குகப்பிரியை

From Tamil Wiki
Revision as of 00:28, 28 February 2022 by Jeyamohan (talk | contribs)

குகப்பிரியை ( ) தமிழில் கதைகள் எழுதிய தொடக்ககாலப் பெண் எழுத்தாளர். குடும்பச்சூழலில் பெண்களின் பிரச்சினைகளை எழுதியவர்

தனிவாழ்க்கை

குகப்பிரியையின் இயற்பெயர் டாக்டர் லட்சுமி. வட ஆர்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். காந்திய இயக்கத்தின்மேல் ஆர்வம் கொண்டவர். அவர் பெயர் சுவர்ணாம்பாள் என்றும் கணவர் பெயர் சுப்ரமணிய ஐயர் என்றும் அவர் பெயரில் இருந்து குகப்பிரியை என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார் என்றும் ஒரு குறிப்பு உள்ளது.

இதழியல்

குகப்பிரியை மங்கை என்னும் பெண்கள் இதழை 1946 முதல் 1950 வரை நடத்தினார். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் இருந்து வெளியிட்டார்

இலக்கிய வாழ்க்கை

குகப்பிரியை வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய ஜகன்மோகினி, நந்தவனம் போன்ற இதழ்களிலும் ஆன்ந்தபோதினி, கலைமகள் போன்ற இதழ்களிலும் எழுதினார். 1933-ல் ‘கல்கி’ விகடனில் 1000 ரூபாய் பரிசு கொண்ட நாவல் போட்டி வைத்தார்.  பத்திரிகை உலகில் முதல் பெரிய நாவல் போட்டி அது.இரண்டு நாவல்கள் தேர்வுற்றன. அவற்றுள் ஒன்று “குகப்ரியை”யின் “சந்திரிகா”. பின்னர் விகடனில் அது தொடராக வந்து நூலாகவும் வெளிவந்தது. நாவலின் முகவுரையில் கல்கி ‘குகப்ரியையின் தமிழ்நடை உயிருள்ள நடை, தங்கு தடையின்றி இனிய நீரோட்டம்போல் செல்லும் நடை’ என்று எழுதினார்.

நூல்கள்

  • சந்திரிகா
  • இருள்
  • ஒலி
  • திப்பு சுல்தான்
  • மார்த்தாண்ட வர்மன்
  • தேவகி முதலிய கதைகள்

உசாத்துணை