சிதம்பரப் பாட்டியல்

From Tamil Wiki
Revision as of 11:56, 10 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with " ஒரு பாட்டியல் நூல். இதை இயற்றியவர் பரஞ்சோதியார் என்பார். இவர் சிதம்பர புராணம் என்னும் நூலை இயற்றிய புராணத் திருமலை நாதர் என்பவரின் மகன் ஆவார். இது 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


ஒரு பாட்டியல் நூல். இதை இயற்றியவர் பரஞ்சோதியார் என்பார். இவர் சிதம்பர புராணம் என்னும் நூலை இயற்றிய புராணத் திருமலை நாதர் என்பவரின் மகன் ஆவார். இது 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. தமிழில் இரண்டு பாட்டியலில் அகத்திய மரபு, இந்திரகாளிய மரபு என இரண்டு மரபுகள் உள்ளன. இவற்றில் சிதம்பரப் பாட்டியல் அகத்திய மரபைச் சார்ந்தது.

பொருளடக்கம்

  • 1அமைப்பு
  • 2குறிப்புகள்
  • 3உசாத்துணைகள்
  • 4இவற்றையும் பார்க்கவும்

அமைப்பு[தொகு]

மொத்தம் 47 எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம் எனும் பாவினத்தால் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை, உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல், பொருத்தவியல், மரபியல் என்பன. பாட்டியல் நூல் எனப்படினும் இது யாப்பியல், பாட்டியல் ஆகிய இரண்டும் இந்நூலில் உள்ளன. முதல் மூன்று இயல்களும் யாப்பியல் சார்ந்தவையாகவும் இறுதி இரண்டு இயல்களும் பாட்டியல் சார்ந்தவையாகவும் உள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. ↑ இளங்குமரன், இரா., 2009. பக். 340.
  2. ↑ இளங்குமரன், இரா., 2009. பக். 341.

உசாத்துணைகள்[தொகு]

  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.