under review

குமாரதேவர்

From Tamil Wiki
Revision as of 14:39, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Kumaradevar. ‎

குமாரதேவர் மடம் விருத்தாசலம்
குமாரதேவர் சன்னிதி

குமாரதேவர் தமிழ்ப்புலவர் (காலம் 18ம் நூற்றாண்டு). கர்நாடக வீர சைவ மரபினைச் சார்ந்தவர். இவர் இயற்றிய மகாராஜா துறவு நூல் முக்கியமான படைப்பு. விருத்தாசலத்தில் இவருடைய மடம் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வீர சைவ மரபைச் சேர்ந்த சாந்தலிங்க அடிகளின் சீடர். இவரது குமாரதேவர் திருமடம் துறையூர் ஆதீனத்திற்கு கட்டுப்பட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது. இவர் தியானம் செய்த குகை இங்கு உள்ளது. தன் ஞான குருவாக பார்வதியைக் கருதுகிறார். இவர் கன்னட நாட்டு அரசர் எனப்படுகிறது. திருப்போரூர் சிதம்பர அடிகள் இவருடன் இணைந்து தீக்கை பெற்றவர்..

புராண வரலாறு

சிவசைலம் மலையில் தவமிருந்த ஒரு ஜடாமுனி கன்னட நாட்டின் அரசர் ஆகி பின்னர் துறையூர் சாந்தலிங்க அடிகளிடம் மந்திரம் பெற்று குமாரதேவ முனிவராக ஆனதையும் அவர் இயற்றிய அற்புதங்களையும் பற்றி ஒரு சிறு புராணநூல் உள்ளது. திருமுதுகுன்றம் ஸ்ரீ குமாரதேவர் சரிதம். எழுதியவர் தே.ஆ.ஸ்ரீனிவாசாச்சாரி ( இணைய நூலகம்)

இலக்கிய வாழ்க்கை

குமாரதேவர் விருதாச்சலம் பெரியநாயகி சமேத பழமலைநாதர் மீது பாடல் பாடியுள்ளார். திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் இவரின் மாணவர். குமார தேவரின் நினைவாக போரூர் குமார ஆலயத்தினை சிதம்பர சுவாமிகள் நிறுவினார். மகாராஜா துறவு ம.தி.பானுகவி பொழிப்புரையுடன் வெளியாகியுள்ளது.

நூல் பட்டியல்

  • மகாராஜா துறவு
  • சுத்த சாதகம்
  • விஞ்ஞான சாரம்
  • அத்துவிதவுண்மை
  • பிரமானுபூதி விளக்கம்
  • ஞானவம்மானை
  • வேதாந்தத் தசாவவத்தைக் கட்டளை
  • வேதாந்தத சகாரியக்கட்டளை
  • வேதநெறியகவல்.
  • சகச நிட்டை - 11
  • பிரமசித்தியகவல்
  • உபதேச சித்தாந்தக் கட்டளை
  • சிவதரிசன அகவல்
  • ஆகமநெறியகவல்
  • பிரமானுபவ அகவல்
  • சிவசமரசவாத அகவல்

உசாத்துணை


✅Finalised Page