under review

கே.ஆர். மீரா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 4: Line 4:
==பிறப்பு, கல்வி==
==பிறப்பு, கல்வி==


மீரா கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் பேராசிரியர்களான ராமச்சந்திரன் பிள்ளை, அமிர்தாகுமாரி ஆகியோரின் மகளாக பெப்ருவரி 20, 1979 அன்று பிறந்தார். சாஸ்தம்கோட்டாவில் உள்ள டி.பி. கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் தொடர்புத்துறை ஆங்கிலத்தில்(Communicative English)  முதுகலைப் பட்டம் பெற்றார்.
மீரா கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் பேராசிரியர்களான ராமச்சந்திரன் பிள்ளை, அமிர்தாகுமாரி ஆகியோரின் மகளாக பெப்ரவரி 20, 1979 அன்று பிறந்தார். சாஸ்தம்கோட்டாவில் உள்ள டி.பி. கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் தொடர்புத்துறை ஆங்கிலத்தில்(Communicative English)  முதுகலைப் பட்டம் பெற்றார்.
 
==தனி வாழ்க்கை==
==தனி வாழ்க்கை==
மீராவின் கணவர் திலீப் மலையாள மனோரமாவில் பத்திரிகையாளர். மகள் ஸ்ருதி. மீரா குடும்பத்துடன் கோட்டயத்தில் வசிக்கிறார்.
மீராவின் கணவர் திலீப் மலையாள மனோரமாவில் பத்திரிகையாளர். மகள் ஸ்ருதி. மீரா குடும்பத்துடன் கோட்டயத்தில் வசிக்கிறார்.
Line 16: Line 17:
மீரா  [[கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்]]  தன்மீது முதன்மையான தாக்கம் செலுத்தியவர் எனவும், தன்னைக் கவர்ந்த இலக்கியப் படைப்புகளாக  வி.கிருஷ்ண பிள்ளை, [[கமலாதாஸ்]], டி. பத்மநாபன், எஸ்.வி. வேணுகோபன் நாயர், ஆனந்த், எம். முகுந்தன், சி.வி. ஸ்ரீராமன், ஓ. என். வி குருப்,  [[சுகதகுமாரி]] உட்பட பல இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளையும்  குறிப்பிடுகிறார்.  
மீரா  [[கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்]]  தன்மீது முதன்மையான தாக்கம் செலுத்தியவர் எனவும், தன்னைக் கவர்ந்த இலக்கியப் படைப்புகளாக  வி.கிருஷ்ண பிள்ளை, [[கமலாதாஸ்]], டி. பத்மநாபன், எஸ்.வி. வேணுகோபன் நாயர், ஆனந்த், எம். முகுந்தன், சி.வி. ஸ்ரீராமன், ஓ. என். வி குருப்,  [[சுகதகுமாரி]] உட்பட பல இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளையும்  குறிப்பிடுகிறார்.  


மீராவின் முதல் சிறுகதை  2000-ம் ஆண்டில் மாத்ருபூமி இதழில் வெளிவந்தது.  முதல் சிறுகதைத் தொகுப்பு 'ஓர்மயுடே ஞரம்பு' 2002 -ல் வெளிவந்து கேரள சாகித்ய அகாடமியின் கீதா ஹிரண்யன் அறக்கட்டளை விருதையும் 'அங்கணம்' இலக்கிய விருதையும் வென்றது.  'மோகமஞ்சா'  என்னும் சிறுகதைத் தொகுப்பு 2004 -ல் வெளிவந்தது. ஜே. தேவிகாவால் ஆங்கிலத்தில் ' Yellow is the color of longing' எனற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது.  விழைவின்  அபத்தத்தை ஆராய்ந்த  தலைப்புச் சிறுகதை 'அர்ஷிலதா' என்னும் இந்திய, வங்காளதேசப் பெண் எழுத்தாளர்களின் புனைவுத் தொகுப்பில் (''Arshilata: Women's Fiction from India and Bangladesh'' (ed. Niaz Zaman) இடம்பெற்றது.   
மீராவின் முதல் சிறுகதை  2000-ம் ஆண்டில் மாத்ருபூமி இதழில் வெளிவந்தது.  முதல் சிறுகதைத் தொகுப்பு 'ஓர்மயுடே ஞரம்பு' 2002 -ல் வெளிவந்து கேரள சாகித்ய அகாதெமியின் கீதா ஹிரண்யன் அறக்கட்டளை விருதையும் 'அங்கணம்' இலக்கிய விருதையும் வென்றது.  'மோகமஞ்சா'  என்னும் சிறுகதைத் தொகுப்பு 2004 -ல் வெளிவந்தது. ஜே. தேவிகாவால் ஆங்கிலத்தில் ' Yellow is the color of longing' எனற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது.  விழைவின்  அபத்தத்தை ஆராய்ந்த  தலைப்புச் சிறுகதை 'அர்ஷிலதா' என்னும் இந்திய, வங்காளதேசப் பெண் எழுத்தாளர்களின் புனைவுத் தொகுப்பில் (''Arshilata: Women's Fiction from India and Bangladesh'' (ed. Niaz Zaman) இடம்பெற்றது.   


'ஏவ் மரியா'  சிறுகதைத்  தொகுப்புக்காக 2008-ல் கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றார்.  கேரளத்தில் கம்யூனிசப் புரட்சியாளர்களின்  குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்பைப் பேசும்  இத்தொகுப்பின் தலைப்புக் கதையின் மொழியாக்கம்  ''First Proof 5, The Penguin Book of New Writing from India'' (Penguin, 2010) என்ற தொகுப்பில் இடம்பெற்றது.  
'ஏவ் மரியா'  சிறுகதைத்  தொகுப்புக்காக 2008-ல் கேரள சாகித்ய அகாதெமி விருதை வென்றார்.  கேரளத்தில் கம்யூனிசப் புரட்சியாளர்களின்  குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்பைப் பேசும்  இத்தொகுப்பின் தலைப்புக் கதையின் மொழியாக்கம்  ''First Proof 5, The Penguin Book of New Writing from India'' (Penguin, 2010) என்ற தொகுப்பில் இடம்பெற்றது.  


====== நாவல்கள் ======
====== நாவல்கள் ======
Line 77: Line 78:
* [https://amruthamagazine.com/2023/06/29/193-kr-meeras-two-novels-elango/ கே.ஆர். மீராவின் இரண்டு நாவல்கள் – இளங்கோ, அம்ருதா இதழ்]
* [https://amruthamagazine.com/2023/06/29/193-kr-meeras-two-novels-elango/ கே.ஆர். மீராவின் இரண்டு நாவல்கள் – இளங்கோ, அம்ருதா இதழ்]


{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:24, 8 May 2024

K.R. Meera.jpg

கே.ஆர். மீரா (பிறப்பு:பிப்ரவரி 20, 1979) மலையாள எழுத்தாளர், இதழாளர். 'ஆராச்சார்' சாகித்ய அகாதெமி, வயலார் விருது உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்ற படைப்பு.

பிறப்பு, கல்வி

மீரா கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் பேராசிரியர்களான ராமச்சந்திரன் பிள்ளை, அமிர்தாகுமாரி ஆகியோரின் மகளாக பெப்ரவரி 20, 1979 அன்று பிறந்தார். சாஸ்தம்கோட்டாவில் உள்ள டி.பி. கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் தொடர்புத்துறை ஆங்கிலத்தில்(Communicative English) முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மீராவின் கணவர் திலீப் மலையாள மனோரமாவில் பத்திரிகையாளர். மகள் ஸ்ருதி. மீரா குடும்பத்துடன் கோட்டயத்தில் வசிக்கிறார்.

இதழியல்

மீரா 1993-ல் மலையாள மனோரமாவில் பத்திரிகையாளரப் பணியில் சேர்ந்தார். 1995-ல் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். எழுத்துப் பணிக்காக 2006-ம் ஆண்டில் பத்திரிகைத் தொழிலைத் துறந்தபோது மலையாள மனோரமாவின் மூத்த துணை ஆசிரியராக இருந்தார். மலையாள மனோரமாவில் பல முக்கியமான செய்திக்கட்டுரைகளை எழுதி அங்கீகாரங்களைப் பெற்றார். 1998-ல் கேரளாவில் பெண் தொழிலாளர்களின் அவலநிலை குறித்த விசாரணைத் தொடருக்காக பத்திரிகைக்கான PUCL மனித உரிமைகள் தேசிய விருதை வென்றார். இந்தத் தொடர் கேரளா பிரஸ் அகாடமியால் நிறுவப்பட்ட சோவர பரமேஸ்வரன் விருதையும் வென்றது. குழந்தைகள் பற்றிய தொடர் 2001-ல் குழந்தை உரிமைகளுக்கான 'தீபாலயா தேசிய இதழியல் விருதைப் பெற்றது.

கே.ஆர். மீரா இதழ்களில் பத்திகளும் எழுதிவருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

மீரா கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தன்மீது முதன்மையான தாக்கம் செலுத்தியவர் எனவும், தன்னைக் கவர்ந்த இலக்கியப் படைப்புகளாக வி.கிருஷ்ண பிள்ளை, கமலாதாஸ், டி. பத்மநாபன், எஸ்.வி. வேணுகோபன் நாயர், ஆனந்த், எம். முகுந்தன், சி.வி. ஸ்ரீராமன், ஓ. என். வி குருப், சுகதகுமாரி உட்பட பல இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளையும் குறிப்பிடுகிறார்.

மீராவின் முதல் சிறுகதை 2000-ம் ஆண்டில் மாத்ருபூமி இதழில் வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'ஓர்மயுடே ஞரம்பு' 2002 -ல் வெளிவந்து கேரள சாகித்ய அகாதெமியின் கீதா ஹிரண்யன் அறக்கட்டளை விருதையும் 'அங்கணம்' இலக்கிய விருதையும் வென்றது. 'மோகமஞ்சா' என்னும் சிறுகதைத் தொகுப்பு 2004 -ல் வெளிவந்தது. ஜே. தேவிகாவால் ஆங்கிலத்தில் ' Yellow is the color of longing' எனற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது. விழைவின் அபத்தத்தை ஆராய்ந்த தலைப்புச் சிறுகதை 'அர்ஷிலதா' என்னும் இந்திய, வங்காளதேசப் பெண் எழுத்தாளர்களின் புனைவுத் தொகுப்பில் (Arshilata: Women's Fiction from India and Bangladesh (ed. Niaz Zaman) இடம்பெற்றது.

'ஏவ் மரியா' சிறுகதைத் தொகுப்புக்காக 2008-ல் கேரள சாகித்ய அகாதெமி விருதை வென்றார். கேரளத்தில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்பைப் பேசும் இத்தொகுப்பின் தலைப்புக் கதையின் மொழியாக்கம் First Proof 5, The Penguin Book of New Writing from India (Penguin, 2010) என்ற தொகுப்பில் இடம்பெற்றது.

நாவல்கள்

கே.ஆர். மீராவின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படும் 'ஆராச்சார்', 'மத்யம்' என்ற வார இதழில் தொடராக வெளிவந்தது 2012-ல் டி. சி. புக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மேற்கு வங்கத்தைக் களமாகக் கொண்டு பொ.யு. நான்காம் நூற்றாண்டு தொடங்கி 'ஆராச்சார்' எனப்படும் தூக்குதண்டனை நிறைவேற்றுபவரின் நீண்ட பரம்பரையின் கதையைக் கூறும் நூல். நாவலின் கதாநாயகி சேத்னா, இந்தத் தொழிலைத் தன் வாரிசுரிமையாகப் பெறப் போராடும் பெண். கேரள சாகித்ய அகாதெமி , ஓடக்குழல் விருது, வயலார் விருது ஆகியவற்றைப் பெற்றது. ஆராச்சார் ஜே. தேவிகாவால் ஆங்கிலத்தில் 'Hangwoman: Everyone Loves A Good Hanging ' (Hamish Hamilton, 2014) என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டுக்கான தெற்காசிய இலக்கியத்திற்கான டிஎஸ்சி பரிசுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றது. அவரது சமீபத்திய நாவலான 'சூரியனெ அணிஞ்ஞ ஒரு பெண்' 'வனித' இதழில் தொடராக வெளிவந்தது. தமிழில் மோ.செந்தில்குமார்

திரைத்துறை

கே.ஆர். மீரா நான்கு தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். தேசிய விருது பெற்ற 'ஒரே கடல்' திரைப்படத்தின் எழுத்துப்பணியில் பங்காற்றினார்.

விருதுகள். பரிசுகள்

  • லலிதாம்பிகா இலக்கிய விருது -2004
  • கீதா ஹிரண்யன் அறக்கட்டளை விருது(ஓர்மையுட ஞரம்பு)-2004)
  • கேரள சாகித்ய அகாதெமி விருது(ஆவெ மரியா தொகுப்புக்காக)-2009
  • ஓடக்குழல் விருது(ஆராச்சார் நாவலுக்காக)-2013
  • கேரள சாகித்ய அகாதெமி விருது( ஆராச்சார் நாவலுக்காக)-2013
  • வயலார் விருது(ஆராச்சார் நாவலுக்காக)-2014
  • சாகித்ய அகாதெமி விருது (ஆராச்சார் நாவலுக்காக)-2015
  • டி.எஸ்.சி. பரிசுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்(ஆராச்சார் நாவலுக்காக)-2016
  • முட்டத்து வர்க்கி விருது (ஆராச்சார் நாவலுக்காக)-2018

நூல்கள்

நாவல்
  • நேத்ரோன்மீலனம்
  • மீராசாது (ஆங்கிலத்தில் Poison of love மொழியாக்கம் மினிஸ்தி)
  • யூதாசின்டே சுவிசேஷம்( ஆங்கிலத்தில் The Gospel of Yudas மொழியாக்கம் ;ராஜேஷ் ராஜ்மோஹன்)
  • மலாகயுடெ மருகுகள்
  • கரிநீல
  • ஆ மரத்தெயும் மறந்நு மறந்நு ஞான் (ஆங்கிலத்தில் :And Slowly Forgetting that Tree மொழியாக்கம் ஜே.தேவிகா)
  • ஆராச்சார் ( ஆங்கிலத்தில்:Hangwoman: Everyone Loves a Good Hanging மொழியாக்கம் : ஜே.தேவிகா)
  • சூர்யனெ அணிஞ்ஞ ஒரு ஸ்த்ரீ
  • காதகன்( ஆங்கிலத்தில்: The Assassin மொழியாக்கம்: ஜே.தேவிகா)
  • கபர்
சிறுகதைத் தொகுப்புகள்
  • சர்ப்பயக்ஞம்
  • ஓர்மையுடெ ஞரம்பு (The Vein of Memory)
  • மோஹ மஞ்சா (Yellow is the Colour of Longing)
  • ஆவே மரியா
  • கே.ஆர். மீரயுடெ கதகள்
  • கில்லடின்
  • மீரயுடெ நோவெல்லகள்
  • பெண்பஞ்சதந்தரம், மற்ற கதகள்
  • பகவான்டெ மரணம்
நினைவோடை
  • மழயில் பறக்குன்ன பக்ஷிகள்
  • என்டெ ஜீவிதத்திலே சிலர்
  • கதயெழுத்து

உசாத்துணை


✅Finalised Page