சாமுவேல் கிரீன்

From Tamil Wiki
சாமுவேல் கிரீன்

சாமுவேல் கிரீன் (1822 - 1884 ) (Samuel Fisk Green) சிலோன் அமெரிக்க மிஷன் என்னும் மதப்பரப்புக் குழுவின் தலைவர். மருத்துவ பட்டம் பெற்று இரு வருடங்களில் இலங்கை சென்ற சாமுவேல் இலங்கையில் ஆங்கிலக் கல்வியை தொடங்கிவைத்த வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இலங்க்கையில் மருத்துவக் கல்லூரியைத் துவங்க்கி புது மருத்துவர்களை உருவாக்கியவர். தமிழில் மருத்துவ நூல்களை மொழி பெயர்த்தவரும் ஆவார்.

பிறப்பு, துவக்க காலம்

சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் 1822ஆம் அண்டு அக்டோபர் 10அம் தியதி கிரீன் ஹில், மாசசூசஸ்ட்டில் பிறந்தார். அவரது தந்தை வில்லியம் இ. கிரீன் தாயார் ஜூலியா பிளிம்ப்டன் இருவருக்கும் பிறந்த பதினொரு குழந்தைகளில் எட்டாவதாகப் பிரந்தார் சாமுவேல். தனது 11ஆம் வயதில் தாயை இழந்த சாமுவேல் தனது இரண்டாவது தமக்கையின் கவனிப்பின் கீழ் வளர்ந்தார். இளமையில் அவர் உள்ளூர் பொதுப்பள்ளிக்கூடத்தில் பயின்றார், வீட்டிலும் அவரது கல்விக்கு ஆதரவு கிடைத்தது. தனது 18ஆம் வயதில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டார்.

1841ல் நியூ யார்க் சென்று ரெவ். டாக்டர். வாஹ்ன் என்நும் மதப் பணியாளரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்க்கிருந்த தேவாலயங்களில் ஞாயிறு வகுப்புக்கள் போதிப்பதும், கூட்டங்க்களில் பங்க்கெடுப்பதுமாய் இருந்தார். மீதமிருந்த நேரங்களில் மருத்துவம் குறித்து படிக்கவும் உரைகளைக் கீட்கவும் ஆரம்பித்தார். இரத்த ஓட்டம் குறித்த உரை ஒன்றைக் கேட்ட அவர் மருத்துவத்தில் தீவிர ஆர்வம் கொண்டு மருத்துவ படிப்பை தொடர்ந்தார். 1845ல் நியூ யார்க்கில் மருத்துவப் பட்டம் பெற்றார் சாமுவேல்.

பணிகள்

கல்லூரி காலத்திலேயே வெளினாட்டில் மதபோதகராகப் பணியாற்றும் விருப்பத்தைக் கொண்டிருந்த சாமுவேல் பட்டம் பெற்று இரு வருடங்க்களில் யாழ்ப்பானம் வந்து சேர்ந்த சாமுவேல் அடுத்த 26 வருட காலம் அங்கே மருத்துவராகவும் மதபோதகராகவும் பணியாற்றினார். துவக்கத்தில் வட்டுக்கோட்டை குருமடத்தில் இருந்த அவர் 1848ல் மனிப்பாய்க்கு அனுப்பப்பட்டார். அங்கே மருத்துவராக மட்டுமல்லாமல் ஒரு மருத்துவக் கல்லூரியையும் ஆரம்பித்து பயிற்சியாளராகவும் செயல்பட்டார். அவர் துவங்க்கிய மருத்துவமனை இன்று கிரீன் நினைவு மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது.

1848ல் குருமடத்திலிருந்து மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மருத்துவ பயிற்சியை துவங்க்கினார் சாமுவேல் கிரீன்.பின்னர் 26 வருடங்க்களில் மொத்தம் 87 தகுதிபெற்ற பருத்துவர்களை உருவாக்கினார். மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க அனுமதியும் நிதிஉதவியும் பெற்று 4,500பக்கங்களுக்கும் மேலான மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார் கிரீன். மேலும் பல மருத்துவ நூல்களை தாமாகவே தமிழில் எழுதவும் செய்தார். தன்னிடம் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் பிற பகுதிகளுக்குச் சென்றுவிடுவதைத் தவிற்க அவர் தமிழில் மருத்துவத்தை கற்பித்தார். இதைத்தவிற மக்களுக்கு பொது சுகாதாரம் குறித்த சிறுபுத்தகங்க்களையும் தமிழில் எழுதி வெளியிட்டார்.

ஆங்கிலேய அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கேற்ப யாழ்ப்பாணத்தில் 'ஃபிரண்ட்ஸ் இன் நீட்' மருத்துவமனையைத் துவங்க்கினார். ஆரம்ப காலத்தில் அங்க்கே மருத்துவப்பணி செய்தவர்கள் முழுதும் சாமுவேலின் மாணவர்களாகவே இருந்தனர்.

அவர் தமிழில் மொழிபெயர்ப்பாளர் இன்றி பிரசங்கிக்கவும் பணியாளர்களிடம் பேசவும் பழகிக்கொண்டார்.

இறப்பு

1873ல் கிரீன் ஹில், மாசச்சூசஸ்ட்டுக்குத் திரும்பிய சாமுவேல் கிரீன் உடல் நலக்குறைவால் 1884ல் காலமானார். அவரது விருப்பபடி அவர் கல்லறையில் "தமிழர்களின் மருத்துவ மதபோதகர்" எனும் வாசகங்க்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அங்கிகாரங்கள்

துவக்கத்தில் மக்கள் சாமுவேல் கிரீனிடம் மருத்துவம் செய்துகொள்ள மறுத்தாலும் பின்னாட்களில் அவரை நாடி பலரும் வர ஆரம்பித்தனர். மக்கள் அவரைக் கொண்டாடினர். இது குறித்த பதிவுகள் உட்பட்ட அவரது கடிதங்களும் வாழ்க்கைக் குறிப்பும் எபனேசர் கட்லர் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன.

1998ல் கிரீனின் மருத்துவப் பள்ளியின் 150வது ஆண்டை முன்னிட்டு இலங்கை அரசு ஒரு தபால்தலையை வெளியிட்டது.

உசாத்துணை

மானிப்பாய் கிரீன். இணையநூலகம்

http://www.columbiamedicinemagazine.org/webextra/spring-2017/node%3Atitle%5D-4

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0021496_Life_and_letters.pdf

http://siddhadreams.blogspot.com/2009/03/pioneer-of-scientific-tamil.html#more

வட்டுக்கோட்டை குருமடம்