கிருபா சத்தியநாதன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
{{ready for review}}
[[File:Krupabai Satthianadhan hamletram dot blogspot.jpg|thumb|''Photo courtesy: Hamletram.blogspot.com'']]
[[File:Krupabai Satthianadhan hamletram dot blogspot.jpg|thumb|''Photo courtesy: Hamletram.blogspot.com'']]
கிருபா சத்தியநாதன் (கிருபாபாய் சத்தியநாதன்) (பிப்ரவரி 14, 1862–1894)  தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையை பற்றி ஆங்கிலத்தில் நாவல்களை எழுதியவர். இவரது நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஆகவே சில ஆய்வாளர் இவரை தமிழ் நாவலாசிரியர்களின் பட்டியலில் சேர்ப்பதுண்டு. இவர் Kamala- A Hindu life மற்றும் Saguna-A Christian life என்னும் இரு நாவல்களை எழுதியிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெண்களின் வாழ்க்கை பற்றிய பெண்நிலைவாதச் சித்திரங்களை எழுதியவர் என இன்று மதிப்பிடப்படுகிறார்.
கிருபா சத்தியநாதன் (கிருபாபாய் சத்தியநாதன்) (பிப்ரவரி 14, 1862 - 1894)  தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையை பற்றி ஆங்கிலத்தில் நாவல்களை எழுதியவர். இவரது நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஆகவே சில ஆய்வாளர் இவரை தமிழ் நாவலாசிரியர்களின் பட்டியலில் சேர்ப்பதுண்டு. இவர் Kamala- A Hindu life மற்றும் Saguna-A Christian life என்னும் இரு நாவல்களை எழுதியிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெண்களின் வாழ்க்கை பற்றிய பெண்நிலைவாதச் சித்திரங்களை எழுதியவர் என இன்று மதிப்பிடப்படுகிறார்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 15: Line 12:

கிருபாபாய்  இரு வெள்ளையப் பெண்களின் கல்வி  உதவித்தொகை பெற்று சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தன் 16 வயதில் தனியாக சென்னைக்கு வந்தார். சென்னையில் அவர் புகழ்பெற்ற மதப்பரப்புநரான ரெவெரெண்ட் டபிள்யூ.டி. சத்தியநாதனின் குடும்பத்துடன் தங்கினார். 1878-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கிருபா சத்தியநாதன் மருத்துவப்பணியில் காசநோய் தொற்றுக்கு ஆளானார். 1879-ல் புனேவில் உள்ள தனது சகோதரியிடம் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றார். திரும்பி வந்து சத்தியநாதனின் மகன் சாமுவேல் சத்தியநாதனை 1881-ல் மணந்துகொண்டார். சாமுவேல் கேம்ப்ரிட்ஜ் மாணவர். சாமுவேல் ஊட்டியில்  Breeks Memorial School பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றச் சென்றார். கிருபா மருத்துவக் கல்வியை முடிக்காமல் ஊட்டிக்குச் சென்று அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். அங்கே முஸ்லீம் பெண்குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை சர்ச் மிஷனரி சொசைட்டி உதவியுடன் தொடங்கினார்.[[File:Satthianadhans andson thumb.jpg|thumb|ரெவெரெண்ட் சத்யநாதன் குடும்பம்]]

ஊட்டியில் அவருடைய காசநோய் கட்டுக்குள் இருந்தது. அங்குதான் அவர் தன் ஆரம்பகட்ட கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். மூன்றாண்டுகளுக்குப்பின் சாமுவேலும் கிருபாவும் ராஜமந்திரிக்கு சென்றனர். அங்கே வெம்மையான சூழலில் கிருபா மீண்டும் நோயுற்றார். ராஜமந்திரியில் இருந்து அவர்கள் கும்பகோணத்துக்கு மாறினார்கள். அவருடைய உடல்நிலை சீர்கெட்டிருந்தாலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். 1886-ல் அவர்கள் மீண்டும் சென்னைக்கே வந்துசேர்ந்தனர். சென்னையில் கிருபா அவருடைய முதல் நாவலை எழுதினார். சகுணா ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை 1887 முதல் 1888 வரை அன்று மதிப்பு மிக்கதாக இருந்த Madras Christian College Magazine-ல் வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில் கிருபாவின் ஒரே குழந்தை ஒருவயது நிறைவதற்குள் இறந்தது. அது கிருபாவை ஆழ்ந்த உளச்சோர்வுக்குள் தள்ளியது. அவருடைய காசநோயும் உச்சமடைந்தது.,அப்போதுதான் அவர் கமலா ஒரு இந்துப்பெண்ணின் கதையை எழுதினார். நடுவே தன் மாமனாரைப்பற்றியும் தன் மாமியாரைப்பற்றியும் இரு நினைவுக்குறிப்புகளை எழுதினார்.  1894-ல் தன் 31 ஆவது வயதில் உயிரிழந்தார். அவர் இறப்புக்குப்பின் ’கமலா இந்துப்பெண்ணின் கதை’ வெளிவந்தது. கிருபாபாய் பேரில் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஓர் உதவித்தொகை நிறுவப்பட்டுள்ளது. சென்னை பல்கலையில் ஆங்கிலத்தில் முதலிடம்பெறும் மாணவிக்கு ஒரு தங்கப்பதக்கமும் கிருபாபாயின் பெயரால் வழங்கப்படுகிறது.   
ஊட்டியில் அவருடைய காசநோய் கட்டுக்குள் இருந்தது. அங்குதான் அவர் தன் ஆரம்பகட்ட கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். மூன்றாண்டுகளுக்குப்பின் சாமுவேலும் கிருபாவும் ராஜமந்திரிக்கு சென்றனர். அங்கே வெம்மையான சூழலில் கிருபா மீண்டும் நோயுற்றார். ராஜமந்திரியில் இருந்து அவர்கள் கும்பகோணத்துக்கு மாறினார்கள். அவருடைய உடல்நிலை சீர்கெட்டிருந்தாலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். 1886-ல் அவர்கள் மீண்டும் சென்னைக்கே வந்துசேர்ந்தனர். சென்னையில் கிருபா அவருடைய முதல் நாவலை எழுதினார். சகுணா ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை 1887 முதல் 1888 வரை அன்று மதிப்பு மிக்கதாக இருந்த Madras Christian College Magazine-ல் வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில் கிருபாவின் ஒரே குழந்தை ஒருவயது நிறைவதற்குள் இறந்தது. அது கிருபாவை ஆழ்ந்த உளச்சோர்வுக்குள் தள்ளியது. அவருடைய காசநோயும் உச்சமடைந்தது.,அப்போதுதான் அவர் கமலா ஒரு இந்துப்பெண்ணின் கதையை எழுதினார். நடுவே தன் மாமனாரைப்பற்றியும் தன் மாமியாரைப்பற்றியும் இரு நினைவுக்குறிப்புகளை எழுதினார்.  1894-ல் தன் 31-வது வயதில் உயிரிழந்தார். அவர் இறப்புக்குப்பின் ’கமலா இந்துப்பெண்ணின் கதை’ வெளிவந்தது. கிருபாபாய் பேரில் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஓர் உதவித்தொகை நிறுவப்பட்டுள்ளது. சென்னை பல்கலையில் ஆங்கிலத்தில் முதலிடம்பெறும் மாணவிக்கு ஒரு தங்கப்பதக்கமும் கிருபாபாயின் பெயரால் வழங்கப்படுகிறது.   

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
Line 26: Line 23:
கிருபா சத்தியநாதனின் நாவல்கள் இரண்டுமே தன் வரலாற்றுத்தன்மை கொண்டவை. சகுணா ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை பெருமளவுக்கு அவருடைய வாழ்க்கையையும் கமலா ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கை பெருமளவுக்கு அவர் தாயின் வாழ்க்கையையும் காட்டுகிறது என ஆய்வாளர்கள் கருதுகிறர்கள். கமலா சமகாலத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும் கிருபாவின் தாய் அடைந்த பழமைவாதக் குடும்பத்து அடக்குமுறைகளையே அது பெரிதும் பேசுகிறது. இந்நாவல்களில் பெண்களின் துயர்களை கிருபா எழுதிக்காட்டுகிறார். மதம் மாறுவது எளிமையான தீர்வாக இருப்பதில்லை. மதம் மாறுபவர்கள் சொந்த சமூகத்தை இழப்பதுடன் தங்களை மதமாற்றிய வெள்ளையர்களின் இனமேட்டிமை நோக்கையும் எதிர்கொள்ள நேர்கிறது. கிருபாவின் நாவல்கள் பெண்கள் அடையும் அந்த இடர்களையே பெரிதும் எழுதுகின்றன.

ஆய்வாளர் தேவிகா, கிருபா சத்தியநாதனின் நாவல்களில் உள்ள இந்த இருபக்க இடர்களையும் அவருடைய நூல்களுக்கு முன்னுரைகள் எழுதிய வெள்ளையர் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறார். அவர்கள் தங்களுடைய சேவைகளுக்காகவும், கிறிஸ்தவத்தை அளித்தமைக்காகவும் கிருபா நன்றியுடன் இருப்பதாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.கிருபாவின் மறைவுக்குப் பின் அவர் நூல்களுக்கு முன்னுரை அளித்த வெள்ளைப் பெண்மணிகள் அரவணைக்கும் பாவனையிலேயே எழுதியிருக்கிறார்கள். கிருபாவிற்கு முன்னுரை அளித்த குடும்ப நண்பர் திருமதி எலிசபெத் கிரிக் (Mrs Elisabeth Grigg) கிருபா வெள்ளைக் கிறிஸ்தவர்களின் இனக்காழ்ப்பு பற்றி சொன்னவை அவருடைய தனிப்பட்ட சமநிலையின்மையின் விளைவு என்று கருதுகிறார்.[https://www.sahapedia.org/how-krupabai-satthianadhan-pioneered-indian-feminist-writing-english *] சமீபகாலமாக பெண்ணிய நோக்குடன் கிருபா சத்யநாதனின் கதைகளை ஆராயும் ஆய்வாளர்களான பிரியா ஜோஷி  போன்றவர்களே கிருபாவின் பார்வை என்பது கிறிஸ்தவ ஆதரவு நோக்கு கொண்டது அல்ல அது பிராமணியக் குடும்ப அமைப்பு கிறிஸ்தவ இனவாதம் ஆகிய அனைத்துக்கும் எதிரான பெண்ணின் விடுதலைக்கான குரல் என கருதுகிறார்கள்.
ஆய்வாளர் தேவிகா, கிருபா சத்தியநாதனின் நாவல்களில் உள்ள இந்த இருபக்க இடர்களையும் அவருடைய நூல்களுக்கு முன்னுரைகள் எழுதிய வெள்ளையர் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறார். அவர்கள் தங்களுடைய சேவைகளுக்காகவும், கிறிஸ்தவத்தை அளித்தமைக்காகவும் கிருபா நன்றியுடன் இருப்பதாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.கிருபாவின் மறைவுக்குப் பின் அவர் நூல்களுக்கு முன்னுரை அளித்த வெள்ளைப் பெண்மணிகள் அரவணைக்கும் பாவனையிலேயே எழுதியிருக்கிறார்கள். கிருபாவிற்கு முன்னுரை அளித்த குடும்ப நண்பர் திருமதி எலிசபெத் கிரிக் (Mrs Elisabeth Grigg) கிருபா வெள்ளைக் கிறிஸ்தவர்களின் இனக்காழ்ப்பு பற்றி சொன்னவை அவருடைய தனிப்பட்ட சமநிலையின்மையின் விளைவு என்று கருதுகிறார்.<ref>[https://www.sahapedia.org/how-krupabai-satthianadhan-pioneered-indian-feminist-writing-english How Krupabai Satthianadhan Pioneered Indian Feminist Writing in English | Sahapedia]</ref> சமீபகாலமாக பெண்ணிய நோக்குடன் கிருபா சத்யநாதனின் கதைகளை ஆராயும் ஆய்வாளர்களான பிரியா ஜோஷி  போன்றவர்களே கிருபாவின் பார்வை என்பது கிறிஸ்தவ ஆதரவு நோக்கு கொண்டது அல்ல அது பிராமணியக் குடும்ப அமைப்பு கிறிஸ்தவ இனவாதம் ஆகிய அனைத்துக்கும் எதிரான பெண்ணின் விடுதலைக்கான குரல் என கருதுகிறார்கள்.

கிருபா சத்தியநாதன் தொடர்களை எழுதிய சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் அ.மாதவையா உள்ளிட்ட அன்றைய முன்னோடி தமிழ் நாவலாசிரியர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். சென்னையில் இருந்து வெளிவந்த விவேகசிந்தாமணி இதழில் அ.மாதவையா 1892-ல் சாவித்ரி சரித்திரம் என்றபெயரில் ஒரு நாவலை எழுதிக்கொண்டிருந்தார். இந்நாவல்கள் எல்லாம் ஒரே காலகட்டத்தில் ஏறத்தாழ ஒரே வகையான கதைக்கருக்களைக் கொண்டவையாக உள்ளன. ஆகவே இவை ஒப்பீட்டு ஆய்வுக்குரியவை

Line 32: Line 29:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

* https://www.sahapedia.org/how-krupabai-satthianadhan-pioneered-indian-feminist-writing-english
* ''The Satthianadhan Family Album'', by Eunice de Souza
 
* ''The Satthianadhan Family Album'', by Eunice de Souza.

== இணைப்புகள் ==
<references />
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 15:08, 13 April 2022

Photo courtesy: Hamletram.blogspot.com

கிருபா சத்தியநாதன் (கிருபாபாய் சத்தியநாதன்) (பிப்ரவரி 14, 1862 - 1894) தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையை பற்றி ஆங்கிலத்தில் நாவல்களை எழுதியவர். இவரது நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஆகவே சில ஆய்வாளர் இவரை தமிழ் நாவலாசிரியர்களின் பட்டியலில் சேர்ப்பதுண்டு. இவர் Kamala- A Hindu life மற்றும் Saguna-A Christian life என்னும் இரு நாவல்களை எழுதியிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெண்களின் வாழ்க்கை பற்றிய பெண்நிலைவாதச் சித்திரங்களை எழுதியவர் என இன்று மதிப்பிடப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

கிருபாபாய் சத்தியநாதன் பிப்ரவரி 14, 1862-ல் அன்றைய மகாராஷ்டிர மாநிலத்தில் அகமதுநகரில் பிறந்தார். தந்தை பெயர் ஹரிபந்த் கிஷ்டி (Haripant Khisti) தாய் ராதாபாய். பிராமணக்குடியில் பிறந்த ஹரிபந்த் ராதாபாய் இருவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.

ரெவெ.சத்யநாதன்
சாமுவேல் சத்யநாதன்( கணவர்)

கிருபாபாய்க்கு பாஸ்கர் என்ற அண்ணன் இருந்தார். பாஸ்கர் கிருபா பாய்க்கு இலக்கியத்தையும் நூல்களையும் அறிமுகம் செய்தார். ஆனால் இளமையிலேயே பாஸ்கர் மறைந்தார். அது கிருபாபாயின் உள்ளத்தில் பெரிய காயமாக ஆகியது. தன் சகுணா கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை நாவலில் பாஸ்கரை சிறந்த கதாபாத்திரமாகப் படைத்திருக்கிறார். பாஸ்கரின் மறைவால் உளம்சோர்ந்திருந்த கிருபாபாயை தேற்றிய இரு வெள்ளையின கிறிஸ்தவ பெண்கள் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். மும்பைக்கு கல்வி கற்கச்சென்ற கிருபா ஓரு அமெரிக்க பெண் மருத்துவரைச் சந்தித்து மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டார்.கூரிய மாணவியான கிருபாபாய் இரு வெள்ளையப் பெண்களின் கல்வி உதவித்தொகை பெற்று சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தன் 16 வயதில் தனியாக சென்னைக்கு வந்தார். சென்னை மருத்துவக்கல்லூரியில் 1878ல் சேர்ந்தார். காசநோய்க்கு ஆளானதால் மருத்துவப்படிப்பை முடிக்கவில்லை

தனிவாழ்க்கை

கிருபாபாய் சத்யநாதன்

கிருபாபாய் இரு வெள்ளையப் பெண்களின் கல்வி உதவித்தொகை பெற்று சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தன் 16 வயதில் தனியாக சென்னைக்கு வந்தார். சென்னையில் அவர் புகழ்பெற்ற மதப்பரப்புநரான ரெவெரெண்ட் டபிள்யூ.டி. சத்தியநாதனின் குடும்பத்துடன் தங்கினார். 1878-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கிருபா சத்தியநாதன் மருத்துவப்பணியில் காசநோய் தொற்றுக்கு ஆளானார். 1879-ல் புனேவில் உள்ள தனது சகோதரியிடம் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றார். திரும்பி வந்து சத்தியநாதனின் மகன் சாமுவேல் சத்தியநாதனை 1881-ல் மணந்துகொண்டார். சாமுவேல் கேம்ப்ரிட்ஜ் மாணவர். சாமுவேல் ஊட்டியில் Breeks Memorial School பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றச் சென்றார். கிருபா மருத்துவக் கல்வியை முடிக்காமல் ஊட்டிக்குச் சென்று அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். அங்கே முஸ்லீம் பெண்குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை சர்ச் மிஷனரி சொசைட்டி உதவியுடன் தொடங்கினார்.

ரெவெரெண்ட் சத்யநாதன் குடும்பம்

ஊட்டியில் அவருடைய காசநோய் கட்டுக்குள் இருந்தது. அங்குதான் அவர் தன் ஆரம்பகட்ட கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். மூன்றாண்டுகளுக்குப்பின் சாமுவேலும் கிருபாவும் ராஜமந்திரிக்கு சென்றனர். அங்கே வெம்மையான சூழலில் கிருபா மீண்டும் நோயுற்றார். ராஜமந்திரியில் இருந்து அவர்கள் கும்பகோணத்துக்கு மாறினார்கள். அவருடைய உடல்நிலை சீர்கெட்டிருந்தாலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். 1886-ல் அவர்கள் மீண்டும் சென்னைக்கே வந்துசேர்ந்தனர். சென்னையில் கிருபா அவருடைய முதல் நாவலை எழுதினார். சகுணா ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை 1887 முதல் 1888 வரை அன்று மதிப்பு மிக்கதாக இருந்த Madras Christian College Magazine-ல் வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில் கிருபாவின் ஒரே குழந்தை ஒருவயது நிறைவதற்குள் இறந்தது. அது கிருபாவை ஆழ்ந்த உளச்சோர்வுக்குள் தள்ளியது. அவருடைய காசநோயும் உச்சமடைந்தது.,அப்போதுதான் அவர் கமலா ஒரு இந்துப்பெண்ணின் கதையை எழுதினார். நடுவே தன் மாமனாரைப்பற்றியும் தன் மாமியாரைப்பற்றியும் இரு நினைவுக்குறிப்புகளை எழுதினார். 1894-ல் தன் 31-வது வயதில் உயிரிழந்தார். அவர் இறப்புக்குப்பின் ’கமலா இந்துப்பெண்ணின் கதை’ வெளிவந்தது. கிருபாபாய் பேரில் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஓர் உதவித்தொகை நிறுவப்பட்டுள்ளது. சென்னை பல்கலையில் ஆங்கிலத்தில் முதலிடம்பெறும் மாணவிக்கு ஒரு தங்கப்பதக்கமும் கிருபாபாயின் பெயரால் வழங்கப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

கிருபா சத்யநாதன்

கிருபா சத்தியநாதன் 1892-ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி வில்லியம் மில்லர் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மாகஸீன் ஆங்கில மாத இதழில் Kamala- A Hindu life என்னும் நாவலையும் 1893-ல் Saguna-A Christian life என்னும் நாவலையும் எழுதினார். இவற்றை சாமுவேல் பவுல் என்னும் மதப்பிரச்சாரகர் தமிழுக்கு மொழியாக்கம் செய்து கமலா- ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கை, சகுணா- ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை என்னும் தலைப்புகளில் 1896-ல் நூலாக வெளியிட்டார்.

கிருபா சத்தியநாதன் தன் முதல் நாவலாக சகுணா- ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கையைத்தான் எழுதினார். இரண்டாவது நாவலாகிய கமலா ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கையை எழுதி முடித்ததும் மறைந்தார். அந்நூல் அவர் மறைவுக்குப்பின் வெளியாகியது. கிருபாவின் நாவல்கள் அவை வெளிவந்த காலத்தில் பெரிதும்பேசப்பட்டாலும் பின்னர் மறக்கப்பட்டன. பின் காலனிய ஆய்வாளர்களான Susie Tharu & K. Lalitha தன் landmark Women Writing in India (1991) என்னும் நூலில் கிருபா சத்தியநாதன் பற்றி எழுதினார்கள். அதன்பின்னரே அந்நாவல்கள் மறுபிரசுரம் கண்டன.

இலக்கிய இடம்

கிருபா சத்தியநாதனின் நாவல்கள் இரண்டுமே தன் வரலாற்றுத்தன்மை கொண்டவை. சகுணா ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை பெருமளவுக்கு அவருடைய வாழ்க்கையையும் கமலா ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கை பெருமளவுக்கு அவர் தாயின் வாழ்க்கையையும் காட்டுகிறது என ஆய்வாளர்கள் கருதுகிறர்கள். கமலா சமகாலத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும் கிருபாவின் தாய் அடைந்த பழமைவாதக் குடும்பத்து அடக்குமுறைகளையே அது பெரிதும் பேசுகிறது. இந்நாவல்களில் பெண்களின் துயர்களை கிருபா எழுதிக்காட்டுகிறார். மதம் மாறுவது எளிமையான தீர்வாக இருப்பதில்லை. மதம் மாறுபவர்கள் சொந்த சமூகத்தை இழப்பதுடன் தங்களை மதமாற்றிய வெள்ளையர்களின் இனமேட்டிமை நோக்கையும் எதிர்கொள்ள நேர்கிறது. கிருபாவின் நாவல்கள் பெண்கள் அடையும் அந்த இடர்களையே பெரிதும் எழுதுகின்றன.

ஆய்வாளர் தேவிகா, கிருபா சத்தியநாதனின் நாவல்களில் உள்ள இந்த இருபக்க இடர்களையும் அவருடைய நூல்களுக்கு முன்னுரைகள் எழுதிய வெள்ளையர் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறார். அவர்கள் தங்களுடைய சேவைகளுக்காகவும், கிறிஸ்தவத்தை அளித்தமைக்காகவும் கிருபா நன்றியுடன் இருப்பதாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.கிருபாவின் மறைவுக்குப் பின் அவர் நூல்களுக்கு முன்னுரை அளித்த வெள்ளைப் பெண்மணிகள் அரவணைக்கும் பாவனையிலேயே எழுதியிருக்கிறார்கள். கிருபாவிற்கு முன்னுரை அளித்த குடும்ப நண்பர் திருமதி எலிசபெத் கிரிக் (Mrs Elisabeth Grigg) கிருபா வெள்ளைக் கிறிஸ்தவர்களின் இனக்காழ்ப்பு பற்றி சொன்னவை அவருடைய தனிப்பட்ட சமநிலையின்மையின் விளைவு என்று கருதுகிறார்.[1] சமீபகாலமாக பெண்ணிய நோக்குடன் கிருபா சத்யநாதனின் கதைகளை ஆராயும் ஆய்வாளர்களான பிரியா ஜோஷி போன்றவர்களே கிருபாவின் பார்வை என்பது கிறிஸ்தவ ஆதரவு நோக்கு கொண்டது அல்ல அது பிராமணியக் குடும்ப அமைப்பு கிறிஸ்தவ இனவாதம் ஆகிய அனைத்துக்கும் எதிரான பெண்ணின் விடுதலைக்கான குரல் என கருதுகிறார்கள்.

கிருபா சத்தியநாதன் தொடர்களை எழுதிய சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் அ.மாதவையா உள்ளிட்ட அன்றைய முன்னோடி தமிழ் நாவலாசிரியர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். சென்னையில் இருந்து வெளிவந்த விவேகசிந்தாமணி இதழில் அ.மாதவையா 1892-ல் சாவித்ரி சரித்திரம் என்றபெயரில் ஒரு நாவலை எழுதிக்கொண்டிருந்தார். இந்நாவல்கள் எல்லாம் ஒரே காலகட்டத்தில் ஏறத்தாழ ஒரே வகையான கதைக்கருக்களைக் கொண்டவையாக உள்ளன. ஆகவே இவை ஒப்பீட்டு ஆய்வுக்குரியவை

உசாத்துணை

  • The Satthianadhan Family Album, by Eunice de Souza

இணைப்புகள்