being created

சிற்ப அளவு முறைகள்

From Tamil Wiki

சிற்ப படிமங்களை அளவிட மரபான அளவீட்டு முறைகளே பயன்படுத்தபடுகின்றன. மரபாக நிலம், கட்டிடங்கள், அறைகலன்கள், தேர்வாகனங்கள் ஆகியவற்றை அளக்க வெவ்வேறு நீட்டல் முறை அளவீடுகள் வழக்கத்தில் இருந்துள்ளன. சிற்பங்களுக்கென மரபான நீட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அளவீட்டு முறைகளே இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

அளவீட்டு முறை

மர்பாக இந்தியாவில் நிலம், வீடுகள், சாலைகள், கோவில்கள், தேர் வாகனங்கள், மர சாமான்கள், சிற்பங்கள் ஆகியவற்றை அளப்பதற்கு வெவ்வேறு நீட்டல் வகை அளவீட்டு முறைகள் வழக்கத்தில் இருந்துள்ளன. இப்போது பிற துறைகளில் நவீன அளவீட்டு முறைகளே பெரும்பாலும் பயன்படுத்தபடுகின்றன. சிற்பக்கலையை அறியவும் தொடர்ந்து பயிலவும் மரபான அளவீட்டு முறைகளை அறிந்திருத்தல் அவசியம். முறையாக இவ்வளவீட்டு முறைகளை கற்றபின்னரே நவீன அளவீடுகளில் மாற்றி பயன்படுத்த முடியும்.

அளவீட்டு கருவிகள்

அணு

சிற்பக் கலையில் பயன்படுத்தப்படும் நீட்டல் அளவு முறையின் ஆதார அளவு பரமாணு. கண்களுக்கு புலப்படாத அளவு நுண்ணிய அணு பரமாணு எனப்படுகிறது. இந்த அரூபமான பரமாணு மாமுனிகளில் அறிவு கண்களுக்கு மட்டுமே புலப்படும் என சிற்ப துறையினரால் கூறப்படுகிறது. பரமாணுவிலிருந்து தொடங்கியே பிற அளவீட்டு முறைகள் கணக்கிடப்படுகின்றன.

அணு விளக்கம்

பரமாணுவின் அளவை விளக்க இரண்டு முறைகள் சொல்லப்படுகின்றன.

  • வீட்டு கூரையின் சிறுதுளைகள் வழியே வரும் ஒளியில் ஊடுருவும் சூரிய ஒளியில் தெரியும் நுண்ணிய துகள்[1].
  • நவீன அளவீட்டு முறையில் குறிப்பிடப்படும் ஒரு அங்குலத்தின் 1,90,650 கூறுகளில் ஒன்று ( 1 / 1,90,650 inch).
அணுவிலிருந்து வளர்ந்த அளவீடுகள்
  • தேர்த்துகள் - எட்டு பரமாணு சேர்ந்தது
  • உரோமம் - உரோமத்தின் நுனி அகலம் என குறிப்பிடப்படும் இவ்வளவீடு எட்டு தேர்துகள் சேர்ந்தது
  • ஈர் - எட்டு உரோமம் சேர்ந்தது
  • பேன் - எட்டு ஈர் சேர்ந்தது
  • நெல் - எட்டு மேன் சேர்ந்தது (யவை)
  • விரல் - எட்டு நெல் சேர்ந்தது (அங்குலம்)
மானாங்குலம்

எட்டு நெல் கொண்ட விரல் அளவு அங்குலம் என அறியப்படுகிறது. சிற்பத்தை அளப்பதற்குரிய பொதுவான அளவாதலால் இது மானாங்குலம் என சொல்லப்படுகிறது. மானம் என்றால் அளவை என்று பொருள்.

அளவீட்டு முறை

எட்டு நெற்கள் செங்குத்தாக அகல நெருக்கி வைத்து பக்கவாட்டில் மொத்த நீளம் அளக்கப்படும். அளவிட ஏற்ற நெல்லாக செந்நெல் கூறப்படுகிறது. செந்நெல் அதன் அகலத்தை போல இரு மண்டங்கு நீளமுடையது. எனவே நீளவாட்டில் நான்கு நெல்லின் நீளமும் அங்குலம் என கொள்ளப்படும்.

வகைகள்
முழக்கோல்
கயிறு

சிற்ப அள்வீடுகள்

தாளம்
மானாங்குளம்
மாத்ராங்குலம்
தேகாங்குலம்
யவாங்குலம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. இல் நுழை கதிரின் நுன் அணு - திருவாசகம் (திருஅண்டப் பகுதி - பாடல் 1)



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.