குகப்பிரியை

From Tamil Wiki
Revision as of 20:48, 27 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "குகப்பிரியை ( ) தமிழில் கதைகள் எழுதிய தொடக்ககாலப் பெண் எழுத்தாளர். குடும்பச்சூழலில் பெண்களின் பிரச்சினைகளை எழுதியவர் == தனிவாழ்க்கை == குகப்பிரியையின் இயற்பெயர் டாக்டர் லட்சும...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குகப்பிரியை ( ) தமிழில் கதைகள் எழுதிய தொடக்ககாலப் பெண் எழுத்தாளர். குடும்பச்சூழலில் பெண்களின் பிரச்சினைகளை எழுதியவர்

தனிவாழ்க்கை

குகப்பிரியையின் இயற்பெயர் டாக்டர் லட்சுமி. வட ஆர்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். காந்திய இயக்கத்தின்மேல் ஆர்வம் கொண்டவர்

இதழியல்

குகப்பிரியை மங்கை என்னும் பெண்கள் இதழை 1946 முதல் 1950 வரை நடத்தினார். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் இருந்து வெளியிட்டார்

இலக்கிய வாழ்க்கை

குகப்பிரியை வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய ஜகன்மோகினி, நந்தவனம் போன்ற இதழ்களிலும் ஆன்ந்தபோதினி, கலைமகள் போன்ற இதழ்களிலும் எழுதினார்.

நூல்கள்

சந்திரிகா

இருள்

ஒலி

திப்பு சுல்தான்

மார்த்தாண்ட வர்மன்

தேவகி முதலிய கதைகள்