கி.பார்த்திப ராஜா

From Tamil Wiki
Revision as of 18:45, 4 April 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கி.பார்த்திப ராஜா ( ) நாடகக் கலைஞர், தமிழிலக்கிய ஆய்வாளர், கல்வியாளர். == பிறப்பு, கல்வி == இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், பெருவாக்கோட்டையில் சி.கிருஷ்ணன் – கி.லட்சுமி அம்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கி.பார்த்திப ராஜா ( ) நாடகக் கலைஞர், தமிழிலக்கிய ஆய்வாளர், கல்வியாளர்.

பிறப்பு, கல்வி

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், பெருவாக்கோட்டையில் சி.கிருஷ்ணன் – கி.லட்சுமி அம்மாள் இணையருக்கு பிறந்தார். பெருவாக்கோட்டை, மங்கலக்குடி, ஓரியூர் ஆகிய இடங்களில் தொடக்கப் பள்ளிக்கல்வியை முடித்து, காரைக்குடி ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் மேல்நிலைப்பள்ளியில் உயர்நிலை வகுப்பையும் மு.வி.மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்பையும் படித்தார்.காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.சென்னை பல்கலையில் முனைவர் பொற்கோ, முனைவர் வீ.அரசு ஆகியோரின் மாணவர். ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கி.பார்த்திபராஜா திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ் மற்றும் முதுகலை ஆய்வுத்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்

இலக்கியவாழ்க்கை

1999 ஆம் ஆண்டில் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வருகைதரு பேராசிரியராக வந்தபோது அவருடைய உதவியாளராகப் பணியாற்றினார். சி.சுப்ரமணிய பாரதியார் பற்றி ஞான ராஜசேகரன் எடுத்த பாரதி என்னும் படம் வெளிவந்தபோது பாரதியார் பற்றி எதிர்மறையாக வந்த விமர்சனங்களை எதிர்கொள்ளும்பொருட்டு 2001ல் தன் முதல் நூலை எழுதினார். கி.பார்த்திபராஜா அவ்வப்போது இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை ‘சுழல்’ என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டார். வீ.அரசுவும் இவரும் இணைந்து ‘வாய்மொழி வரலாறு’, ‘நாட்டார் சாமிகள்’ என்னும் இரு தொகுப்பு நூல்களைக் கொண்டு வந்தனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த ஒயிலாட்டத்தை முழுவதுமாகப் பதிவு செய்து, ‘இராமாயண ஒயில் நாடகம்’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார் கி.பார்த்திபராஜா.