under review

சந்திரிகா ஹாஸை விலாசம்

From Tamil Wiki
Revision as of 17:37, 17 August 2023 by Madhusaml (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Chandra Haasa Nadagam.jpg

சந்திரிகா ஹாஸை விலாச நாடகம் மராட்டியர் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட நூல். மராட்டியர் ஆட்சியில் நாடகத்தை கல்யாணம், விலாசம், நாடகம் என கூறும் வழக்கம் இருந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை

பார்க்க: மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்

காலம்

சந்திரகா ஹாஸை விலாசத்தில் சாகேஜி மன்னர் ’தீபாம்பிகை குமாரன்’ எனக் குறிப்பிடப்படுகிறார். இதன் மூலம் இந்நூல் சாகேஜி மன்னர் காலத்தில் (பொ.யு. 1684 - 1712.) இயற்றப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது.

நூல் அமைப்பு

மாளவநாட்டு மன்னனின் மகள் சந்திரிகா தன் தோழி சுகவாணியுடன் திருவாரூர் கோவிலுக்குச் சென்று ‘வன்மீகரை’ வழிபடுகிறாள். சித்தர் ஒரு அப்போது கோவிலுக்கு வந்து பல தேசத்து மன்னர்களின் பெருமையை பாடுகிறார். அத்துடன் சாகேஜி மன்னரின் புகழையும் பாடுகிறார். சித்தரின் பாடல் மூலம் சந்திரிகா சாகேஜி மன்னன் மேல் காதல் கொள்கிறாள். இதனை அறிந்த சித்தர் சாகேஜி மன்னருக்கும், சந்திரிகாவுக்கும் திருமணம் செய்து வைப்பதாக அமைந்த நாடக நூல்.

பாடல் நடை.

காப்பு - விருத்தம்

செந்திரு மார்ப னான ஸ்ரீசகசி ராச னுக்கு
சத்திரிகா ஹாஸை கல்யா ணந்தனைத் தமிழால் பாட
அந்தமாந் திருவா ரூரில் அருள் கம லால யம்மன்
மைந்தனாம் விட்ட வாசல் மதகரி காப்புத் தானே

வசனம்

இந்தப்படிக்கு காப்புக் கேட்பித்த ததனந் தரத்திலே சந்திரிகா ஹாஸை விலாசம் என்கிற நாடகத்திலே சகல விக்கினங்களும் நிவாரணம் பண்ண விக்னேசுவரனைப் பிரார்த்தனை பண்ண, விக்னேசுவரன் வருகிற மார்க்கம்.

உசாத்துணை


✅Finalised Page