சி. கணபதிப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 11:42, 23 April 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "'''சி. கணபதிப்பிள்ளை''' (27 ஜூன் 1899 - 13 மார்ச் 1986) ஈழத்துத் தமிழறிஞர். சைவ அறிஞர். சிற்றிலக்கியங்கள், இலக்கணங்கள் ஆகியவற்றை எழுதியவர். பதிப்பாசிரியர், உரையாசிரியர். பிறப்பு, கல்வி இலங்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சி. கணபதிப்பிள்ளை (27 ஜூன் 1899 - 13 மார்ச் 1986) ஈழத்துத் தமிழறிஞர். சைவ அறிஞர். சிற்றிலக்கியங்கள், இலக்கணங்கள் ஆகியவற்றை எழுதியவர். பதிப்பாசிரியர், உரையாசிரியர்.

பிறப்பு, கல்வி

இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுவில் என்ற ஊரில் தருமர் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி மற்றும் தனங்களப்பு முருகர் மகள் வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். மட்டுவில் சந்திரமௌலீச பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். மூன்றாவது வயதிலேயே தாயாரை இழந்தவர், 13வது வயதில் தந்தையாருடன் தனங்கிளப்புக்கு இடம்பெயர்ந்தார். தமிழறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னம்பலப் புலவர், சாவகச்சேரி பொன்னப்பாபிள்ளை ஆகியோரிடத்தில் தமிழ் கற்ற கணபதிப்பிள்ளை 1917 இல் நாவலர் காவியப் பாடசாலையில் சேர்ந்து சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், வித்தகம் ச. கந்தையாபிள்ளை, வித்துவான் ச.சுப்பையாபிள்ளை, சுவாமி விபுலானந்தர் போன்ற அறிஞர்களிடம் கல்வி கற்றார்.

1926 ஆம் ஆண்டில் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத் தேர்வில் வென்று பண்டிதர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

லோச் செல்லப்பாவின் தூண்டுதலால் மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் காவிய வகுப்புகளை நடத்த ஆரம்பித்தார். கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்ற கணபதிப்பிள்ளை 1929 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

இலக்கியவாழ்க்கை