து தன் படைப்பு வேலைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். 2003-ல் ஓய்வு பெற்றார். இடையில் 1978-ல் பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்காலராக பிரிட்டனின் க்ராய்டன் வடிவமைப்பு மற்றும் அச்சுக் கலைக் கல்லூரியில் மேற்படிப்பு முடித்தார். ஓய்வு பெற்ற பிறகு சென்னை லலித் கலா அகாடமியில் தன் கலைப் படைப்புகளை தொடர்ந்தார்.

இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.

கலை படைப்புகள்

தட்சிணாமூர்த்தியின் கலை வாழ்க்கை ஓவியனாக தான் துவங்கியது. பிறகு சிற்பத்திலும் சுடுமண் கலையிலும் அச்சுக்கலையிலும் ஆர்வம் கொண்டார். பத்திக் படைப்புகள் செய்தார். சென்னை கலைக் கல்லூரியின் சுடுமண் துறையில் ஆசிரியராக பணியாற்றினார். பல சுடுமண், செராமிக் வேலைகள் செய்துள்ளார். அச்சுக்கலையின் பல வகைமைகளில் படைப்புகள் செய்து பார்த்தார். உலோக சிற்பங்கள் உருவாக்கியிருக்கிறார். ஜெர்மன் சிற்பி தாமஸ் லிங்க் சோழமண்டலத்தில் நடத்திய உலகளவிலான சிற்ப முகாமில் கலந்து கொண்டார். பிறகு தட்சிணாமூர்த்தியின் ஆர்வம் கல் சிற்பங்கள் உருவாக்குவதில் திரும்பியது. கிரானைட் கருங்கல், ராஜஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ரோஸ் நிற கல் முதல் சாதாரணமாக சூழலில் கிடைக்கும் கற்கள் வரை பல வகை கற்களில் படைப்புகள் உருவாக்கினார். ஆரம்ப காலத்தில் கல்லில் அதிகமாக மீன் மற்றும் பறவை சிற்பங்களை உருவாக்கினார். ஒட்டுமொத்தமாக தட்சிணாமூர்த்தியின் படைப்புகளில் பெண் உருவங்களே அதிகம்.

இலக்கிய சிற்றிதழ்கள், நூல்களுக்கு நவீன ஓவியம் மற்றும் அட்டைப்படங்கள்: இலக்கிய மற்றும் ஓவியர்கள் முதன்முதலாக இணைந்து பங்காற்றிய 1968 ஜூலையில் தொடங்கப்பட்ட 'நடை' சிறுபத்திரிகையில் ஆதிமூலம், ஆர்.பி. பாஸ்கரன், பி. கிருஷ்ணமூர்த்தி, வரதராஜன் போன்றவர்களுடன் தட்சிணாமூர்த்தியின் ஓவியங்களும் இடம்பெற்றன. 1969-ல் வெளியிடப்பட்ட ஞானக்கூத்தனின் 'அன்று ஒரு கிழமை' கவிதை தொகுப்பில் தட்சிணாமூர்த்தியும் பங்களிப்பாற்றினார். 'கசடதபற' இலக்கிய சிற்றிதழின் 25-ஆவது சிறப்பிதழில் தட்சிணாமூர்த்தியும் ஓவியங்கள் வரைந்து கொடுத்தார். 1976-ல் வெளியான சுந்தர ராமசாமியின் 'பல்லக்கு தூக்கிகள்' சிறுகதை தொகுப்பிற்கு முகப்போவியம் வரைந்து கொடுத்துள்ளார். க்ரியா வெளியிட்ட சுந்தர ராமசாமியின் 'பள்ளம்' சிறுகதை தொகுப்பிற்கு தட்சிணாமூர்த்தி படைத்த சிற்பம் ஒன்றின் புகைப்படம் அட்டைப்படமாக பயன்படுத்தப்பட்டது.

இறப்பு

23 செப்டம்பர் 2016 அன்று சென்னையில் தன் 73-ஆவது வயதில் காலமானார்.

கலைத்துறையில் இடம், அழகியல்

தொடக்க காலத்தில் ஓவியங்கள் வரைந்தார். பிறகு சுடுமண் கலைவடிவங்கள் மற்றும் சிற்பங்களின் மேல் தட்சிணாமூர்த்தியின் ஆர்வம் திரும்பியது. இவருக்கு மேற்கத்திய ஓவியரான பால் காகினின் படைப்புகள் மேல் பெரிய ஈர்ப்பு இருந்தது. அவரது ஓவியங்களை நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். தட்சிணாமூர்த்தியின் வண்ண ஓவியங்களில் பால் காகினின் தாக்கத்தை உணர முடியும்.

தட்சிணாமூர்த்தி வளர்ந்த நாட்டுப்புற சூழல் அவரது படைப்புகளிலும் எதிரொலித்தது. தட்சிணாமூர்த்தி தன் படைப்புகள் பற்றி கூறியது, 'என் படைப்புகளுக்கான மன உந்துதலை நான் மக்களிடமிருந்தே பெறுகிறேன். தனி நபர்களாகவும் குழுவாகவும் மக்கள் என் மன உலகை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைகள், தோற்றப் பாங்குகள், அங்க அசைவுகள் ஆகியவற்றை நான் மிக நெருக்கமாக அவதானிக்கும் போது எனக்கான கருத்தாக்கங்கள் உருவாகின்றன. என்னுடைய காட்சி ரீதியான மொழியை நம்முடைய அய்யனார் உருவங்களிலிருந்தும் ஆப்பிரிக்க சிற்பங்களிலிருந்தும் பெற்றிருக்கிறேன்' என்றார்.

தொடக்கத்தில் சுடுமண், உலோகம் போன்ற பிற ஊடகங்களில் சிற்பங்கள் செய்தாலும் தன் கடைசி 25 வருடங்கள் கல்லிலேயே சிற்பங்கள் செய்தார். பெரும்பாலும் பெண் உருவங்களை செதுக்கினார். இருக்கும் கல்லை பெரியளவில் செதுக்கி குறைக்காமல் அச் சிற்பங்களில் ஏற்கனவே இருக்கும் மேடு பள்ளங்களை இடைவெளிகளை உபயோகித்து அதையே லாவகமாக கண் காது என்று செதுக்கி உருவங்களாக மாற்றுவார். கற்களின் அமைப்புகளுக்கு ஏற்ப தன் படைப்புகளை உருவாக்கும் இப்பாணியை மகாபலிபுரம் சிற்பங்களிலிருந்து பெற்றுக் கொண்டதாக தட்சிணாமூர்த்தி கூறியிருக்கிறார். பெண் தலைகளை மட்டும் செதுக்கியிருக்கிறார். பெரிய பெண் உருவங்கள் தனியாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட உருவங்களுடன் அடுக்கடுக்காக நெருங்கியும் படைக்கப்பட்டிருக்கும். இந்த உருவங்கள் யாவும் முழுமையாக கால் வரை அமையாமல் கால் முட்டியுடன் முடிந்திருக்கும். உருவங்கள் தட்டையாக கைகால் மற்றும் அங்கங்கள் உடலுடன் நெருங்கி இருப்பதால் பல சிற்பங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது கல் தூண் போலவும் அருகில் வரும் போது அதில் உருவங்கள் தெரியும் விதத்திலும் அமைந்திருக்கும் அழகியலை கொண்டிருக்கிறது. கலைஞரும் லலித் கலா அகாடமியின் செயலாளருமாக இருந்த பழனியப்பன் கூறியது, "தட்சிணாமூர்த்தி பெண் உருவங்களை அதற்கான நளினத்துடன் படைத்த போது கூடவே துணிச்சலுடனும் மேதைமையை வெளிப்படுத்தும் முக அமைப்புகளையும் அச்சிற்பங்கள் கொண்டிருந்தது." என்றார். பளிங்கு சிற்பங்களுக்கு முக்கியத்துவம் இருந்த பாம்பே கலை உலகின் கவனத்தை மெதுவாக கருங்கல் சிற்பங்களை நோக்கி திருப்பினார் தட்சிணாமூர்த்தி. சென்னை மற்றும் தென்னிந்திய சூழலில் உளியை தவிர்த்து முதன்முதலாக கல் செதுக்கும் இயந்திரம் உபயோகித்து பெருமளவில் நவீன கல் சிற்பங்கள் செதுக்க ஆரம்பித்த சிற்பிகளில் தட்சிணாமூர்த்தியும் ஒருவர்.

தட்சிணாமூர்த்தி லலித் கலா அகாடமியில் பணிபுரிந்த போது தென்னிந்திய கலைஞர்களுக்கு டெல்லியில் அங்கீகாரங்கள் கிடைக்க செய்தார். பல கலைஞர்களுக்கு நல்கைகள்(scholarships) கிடைக்க காரணமானார். தட்சிணாமூர்த்தி பல கலை கண்காட்சிகளை ஒருங்கிணைத்தார். அதன் மூலம் இளம் படைப்பாளிகள் பயன் பெற முடிந்தது. கே. முரளிதரன், சிங்கப்பூர் சிற்பியான பி. ஞான போன்றவர்கள் தட்சிணாமூர்த்தியின் மாணவர்கள் ஆவர்.

தமிழ்நாட்டில் நவீன ஓவியங்கள் இலக்கிய சிற்றிதழ்கள் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட போது ஆதிமூலம் போன்ற ஓவியர்களை போல அதற்கு தட்சிணாமூர்த்தியும் பங்காற்றினார். பல தமிழ் நூல்களுக்கு அட்டைப்படம் மற்றும் ஓவியங்கள் வரைந்து கொடுத்துள்ளார்.இன்று நவீன தமிழ் புத்தகங்களில் நவீன கலைப்படைப்புகள் இடம்பெறும் மரபிற்கு ஆதிமூலமும் தட்சிணாமூர்த்தியும் முன்னோடிகளாக இருந்தனர். நவீன தமிழிலக்கிய பரப்புடனான உறவை எப்போதும் பேணினார்.

விவாதங்கள்

விருதுகள்

1963 மற்றும் 1965 மாநில விருது, லலித் கலா அகாடமி

1968, பெங்களூர் சித்ரகலா பரிசித்தின் விருது

1972, மைசூர் தசரா விருது

1976 மற்றும் 1981, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு விருது

1981-1985,

1985 தேசிய விருது, லலித் கலா அகாடமி

பங்கெடுத்த ஓவிய முகாம்கள் சில

ஊட்டி பழங்குடியின

முக்கிய பங்கேற்புகள்

1986, தேசிய ஓவிய கண்காட்சியின் ஜூரியாக சேவை செய்தது

1990, துருக்கியில் மூன்றாவது அங்காரா பியன்னியல் நிகழ்விற்கு இந்திய குழுவின் பொறுப்பாண்மை குழுவில் சேவை செய்தது

1991, டெல்லி லலித்கலா அகாடமி நடத்திய 'Drawings India-91' நிகழ்வின் அமைப்பாளர்

1992, மும்பை ஆர்ட் சொசைட்டி நடத்திய வருடாந்திர அனைத்து இந்திய ஓவியக் கண்காட்சியில் நடுவர்

1993, டெல்லியில் நடைபெற்ற தேசிய ஓவியக் கண்காட்சியில் தனிநபர் நடுவர்

கண்காட்சிகள்

தட்சிணாமூர்த்தியின் படைப்புகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் மற்றும் சேகரிப்புகள்

இந்தியா, சிங்கப்பூரில் இவரது படைப்புகள் சேகரிப்பில் உள்ளன. தட்சிணாமூர்த்தி வடித்த சிற்பங்கள் உலகின் பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவர் நடித்த 82 இன்ச் உயர சுவாமி விவேகானந்தர் சிற்பம் பாராளுமன்றத்தில் உள்ளது.

தனிநபர் கண்காட்சிகள் சில

1978, க்ரோய்டன் கேலரி, யுனைடட் கிங்டம்

1978, மோர்லி கேலரி, லண்டன்

1979, பியோனோஸ் ஐரிஸ், அர்ஜென்டினா

1985, சென்னை 1989, க்ராய்டன், யுனைடட் கிங்டம்

1992, டிசைன் ஸ்கேப் கேலரி, மும்பை

1994, டெல்லி ஆர்ட் கேலரி(அனாமிகா), புது டெல்லி

1998, சென்னை

1998, ஜகாங்கீர் ஆர்ட் கேலரி, மும்பை

2003, ஆர்ட் வேர்ல்ட், சென்னை

குழு கண்காட்சிகள் சில

1973, ஏழு இந்திய கலைஞர்களின் கண்காட்சி, ஆஸ்திரேலியா

1975, மும்பை

1981, மும்பை

1983, மும்பை

1989, மோர்லி கேலரி, லண்டன்

1990, பியோனோஸ் ஐரிஸ், அர்ஜென்டினா

1992, ஏழு இந்திய சிற்பிகள், ஆர்ட் ஹெரிடேஜ்

1993, தி மெட்ராஸ் மெட்டபர், சென்னை மற்றும் மும்பை

1997, தி மெட்ராஸ் மெட்டபர், பிர்லா அகாடமி ஆப் ஆர்ட் அன்ட் கல்ட்செர், கொல்கத்தா

2003, ரொமான்ஸ் வித் இமேஜஸ் அன்ட் பார்ன்ஸ், லண்டன்

2007, சிம்பல்ஸ் ஆப் எக்ஸ்ஸூபிரன்ஸ், சன்ஜின் கேலரி, சிங்கப்பூர்

இறப்பிற்கு பிந்தைய கண்காட்சிகள்

Her Divine Majesty, Gnani Arts Gallery, 2021

நூல்கள்

சி. மோகன் எழுதிய 'காலம் கலை கலைஞர்கள்' நூலில் 'சி. தட்சிணாமூர்த்தி: கல்வெளிக் கலைப் பயணம்' என்ற தட்சிணாமூர்த்தி பற்றிய உரை இடம்பெற்றுள்ளது.

'நவீனக் கலையின் தமிழக ஆளுமைகள்' என்ற சி. மோகனின் நூலில் தட்சிணாமூர்த்தி பற்றிய கட்டுரையும் உள்ளது.

உசாத்துணை