under review

கெளரி

From Tamil Wiki
Revision as of 14:40, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

To read the article in English: Gowri. ‎

கெளரி சிறுகதை 1907-ல் கஜாம்பிகை எழுதிய சிறுகதை. தமிழின் ஆரம்பகால சிறுகதைகளில் ஒன்று.

எழுத்து, வெளியீடு

1907-ல் சக்ரவர்த்தினி இதழில் வெளிவந்தது. திருச்சியைச் சேர்ந்த கஜாம்பிகை எழுதிய சிறுகதை.

கதைச்சுருக்கம்

விக்ரமன் எனும் மன்னராட்சி காலத்தில் மதுரை நகரில் ஓர் அந்தணக் குடும்பத்தில் பிறந்த கெளரி எனும் பெண்ணைப் பற்றிய கதை. சாஸ்திர முறைப்படி அவளின் எட்டாவது வயதில் திருமணம் செய்து வைக்க எண்ணியபோது அவரின் வீட்டிற்கு வைஷ்ணவ பிரம்மச்சாரி ஒருவர் பிக்ஷைக்கு வருகிறார்.சிவ பக்தரான கெளரியை பிரம்மச்சாரியின் பெற்றோருக்கு பிடிக்காமல் போகவே அவளை சிறை வைக்கின்றனர். வேத விற்பனராகிய சிவபக்தராக சிவன் வேடமிட்டு வந்து கெளரியை மீட்டு அவள் சக்தியின் அவதாரம் என உணரச் செய்யும் திருவிளையாடல் கதையாக சிறுகதை முடிகிறது.

இலக்கிய இடம்

புராணக்கதை. சிவனின் திருவிளையாடல் பற்றிய கதை. கிருபாகடாட்சம், வியாகூலம், விருத்தாப்பியர், புரோஷணை போன்ற சமஸ்கிருதச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் நடை உருவாகி வந்ததைக் காட்டும் படைப்பு.

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


✅Finalised Page