குறுந்தொகை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 448: Line 448:
தமிழ் மின் நூலகம்: <nowiki>https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lZt3#book1/</nowiki>
தமிழ் மின் நூலகம்: <nowiki>https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lZt3#book1/</nowiki>


குறுந்தொகை, மூலமும் உரையும் புலியூர் கேசிகன், சாரதா பதிப்பகம்.{{being created}}
குறுந்தொகை, மூலமும் உரையும் புலியூர் கேசிகன், சாரதா பதிப்பகம்.{{Ready for Review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:13, 1 June 2022

Ready for Review

குறுந்தொகை சங்க இலக்கிய   எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. இந்நூல் எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துச் சுட்டும் பழம்பாடலில் "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுகிறது.

பெயர்க் காரணம்

குறுந்தொகை நான்கு முதல் எட்டு வரையான குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.

நூல் குறிப்பு

குறுந்தொகை நூலில் 401 பாடல்கள் உள்ளன. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் குறுந்தொகையும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக அதாவது 235 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை மற்றும் அகநானூறு பாடல் தொகுப்புகளை ஒத்துள்ளது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ எனினும் தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். எட்டுத்தொகை நூல்களை கீழ்காணும் பாடல் வரிசைப் படுத்துகிறது.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை

இப்பாடலில் நல்ல குறுந்தொகை என்ற அடைமொழி இந்நூலின் சிறப்பைக் கூறுவதாகக் கருதப்படுகிறது.

பாடியோர்

இத்தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ( 191, 201, 256, 313, 321, 326, 375, 379, 381, 395)  ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மேலும், சில பாடல்களின் சிறப்பு நோக்கி அதில் அமைந்த சிறப்புத் தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். அவர்களில் 'செம்புலப்பெயல் நீரார்' ( 40), 'அணிலாடு முன்றிலார்' (41),  'மீனெறி துாண்டிலார்'(54)  'விட்ட குதிரையார்'(74), ஓரேருழவனார்' (131),  'காக்கைப் பாடினியார்'(210), ' ' 'காலெறி கடிகையார்' (267), 'கல்பொரு சிறுநுரையார்' (290), குப்பைக் கோழியார்'(305), முதலானோர் உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள். இதுபோல 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள  கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

நூலமைப்பு

குறுந்தொகை நான்கு முதல் எட்டு வரையான (307 மற்றும் 391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூல் அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுகின்ற போதும் முதற்பொருள் மற்றும் கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தந்துள்ளது. இதில் வர்ணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளைச் சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.

குறுந்தொகை பழைய உரைகள்

இந்த நூலின் முதல் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத அடுத்த 20 பாடல்களுக்கு ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார். நச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.

குறுந்தொகை காட்டும் செய்திகள்

குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்குப் "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலாற்றுச் சான்றாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுநீரினும் ஆரளவின்றே சாரல்கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டுபெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே(3).

என்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது.

"வினையே ஆடவர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது.

பதிப்பு வரலாறு

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.

புலவர்களின் பெயர்கள்

குறுந்தொகை நூலிலுள்ள பாடல்களை பாடியவர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி; அடைப்புக்குறிக்குள் அவர்கள் பாடிய பாடல் எண்.

அஞ்சில் ஆந்தையார் (294)

அண்டர் மகன் குறுவழுதியார் (345)

அணிலாடு முன்றிலார் (41)

அம்மூவனார் (49,125,163, 303, 306, 318,

327, 340, 351, 397, 401)

அரிசில் கிழார் (193)

அழிசி நச்சாத்தனார் (271)

அள்ளூர் நன்முல்லையார் 32,67,68,93,96,

140,157, 202,237)

அறிவுடை நம்பி (230)

ஆசிரியன் பெருங்கண்ணனார் (239)

ஆதி மந்தியார் (31)

ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன்‌ (184)

ஆலங்குடி வங்கனார் (5,45)

ஆலத்தூர் கிழார் (112,350)

இடைக்காடனார் (251)

இருந்தையூர்க் கொற்றன் புலவனார்(335)

இளங் கீரந்தையார் (148)

இளங்கீரனார்(116)

இளம்பூதனார்(334)

இறையனார்(2)

ஈழத்துப் பூதன் தேவனார் (189, 343, 360)

உகாய்க்குடி கிழார் (63)

உருத்திரனார்(274)

உரொடகத்துக் கந்தரத்தனார்(155)

உலொச்சனார்(175,177,205,248)

உழுந்தினைம் புலவன் (333)

உறையனார்(207)

உறையூர்ச் சல்லியன் குமரனார்(309)

உறையூர்ச் சிறுகந்தனார்(257)

உறையூர்ப் பல்காயனார்(374)

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்(133)

உறையூர் முதுகூத்தனார் (353, 371)

உறையூர் முதுகொற்றனார்(221, 390)

ஊண்‌ பித்தையார்(232)

எயிற்றினார்(286)

ஐயூர்‌ முடவனார்(123, 206, 322)

ஒக்கூர் மாச்சாத்தியார்(126,139, 186, 220 ,275)

ஒருசிறைப் பெரியனார்(272)

ஓத ஞானியார்(227)

ஓதலாந்தையார்(12,21,329)

ஓரம் போகியார் (10, 70,122, 127, 384)

ஓரிற் பிச்சையார்(277)

ஓரேர் உழவனார் (131)

ஔவையார் (15, 23, 28, 29, 39, 43, 80, 91, 99,

102,158,183, 200, 364, 388)

கங்குல் வெள்ளத்தார் (387)

கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொன்றார்(213,216)

கச்சிப்பேட்டு நன்னாகையார்(30,172,180,192,197,287)

கடம்பனூர்ச் சாண்டிலியனார்(307)

கடியலூர் உருத்திரங் கண்ணனார்(352)

கடுகு பெருந்தேவனார்(255)

கருந்தோட் கரவீரனார்(69)

கடுவன் மள்ளனார்(82)

கண்ணனார் (244  )

கணக்காயன் தத்தனார் (304)

கந்தக் கண்ணனார் (94)

கபிலர்(13,18,25,38,43,87,95,100,

106,115,121,142,153,187,198,

208, 225, 241, 246, 264, 288, 291,

312, 355, 357, 361, 385)

கயத்தூர் கிழார்(354)

கயமனார் ( 9,356,378,396)

கருவூர்க் கதப்பிள்ளை(64, 265, 380)

கருவூர்க் கிழார் (170)

கருவூர்ச் சேரமான் சாத்தனார் (268)

கருவூர்ப் பவுத்திரனார் (162)

கருவூர் ஓதஞானி(71)

கல்பொரு சிறு நுரையார் (290)

கல்லாடனார்(260, 269)

கவை மகனார் (324)

கழார்க் கீரன் எயிற்றனார் (35, 261, 330)

கள்ளில் ஆத்திரையனார்(293)

காக்கை பாடினியார் நச்செள்ளையார்(210)

காமஞ்சேர் குளத்தார்(4) காலெறி கடிகையார்(267)

காலன்முல்லைப் பூதனார் (104, 211)

காவிரிப்பூம்‌ பட்டினத்துக் கந்தரத்தனார்(342)

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்(297)

காவிரிப்பூம்பட்டினத்து‌ச் சேந்தங் கண்ணனார் (347)

கிடங்கில் குலபதி நக்கண்ணனார்(252)

கிள்ளி மங்கலம் கிழார் (76,110,152,181)

குட்டுவன் கண்ணனார்(170)

குடவாயிற் கீரத்தனார்(281, 369)

குடவாயிற் கீரனக்கனார்(79)

குப்பைக் தோழியாய்(305)

குழற்றத்தனார்(242)

குறியிறையார்(394)

குறுங்கீரனார்(382)

குறுங்குடி மருதனார்(344)

குன்றியனார்( 50, 51,117, 239, 301, 336)

கூடலூர் கிழார் (166,167, 214)

கூவன் மைந்தனார் (224)

கொல்லன் அழிசி(26,138,145, 240)

கொல்லிக் கண்ணனார்(34)

கொற்றனார் (218, 358)

கோக்குள முற்றினால்(98)

கோப்பெருஞ் சோழர் (20,53,129,147)

கோவர்த்தனார்(66,194) கோவூர் கிழார் (65)

கோவேங்கைப் பெருங்கதழ்வர்(134)

கோழிக் கொற்றனார்(276)

சத்திநாதனார்(119)

சாத்தனார்(349)

சிறைக்குடி ஆந்தையார் (56,57,62,132,168, 222, 273, 300)

செம்புலப் பெயனீரார்(40)

செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தனார்(225)

செல்லூர்க் கொற்றனார்(363)

சேந்தம் பூத்தார்(247)

சேந்தன் கீரனார்(311)

சேரமான்‌ எந்தை(22)

தங்கால் முடக்கொல்லனார்(217)

தாமோதரனார்(92)

தாயங் கண்ணனார்(319)

தீப்பத்தேளார்(1)

தீன்மதி நாகனார் ( 111)

தும்பிசேர் கீரனார்(61, 316, 360, 595)

தூங்கலொரியார்(151,295)

தேரதரனார்(195)

தேவக்குலத்தார்(3)

தொல் கபிலர்(14)

நக்கீரனார்(78,105,143,161, 266, 280,367)

நம்பி குட்டுவன்(109,243)

நரிவெரூஉத் தலையார் (5,236)

நன்னாகையார்(112, 385)

நாகம்‌ போத்தனார்(282)

நாமலார் மகன் இளங்கண்ணர் (250)

நெடும் பல்லியத்தனார்(203)

நெடும் பல்லியத்தை (178)

நெடுவெண் நிலவினார்(47)

நெய்தற் கார்க்கியர்(55, 212)

படுமரத்து மோசிகீரனார்(33,75,383)

படுமரத்து மோசி கொன்றார் (376, 377)

பதடி வைகலார்(323)

பதுமனார்(63)

பரணர்(19, 24, 36, 60, 73, 89,120,128,165, 199, 258, 259,292, 298, 328, 393, 399)

பரூஉ மோவாய்ப் பதுமர் (101)

பனம்பாரனார்(52)

பாண்டியன் பன்னாடு தந்தான் (270)

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்(156)

பார்காப்பார்(254)

பூங்கண்ணர்(253)

பூங்கண் உத்திரையார்(48,171)

பூதத்தேவர்(285)

பூதம் புல்லர் (190)

பெருங்கண்ணர் (289,310)

பெருங்குன்றூர் கிழார் (338)

பெருஞ்சாத்தனார்(263)

பெருந்தோட் குறுஞ்சாத்தனார் (308)

பெரும்பதுமனார்(7)

பெரும்பாக்கனார்(296)

பேயனார்(223, 359,n400)

பேயாய்(339)

பேரி சாத்தனார் (81,159, 278, 314, 366)

பேரெயின் முறுவலார்(17)

பொதுக்கயத்துக் கீரந்தையார் (337)

பொன்மணியார்(391)

பொன்னாகனார் (114)

மடல் பாடிய மாதங்கீரனார்(182)

மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்(322)

மதுரைக் கண்டரத்தன் (317)

மதுரை கண்ணனார்(107)

மதுரைக் கதக்கண்ணனார்(88)

மதுரைக் காஞ்சிப் புலவர், மாங்குடி கிழார், மாங்குடி மருதனார்(164,173,302)

மதுரைக் கொல்லன் புல்லன் (373)

மதுரைக் சீத்தலைச் சாத்தனார் (154)

நல்வெள்ளியார்(365)

மதுரைப் பெருங்கொல்லனார் (141)

மதுரை மருநங்கிழார் மகனார் இளம்போத்தனார்(332)

மதுரை மருதனிள நாகராஜன்(77,160,279,367)

மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்(188,215)

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (185)

மதுரையாசிரியர் கோடங்கொற்றனார்144)

மதுரை ஈழத்து பூதன் தேவனார் (189, 360)

மதுரை எழுத்தாளர் சேந்தம்பூதனார்(90,226)

மதுரை வேளா தத்தர் (315)

மள்ளனார்(72)

மாடலூர் கிழார் (150)

மாதிரத்தர்(113)

மாமலாடனார்(46)

மாமூலனார்(11)

மாயெண்டனார்(235)

மாலை மாறனார் (245)

மாவளத்தனார்(348)

மிளைக் கந்தனார்(196)

மிளைகிழான் நல்வேட்டனார் (341)

மிளைப் பெருங் கந்தனார் (136, 204, 234)

மிளை வேள் தித்தனார் ( 254)

மீனெறி தூண்டிலார்(54)

மோசீகீரனார்(59, 84)

மோதாசனார்(229)

வடமவண்ணக்கண் தாமோதரனார் (85)

வருமுலையாரித்தியார்(176)

வாடாப் பிரபந்தர்(331)

வாயிலான் தேவனார் ( 103,108)

வாயில் இளங்கண்ணனார்(346)

விட்ட குதிரையார்(74)

வில்லக விரலினார்(370)

விற்றூற்று மூதெயினனார்(372)

வெண்கொற்றனார்(86)

வெண்பூதனார்(83)

வெண்பூதியார்(97,174, 219)

வெண்மணிப் பூதி(299)

வெள்ளி வீதியார்(29, 44, 58, 130,146,149,169, 386)

வேட்டக் கண்ணனார்(389)

வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்(362)

உசாத்துணை

தமிழ் இணைய கல்விக்கழகம் https://www.tamilvu.org/ta/library-l1220-html-l1220ind-123190

தமிழ் மின் நூலகம்: https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lZt3#book1/

குறுந்தொகை, மூலமும் உரையும் புலியூர் கேசிகன், சாரதா பதிப்பகம்.Template:Ready for Review