under review

கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார்

From Tamil Wiki
Revision as of 23:05, 24 April 2023 by Madhusaml (talk | contribs) (Finalized)
கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார்

கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார்( 22 ஆகஸ்ட் 1970) கிறிஸ்தவக் கவிஞர். வேதநாயகம் சாஸ்திரியாரின் மரபில் ஒருவர் தன்னை வேதநாயகம் சாஸ்திரியார் என அறிவித்துக்கொண்டு கிறிஸ்தவப் பணிபுரியும் வழக்கமுண்டு. அந்த மரபில் வந்தவர் கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார். வயலின் கலைஞர்.

பிறப்பு, கல்வி

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் புகழ்பெற்ற இசைக்கவிஞர். அவருடைய மரபைச் சேர்ந்தவர்கள் தங்களைவேதநாயகம் சாஸ்திரியார் மரபு என அறிவித்துக்கொண்டு தொடர்ந்து வேதநாயகம் சாஸ்திரியார் என்னும் பட்டத்தை பெற்று வருகிறார்கள். அந்த வழியில் வந்தவர் கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார்.

துரைராஜ் பாகவதர் வேதநாயக சாஸ்திரியார் மற்றும் திருமதி சுசீலா வேதநாயகம் ஆகியோரின் மகனாக ஆகஸ்ட் 22, 1970 ல் பிறந்தார். வேப்பேரியில் உள்ள அனிதா பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார், தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் வணிகவியல் படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் கிளமென்ட்டுக்கு இரண்டு மூத்த சகோதரிகள், எஸ்தர் ஜார்ஜினா மற்றும் சாரா ஏஞ்சென்லியா . மூத்த சகோதரர் ஜெயசீலன் ஜெபராஜ். கிளமெண்ட் 1996 இல் எலிசபெத் மோனிகாவை மணந்தார். 1996 இல் கிளமென்ட் மற்றும் மோனிகா தம்பதியருக்கு சுதர்சன் ஐசக் என்ற மகன் பிறந்தார் . அதைத் தொடர்ந்து 1998 இல் கரிஷ்மா அபிகாயில் என்ற மகளும் பிறந்தார்.

இசைவாழ்க்கை.

கிளெமெண்ட் ஒரு வயலின் கலைஞர். 12 வயது முதல் கீழை இசை மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசை இரண்டையும் கற்றுக்கொண்டார். அவர் தனது தந்தையுடன் இணைத்து தேவாலயங்களில் கிறிஸ்தவப் பாடல்களை பாடிவந்தார் .கிறித்தவக் கல்லூரியில் பயின்றபோது, ​​அவர் பர்ன் என்ற ராக் இசைக்குழுவில் ஆறு ஆண்டுகள் வயலின் வாசித்தார். உலகமெங்கும் பலநாடுகளில் இசைநிகழ்வுகள் நடத்தியுள்ள கிளமென்ட்அவரது இசைக்குழுவான GAMAZ ல் தலைமை இசையமைப்பாளர்.

வேதநாயகம் சாஸ்திரியார்

கிளமெண்ட் புகழ்பெற்ற வேதநாயகம் சாஸ்திரியாரின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர். தந்தை துரைராஜ் வேதநாயகம் சாஸ்திரியாருக்குப் பின் கிளமெண்ட் அடுத்த வேதநாயகம் சாஸ்திரியார் என பட்டம் பெற்றுள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page