சிவாலய ஓட்டம்
From Tamil Wiki
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் விளவங்கோடு வட்டங்களில் உள்ள முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்த்திகரை, பொன்மனை, திருபன்னிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றிக்கோடு, நட்டாலம் ஆகிய ஊர்களில் உள்ள 12 சிவாலயங்களையும் மாசி மாத சிவராத்திரி அன்று நடந்தும் ஓடியும் சென்று தரிசிப்பதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.