சண்முக.செல்வகணபதி

From Tamil Wiki
Revision as of 07:01, 5 March 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''முனைவர் சண்முக. செல்வகணபதி''' (1949) தமிழ் இலக்கியங்களிலும், தமிழிசையிலும் ஆழ்ந்த புலமைபெற்று, எழுத்தாலும் பேச்சாலும் தமிழ்ப்பணி செய்து வருபவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். திரு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முனைவர் சண்முக. செல்வகணபதி (1949) தமிழ் இலக்கியங்களிலும், தமிழிசையிலும் ஆழ்ந்த புலமைபெற்று, எழுத்தாலும் பேச்சாலும் தமிழ்ப்பணி செய்து வருபவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றிய பேராசிரியர். இலக்கியக்கூட்டங்களின் வழியாகவும், சமயச் சொற்பொழிவுகள் வழியாகவும் மக்களிடம் தம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் உள்ளவர். இராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் நூலினை இசைச்சித்திரமாக 15 பொழிவுகளாகத் திருச்சிராப்பள்ளி வானொலியில் வழங்கியவர் (2009 சூன் - 2009 ஆகத்து). இதுவரை 650 மேற்பட்ட மேடைகளில் இலக்கியப் பொழிவுகளாற்றியுள்ளவர்