first review completed

குறவஞ்சி நூல்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Moved template to bottom of article)
(Second Review)
Line 1: Line 1:
தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று குறவஞ்சி. ‘குறத்திப்பாட்டு மற்றும் ‘குறம்’ என்ற பெயரும் உண்டு. 'குளுவ நாடகம்' என்பதும் குறவஞ்சி வகையினைச் சேர்ந்ததே. ‘குறத்திப்பாட்டு' என்ற பெயரும் இதற்கு உண்டு. தமிழில் திருக்குற்றாலக் குறவஞ்சி, திருமலையாண்டவர் குறவஞ்சி, திருவாரூர் தியாகராசர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, திருச்செங்கோட்டுக் குறவஞ்சி எனப் பல புகழ்பெற்ற குறவஞ்சி நூல்கள் உள்ளன.  
தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று குறவஞ்சி. ‘குறத்திப் பாட்டு மற்றும் ‘குறம்’ என்ற பெயரும் உண்டு. 'குளுவ நாடகம்' என்பதும் குறவஞ்சி வகையினைச் சேர்ந்ததே. தமிழில் திருக்குற்றாலக் குறவஞ்சி, திருமலையாண்டவர் குறவஞ்சி, திருவாரூர் தியாகராசர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, திருச்செங்கோட்டுக் குறவஞ்சி என பல புகழ்பெற்ற குறவஞ்சி நூல்கள் உள்ளன.  
== குறவஞ்சி இலக்கணம் ==
== குறவஞ்சி இலக்கணம் ==
கடவுளையோ, அரசர்களையோ, வள்ளல்களையோ, செல்வந்தர்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது குறவஞ்சி நூல்களின் பொதுவான இலக்கணமாகும். தலைவன் உலாவருதல், தலைவி அவனைக் கண்டு காமுறுதல், காமநோய்கொண்டு வாடுதல், தூதுவிடுத்தல், குறத்தி வருதல், குறி கூறுதல், குறவன் வருதல், குறவன் குறத்தி வாதிடுதல், வாழ்த்துக் கூறுதல், மங்கலம் பாடுதல் போன்ற பகுதிகள் குறவஞ்சி நூல்களில் இடம் பெறும். திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய [[திருக்குற்றாலக்குறவஞ்சி]], தமிழின் முதல் குறவஞ்சி நூலாகக் கருதப்படுகிறது. [[சரபேந்திர பூபாலக் குறவஞ்சி]], [[திருச்செங்கோட்டுக் குறவஞ்சி]] போன்றவை புகழ்பெற்ற குறவஞ்சி நூல்களாகும்.
கடவுளையோ, அரசர்களையோ, வள்ளல்களையோ, செல்வந்தர்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது குறவஞ்சி நூல்களின் பொதுவான இலக்கணமாகும். தலைவன் உலாவருதல், தலைவி அவனைக் கண்டு காமுறுதல், காமநோய்கொண்டு வாடுதல், தூதுவிடுத்தல், குறத்தி வருதல், குறி கூறுதல், குறவன் வருதல், குறவன் குறத்தி வாதிடுதல், வாழ்த்துக் கூறுதல், மங்கலம் பாடுதல் போன்ற பகுதிகள் குறவஞ்சி நூல்களில் இடம் பெறும். திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய [[திருக்குற்றாலக்குறவஞ்சி]], தமிழின் முதல் குறவஞ்சி நூலாகக் கருதப்படுகிறது. [[சரபேந்திர பூபாலக் குறவஞ்சி]], [[திருச்செங்கோட்டுக் குறவஞ்சி]] போன்றவை புகழ்பெற்ற குறவஞ்சி நூல்களாகும்.
== குறவஞ்சி இலக்கிய வகைகள் ==
== குறவஞ்சி இலக்கிய வகைகள் ==
தமிழில் பல்வேறு வகைக் குறவஞ்சி நூல்கள் உள்ளன. பாட்டுடைத் தலைவனின் ஊர்ப் பெயரால் அழைக்கப்படும் திருக்குற்றாலக் குறவஞ்சி, பாட்டுடைத் தலைவனின் பெயரால் அழைக்கப்படும் தியாகேசர் குறவஞ்சி, பாட்டுடைத் தலைவனது ஊரின் பெயரும், பாட்டுடைத் தலைவனின் பெயரும் இணைந்து அழைக்கப்படும்  திருவாரூர் தியாகராசர் குறவஞ்சி, தலைவியின் பெயரால் அழைக்கப்படும் தமிழரசி குறவஞ்சி எனப் பல வகைப் பிரிவுகளில் குறவஞ்சி நூல்கள் அமைந்துள்ளன.  
தமிழில் பல்வேறு வகை குறவஞ்சி நூல்கள் உள்ளன. பாட்டுடைத் தலைவனின் ஊர்ப் பெயரால் அழைக்கப்படும் திருக்குற்றாலக் குறவஞ்சி, பாட்டுடைத் தலைவனின் பெயரால் அழைக்கப்படும் தியாகேசர் குறவஞ்சி, பாட்டுடைத் தலைவனது ஊரின் பெயரும், பாட்டுடைத் தலைவனின் பெயரும் இணைந்து அழைக்கப்படும்  திருவாரூர் தியாகராசர் குறவஞ்சி, தலைவியின் பெயரால் அழைக்கப்படும் தமிழரசி குறவஞ்சி என பல வகைப் பிரிவுகளில் குறவஞ்சி நூல்கள் அமைந்துள்ளன.  


சிலவகைக் குறவஞ்சி நூல்கள் குறத்தியின் பெயராலும் அழைக்கப்படுகின்றன. சான்றாக, ‘துரோபதைக் குறவஞ்சி’ என்ற நூலைக் குறிப்பிடலாம்.
சிலவகை குறவஞ்சி நூல்கள் குறத்தியின் பெயராலும் அழைக்கப்படுகின்றன. சான்றாக ‘துரோபதைக் குறவஞ்சி’ என்ற நூலைக் குறிப்பிடலாம்.
== குறவஞ்சி நூல்கள் பட்டியல் ==
== குறவஞ்சி நூல்கள் பட்டியல் ==
{| class="wikitable"
{| class="wikitable"
Line 30: Line 30:
|5
|5
|அனலைத்தீவுக் குறவஞ்சி
|அனலைத்தீவுக் குறவஞ்சி
|முத்துக்குமாரப்புலவர்
|முத்துக்குமாரப் புலவர்
|-
|-
|6
|6
Line 70: Line 70:
|15
|15
|காயாரோகணக் குறவஞ்சி
|காயாரோகணக் குறவஞ்சி
|அழகுமுத்துப்புலவர்
|அழகுமுத்துப் புலவர்
|-
|-
|16
|16
Line 142: Line 142:
|33
|33
|சிற்றம்பலக் குறவஞ்சி
|சிற்றம்பலக் குறவஞ்சி
|கே. என். தண்டபாணிப்பிள்ளை
|கே. என். தண்டபாணிப் பிள்ளை
|-
|-
|34
|34
Line 169: Line 169:
|-
|-
|40
|40
|டெல்லிக்குறவஞ்சி
|டெல்லிக் குறவஞ்சி
|டெல்லித் தமிழ்ச்சங்கம்
|டெல்லித் தமிழ்ச்சங்கம்
|-
|-
Line 190: Line 190:
|45
|45
|திருக்குற்றாலக் குறவஞ்சி
|திருக்குற்றாலக் குறவஞ்சி
|திரிகூட ராசப்பக் கவிராயர்
|திரிகூடராசப்பக் கவிராயர்
|-
|-
|46
|46
Line 218: Line 218:
|52
|52
|திருவிடைக்கழிக் குறவஞ்சி
|திருவிடைக்கழிக் குறவஞ்சி
|மீனாட்சி சுந்தரம்பிள்ளை
|மீனாட்சி சுந்தரம் பிள்ளை
|-
|-
|53
|53
Line 326: Line 326:
|79
|79
|முருகர் குறவஞ்சி
|முருகர் குறவஞ்சி
|நல்லவீரப்பப்பிள்ளை
|நல்லவீரப்பப் பிள்ளை
|-
|-
|80
|80
|மெய்ஞ்ஞானக் குறவஞ்சி
|மெய்ஞானக் குறவஞ்சி
|முகம்மது
|முகம்மது
|-
|-
Line 370: Line 370:
|90
|90
|வெங்களப்ப நாயக்கர் குறவஞ்சி
|வெங்களப்ப நாயக்கர் குறவஞ்சி
|மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக்கவிராயர்
|மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர்
|-
|-
|91
|91
Line 391: Line 391:
|-
|-
|95
|95
|அண்டவெளிக்குறம்
|அண்டவெளிக் குறம்
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை    
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை    
|-
|-
Line 407: Line 407:
|-
|-
|99
|99
|திருக்குருகூர் மகிழ்மாறன் பவானிக்குறம்
|திருக்குருகூர் மகிழ்மாறன் பவானிக் குறம்
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை    
|ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை    
|-
|-
|100
|100
|நெல்லைநாயகர் குயம்
|நெல்லைநாயகர் குறம்
|தொண்டைமான் முத்தையா
|தொண்டைமான் முத்தையா
|-
|-
Line 446: Line 446:
|வெங்கடேச குருதாசர்
|வெங்கடேச குருதாசர்
|}
|}
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p103321.htm குறவஞ்சி: தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்]
* [https://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p103321.htm குறவஞ்சி: தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்]
Line 453: Line 452:
* குறவஞ்சி இலக்கியம், டாக்டர் நிர்மலா மோகன், மெய்யப்பன் பதிப்பகம்
* குறவஞ்சி இலக்கியம், டாக்டர் நிர்மலா மோகன், மெய்யப்பன் பதிப்பகம்
{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:43, 23 November 2022

தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று குறவஞ்சி. ‘குறத்திப் பாட்டு மற்றும் ‘குறம்’ என்ற பெயரும் உண்டு. 'குளுவ நாடகம்' என்பதும் குறவஞ்சி வகையினைச் சேர்ந்ததே. தமிழில் திருக்குற்றாலக் குறவஞ்சி, திருமலையாண்டவர் குறவஞ்சி, திருவாரூர் தியாகராசர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, திருச்செங்கோட்டுக் குறவஞ்சி என பல புகழ்பெற்ற குறவஞ்சி நூல்கள் உள்ளன.

குறவஞ்சி இலக்கணம்

கடவுளையோ, அரசர்களையோ, வள்ளல்களையோ, செல்வந்தர்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது குறவஞ்சி நூல்களின் பொதுவான இலக்கணமாகும். தலைவன் உலாவருதல், தலைவி அவனைக் கண்டு காமுறுதல், காமநோய்கொண்டு வாடுதல், தூதுவிடுத்தல், குறத்தி வருதல், குறி கூறுதல், குறவன் வருதல், குறவன் குறத்தி வாதிடுதல், வாழ்த்துக் கூறுதல், மங்கலம் பாடுதல் போன்ற பகுதிகள் குறவஞ்சி நூல்களில் இடம் பெறும். திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றாலக்குறவஞ்சி, தமிழின் முதல் குறவஞ்சி நூலாகக் கருதப்படுகிறது. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, திருச்செங்கோட்டுக் குறவஞ்சி போன்றவை புகழ்பெற்ற குறவஞ்சி நூல்களாகும்.

குறவஞ்சி இலக்கிய வகைகள்

தமிழில் பல்வேறு வகை குறவஞ்சி நூல்கள் உள்ளன. பாட்டுடைத் தலைவனின் ஊர்ப் பெயரால் அழைக்கப்படும் திருக்குற்றாலக் குறவஞ்சி, பாட்டுடைத் தலைவனின் பெயரால் அழைக்கப்படும் தியாகேசர் குறவஞ்சி, பாட்டுடைத் தலைவனது ஊரின் பெயரும், பாட்டுடைத் தலைவனின் பெயரும் இணைந்து அழைக்கப்படும்  திருவாரூர் தியாகராசர் குறவஞ்சி, தலைவியின் பெயரால் அழைக்கப்படும் தமிழரசி குறவஞ்சி என பல வகைப் பிரிவுகளில் குறவஞ்சி நூல்கள் அமைந்துள்ளன.

சிலவகை குறவஞ்சி நூல்கள் குறத்தியின் பெயராலும் அழைக்கப்படுகின்றன. சான்றாக ‘துரோபதைக் குறவஞ்சி’ என்ற நூலைக் குறிப்பிடலாம்.

குறவஞ்சி நூல்கள் பட்டியல்

எண் நூலின் பெயர் ஆசிரியர் பெயர்
1 அமரவிடங்கன் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
2 அர்த்தநாரீசர் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
3 அலகுமலைக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
4 அழகர் குறவஞ்சி கவிகுஞ்சர பாரதியார்
5 அனலைத்தீவுக் குறவஞ்சி முத்துக்குமாரப் புலவர்
6 ஆதிமூலேசர் குறவஞ்சி தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை
7 இராசமோகனக் குறவஞ்சி கிரிராசக்கவி
8 இராமபத்திர மூப்பனார் குறவஞ்சி க. சுப்பராமய்யர்
9 கச்சாய்க் குறவஞ்சி மாப்பாண முதலியார்
10 கச்சேரி முதலியார் குறவஞ்சி இன்பக்கவி
11 கண்ணப்பர் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
12 கதிரை மலைக் குறவஞ்சி விநாயகப்புலவர் (சுதுமலை)
13 கபாலீச்சுரர் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
14 காங்கேயன் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
15 காயாரோகணக் குறவஞ்சி அழகுமுத்துப் புலவர்
16 காரைக் குறவஞ்சி மே. சுப்பையர்
17 குமாரலிங்கக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
18 கும்பேசக் குறவஞ்சி பாவநாச முதலியார்
19 குறவஞ்சி (தெலுங்கில்) ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
20 குன்றக்குடிக் குறவஞ்சி வீரபத்திரக் கவிராயர்
21 கொங்கர் குறவஞ்சி சா. தூ. சு. சோஜி
22 கொடுமளூர்க் குறவஞ்சி முதுகுளத்தூர் நல்ல வீரப்பப் பிள்ளை
23 கொடுமுடிக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
24 கோமாசிக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
25 சகசிராசன் குறவஞ்சி முத்துக்கவி
26 சந்திரசேகரக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
27 சரபேந்திர பூபாலக் குறவஞ்சி கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
28 சாப்டூர் குறவஞ்சி நகரம் முத்துசாமிக் கவிராயர்
29 சிதம்பரக் குறவஞ்சி செல்லப்பப் பிள்ளை
30 சிதம்பரக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
31 சிவபெருமான் குறவஞ்சி தாமோதரக் கவிராயர்
32 சிவன்மலைக் குறவஞ்சி தே. லெட்சுமண பாரதியார்
33 சிற்றம்பலக் குறவஞ்சி கே. என். தண்டபாணிப் பிள்ளை
34 சுவாமிமலை முருகன் குறவஞ்சி இலிங்கப்பையர்
35 செந்தில் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
36 சேற்றூர் முத்துசாமித்துரைக் குறவஞ்சி இராமசாமிக் கவிராயர்
37 சோழக் குறவஞ்சி கம்பர்
38 ஞானக் குறவஞ்சி குமரகுருபரர்
39 ஞான ரெத்தினக் குறவஞ்சி பீர் முகம்மது
40 டெல்லிக் குறவஞ்சி டெல்லித் தமிழ்ச்சங்கம்
41 தஞ்சைக் குறவஞ்சி சென்னை கேசரி அச்சகம்
42 தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
43 தத்துவக் குறவஞ்சி முருகேச பண்டிதர்
44 தமிழரசிக் குறவஞ்சி புலவரேறு அ. வரதநஞ்சைய பிள்ளை
45 திருக்குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயர்
46 திருச்செங்கோட்டுக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
47 திருப்பாகையூர்க் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
48 திருப்போரூர்க் குறவஞ்சி புரசை. அட்டாவதானம் சபாபதி முதலியார்
49 திருமணக் குறவஞ்சி ஆ. சுப்பிரமணிக் கவிராயர்
50 திருமலையாண்டவர் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
51 திருவாரூர் தியாகராசர் குறவஞ்சி முத்துக்கவி
52 திருவிடைக்கழிக் குறவஞ்சி மீனாட்சி சுந்தரம் பிள்ளை
53 துரோபதைக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
54 தேவேந்திரக் குறவஞ்சி தஞ்சை சரபோஜி மன்னர்
55 நகுலமலைக் குறவஞ்சி சேனாதிராய முதலியார்
56 நகுலமலைக் குறவஞ்சி விசுவநாத சாத்திரியார்
57 நல்லைக் குறவஞ்சி சேனாதிராய முதலியார்
58 நல்லை நகர்க் குறவஞ்சி யாழ்ப்பாணம் ப. கந்தப்பிள்ளை
59 நவபாரதக் குறவஞ்சி பாலபாரதி ச.து. சு. யோகியார்
60 நவபாரதக் குறவஞ்சி அனைத்திந்திய வானொலி நிலையம்
61 நெல்லைக் குறவஞ்சி தொண்டைமான் முத்தையா
62 பழனிக் குறவஞ்சி வே. முத்தனாச்சாரியார்
63 பாண்டிக் கொடுமுடிக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
64 பாம்பண்ணக் கவுண்டர் குறவஞ்சி அருணாசலக் கவிராயர்
65 முத்துக்கிருட்டினன் குறவஞ்சி இன்பக்கவி
66 பிரகதீசுவரர் குறவஞ்சி சிவக்கொழுந்து தேசிகர்
67 பெத்லெகேம் குறவஞ்சி தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்
68 பெம்பண்ணக் கவுண்டர் குறவஞ்சி பாலபாரதி முத்துசாமி ஐயர்
69 பொங்கலூர்க் குறவஞ்சி பிரமயனப் புலவர்
70 பொய்யாமொழியீசர் குறவஞ்சி சிதம்பரத் தத்துவலிங்கையர்
71 திருநீலகண்டர் குறவஞ்சி சாமிநாதய்யர்
72 மருங்காபுரிச் சிற்றரசர் குறவஞ்சி வெறிமங்கை பாகக் கவிராயர்
73 மருதப்பக் குறவஞ்சி பிலிப்பு தெ. மெல்லோ
74 மல்வில் குறவஞ்சி வெற்றிவேலுப் புலவர்
75 மாந்தைக் குறவஞ்சி வீரபத்திரக் கவிராயர்
76 முத்தானந்தர் குறவஞ்சி ஆற்றூர் முத்தானந்தர்
77 முத்துசாமித்துரைக் குறவஞ்சி முகவூர் கந்தசாமிக் கவிராயர்
78 முருகக்கடவுள் குறவஞ்சி இலிங்கப்பையர்
79 முருகர் குறவஞ்சி நல்லவீரப்பப் பிள்ளை
80 மெய்ஞானக் குறவஞ்சி முகம்மது
81 யாழ்ப்பாணத்துச் செல்வர் குறவஞ்சி இன்பக்கவிப் புலவர்
82 வண்ணைக் குறவஞ்சி விசுவநாத சாத்திரியார்
83 வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி கணபதி ஐயர்
84 வருணபுரி ஆதிமுலேசர் குறவஞ்சி தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை
85 வள்ளிக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
86 வள்ளியம்மன் ஆயலோட்டக் குறவஞ்சி கந்தசாமி முதலியார்
87 வன்னிக் குறவஞ்சி வெற்றிவேலுப் புலவர்
88 வாதசெயக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
89 விராலிமலைக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
90 வெங்களப்ப நாயக்கர் குறவஞ்சி மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர்
91 வேங்கடசாமி நாயக்கர் குறவஞ்சி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
92 வைணவக் குறவஞ்சி முருகேச ராமானுச ஏகாங்கிச் சுவாமிகள்
93 வைத்தியக் குறவஞ்சி கொங்கணர்
94 வையாபுரிக் குறவஞ்சி ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
குறம்
95 அண்டவெளிக் குறம் ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
96 அம்பலக் குறம் தொழுவூர் வேலாயுத முதலியார்
97 இலக்கணையர் குறம் ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
98 சொர்க்கக் குறம் பிறையாறு மீரான்கனி அண்ணாவியார்
99 திருக்குருகூர் மகிழ்மாறன் பவானிக் குறம் ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
100 நெல்லைநாயகர் குறம் தொண்டைமான் முத்தையா
101 பிசுமில் குறம் பீருமுகம்மது சாகிப்
102 மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபர சுவாமிகள்
103 மாது குறம் மீரான் கனியண்ணாவியார்
104 மின்னொளியாள் குறம் புகழேந்திப் புலவர்
105 விதுரர் குறம் புகழேந்திப் புலவர்
106 வித்துவான் குறம் புகழேந்திப் புலவர்
107 வேதபுரீசர் குறம் ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை  
108 வேதாந்தக் குறம் வெங்கடேச குருதாசர்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.