being created

கிராதம் (வெண்முரசு நாவலின் பகுதி - 12): Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
Line 15: Line 15:

== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
வேதங்களுக்கு மாற்றாகப் புதிய வேதத்தை இளைய யாதவர் நிலைநிறுத்த விரும்புவதையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்துத் தெய்வங்களும் ஓர் அணியில் திரள்வதையும்  மையமாகக் கொண்டுள்ளது ‘கிராதம்’.  இதில், கிராதனாகச் சிவனும் கிராதியாகக் காளியும் இந்தக் கிராதத்தில் இடம்பெறுகின்றனர். இந்தக் கிராதத்தில் சிவன் பல்வேறு வடிவங்களில் கிராதனாக வருவது கூடுதல் சிறப்பு.
கிராதத்தின் கதைப்பின்னல் இரண்டு பெரிய இழைகளைக் கொண்டுள்ளது. முதலாவது, இளைய யாதவருக்கு நிகர் நிற்பதற்காகவே அர்சுணன் நாற்திசைகளை வெற்றிகொண்டு, அதன் வழியாக ஒவ்வொரு திசைத் தெய்வத்திடமிருந்தும் ஒவ்வொரு மெய்மையைப் படைக்கலமாகப் பெற்றுக் கொள்வது. இரண்டாவது, புதிய வேதத்தைத் தடுக்கும்பொருட்டு இளைய யாதவருக்கு எதிராக அர்சுணனைப் போரில் நிறுத்தவே இந்திரன் முதலான அனைத்துத் தெய்வங்களும் பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றன. அதன் உச்ச நிகழ்வாக இந்திரன் இந்திரலோகத்திற்கு வரும்  அர்சுணனிடம் குருஷேத்திரப் போரின் பின்விளைவுகளை முன்கூட்டியே உரைக்கிறார். ஆனாலும் அர்சுணன் பிடிவாதமாக இளைய யாதவருக்கு நிகராகவும் அவருக்கு என்றென்றும் நண்பனாகவும் திகழவே விழைகிறார். 
தர்மர் வேதமெய்மையை முற்றறிவதோடு ‘சொல்வளர்காடு’ நிறைவு பெறுகிறது. அதனைத் தொடரும் இந்த கிராதத்தில், அர்சுணன் வேதமெய்மைகளைப் படைக்கலங்களாகக் கைக்கொள்ளும் விதங்கள் பற்றி விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. அந்தத் தேடல் சார்ந்த அவரின் வீர தீரப் பயணம் பெரும்பாலும் வழிநடைப்பயணிகளின் வழியாகவே கூறப்பட்டுள்ளது. சூதர்களின் மொழியாகவும் எழுத்தாளர் ஜெயமோகனின் கூற்றாகவும் அர்சுணனின் பயணம் விரிந்து விரிந்து நம் கண்முன்னால் நீள்கிறது. அர்சுணனால் நாற்திசைத் தெய்வங்களையும் வெற்றிகொண்டு, அத்திசைகளின் மையமான பாசுபதத்தைப் பெற்று, நிறைவுகொள்ள முடிகிறது.
இந்தக் கிராதத்தில், பிச்சாண்டவர், வைசம்பாயனன், மகாகாளர், கண்டன், ஜைமினி, பைலன், பிரசாந்தர், பிரசண்டன் ஆகியோரின் வழிநடைப் பயணத்தின் வழியாகவே எண்ணற்ற கதைகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவர்களின் பயணத்தில் வழியாக வெவ்வேறு வணிகப்பாதைகள், வணிகக்குழுக்கள், வணிகப் பொருட்கள், பல்வேறு பருவங்களைக் கொண்ட பெருநிலங்கள், அடர்காடுகள், பெருமலைகள் எனப் பலவற்றையும் காட்சிப் படுத்தியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.
அத்தனை திறன்களைப் பெற்றிருந்தும் வாழ்க்கை முழுவதும் தனிமையில் தவிப்பவர் அர்சுணன். தன்னந்தனியர். அதனால்தான் அவரால் ஓர் இடத்திலும் அமைவுகொண்டு இருக்க முடிவதில்லை. அவர் காற்றின் போக்கிற்கு அலையுறும் சருகுபோலவே தன்னுடைய தனிமையைப் போக்கிக்கொள்ள ஏதேதோ காரணங்களை முன்வைத்து, தனிப் பயணியாக அலைந்துகொண்டே இருக்கிறார்.   அர்சுணன் எங்கும் எந்நிலையிலும் தோல்வியை எதிர்கொள்ள விரும்பாதவர். வெற்றிகொண்டு முன்னேறிச் செல்வதே அவரின் வழி. அவர் பெறும் மெய்மையும் அதுவே. அர்சுணன் தான் நாற்திசைத் தெய்வங்களிடமிருந்து பெற்ற அதிஅம்புகளைக் கொண்டு போரிட்டும் இறுதியில் தோற்பது கிராதரான சிவனிடம் மட்டுமே. ஆனால், ‘அர்சுணன் கிராதரான சிவனைத் தன் ஆசிரியராகக் கொள்வதால், இந்தப் போரில் நீ தோல்வியை அடையவில்லை. ஏனென்றால் இது போரே அல்ல; பயிற்சி, கல்வி’ என்ற கருத்தில் கிராதியான காளி கூறுகிறார்.

== கதை மாந்தர் ==
== கதை மாந்தர் ==

Revision as of 19:04, 23 February 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

கிராதம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 12)

கிராதம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 12) இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான போரினை ஓர் இழையாகவும் சைவ நெறிகளை மறு இழையாகவும் நுட்பமாகப் பின்னுகிறது. அர்ஜுனன் பாசுபதத்தை அடைவதுடன் இது நிறைவு பெறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் 12ஆவது பகுதியான ‘கிராதம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் அக்டோபர் 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜனவரி 2017இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் கிராதத்தை அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

வேதங்களுக்கு மாற்றாகப் புதிய வேதத்தை இளைய யாதவர் நிலைநிறுத்த விரும்புவதையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்துத் தெய்வங்களும் ஓர் அணியில் திரள்வதையும் மையமாகக் கொண்டுள்ளது ‘கிராதம்’. இதில், கிராதனாகச் சிவனும் கிராதியாகக் காளியும் இந்தக் கிராதத்தில் இடம்பெறுகின்றனர். இந்தக் கிராதத்தில் சிவன் பல்வேறு வடிவங்களில் கிராதனாக வருவது கூடுதல் சிறப்பு.

கிராதத்தின் கதைப்பின்னல் இரண்டு பெரிய இழைகளைக் கொண்டுள்ளது. முதலாவது, இளைய யாதவருக்கு நிகர் நிற்பதற்காகவே அர்சுணன் நாற்திசைகளை வெற்றிகொண்டு, அதன் வழியாக ஒவ்வொரு திசைத் தெய்வத்திடமிருந்தும் ஒவ்வொரு மெய்மையைப் படைக்கலமாகப் பெற்றுக் கொள்வது. இரண்டாவது, புதிய வேதத்தைத் தடுக்கும்பொருட்டு இளைய யாதவருக்கு எதிராக அர்சுணனைப் போரில் நிறுத்தவே இந்திரன் முதலான அனைத்துத் தெய்வங்களும் பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றன. அதன் உச்ச நிகழ்வாக இந்திரன் இந்திரலோகத்திற்கு வரும்  அர்சுணனிடம் குருஷேத்திரப் போரின் பின்விளைவுகளை முன்கூட்டியே உரைக்கிறார். ஆனாலும் அர்சுணன் பிடிவாதமாக இளைய யாதவருக்கு நிகராகவும் அவருக்கு என்றென்றும் நண்பனாகவும் திகழவே விழைகிறார்.

தர்மர் வேதமெய்மையை முற்றறிவதோடு ‘சொல்வளர்காடு’ நிறைவு பெறுகிறது. அதனைத் தொடரும் இந்த கிராதத்தில், அர்சுணன் வேதமெய்மைகளைப் படைக்கலங்களாகக் கைக்கொள்ளும் விதங்கள் பற்றி விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. அந்தத் தேடல் சார்ந்த அவரின் வீர தீரப் பயணம் பெரும்பாலும் வழிநடைப்பயணிகளின் வழியாகவே கூறப்பட்டுள்ளது. சூதர்களின் மொழியாகவும் எழுத்தாளர் ஜெயமோகனின் கூற்றாகவும் அர்சுணனின் பயணம் விரிந்து விரிந்து நம் கண்முன்னால் நீள்கிறது. அர்சுணனால் நாற்திசைத் தெய்வங்களையும் வெற்றிகொண்டு, அத்திசைகளின் மையமான பாசுபதத்தைப் பெற்று, நிறைவுகொள்ள முடிகிறது.

இந்தக் கிராதத்தில், பிச்சாண்டவர், வைசம்பாயனன், மகாகாளர், கண்டன், ஜைமினி, பைலன், பிரசாந்தர், பிரசண்டன் ஆகியோரின் வழிநடைப் பயணத்தின் வழியாகவே எண்ணற்ற கதைகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவர்களின் பயணத்தில் வழியாக வெவ்வேறு வணிகப்பாதைகள், வணிகக்குழுக்கள், வணிகப் பொருட்கள், பல்வேறு பருவங்களைக் கொண்ட பெருநிலங்கள், அடர்காடுகள், பெருமலைகள் எனப் பலவற்றையும் காட்சிப் படுத்தியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

அத்தனை திறன்களைப் பெற்றிருந்தும் வாழ்க்கை முழுவதும் தனிமையில் தவிப்பவர் அர்சுணன். தன்னந்தனியர். அதனால்தான் அவரால் ஓர் இடத்திலும் அமைவுகொண்டு இருக்க முடிவதில்லை. அவர் காற்றின் போக்கிற்கு அலையுறும் சருகுபோலவே தன்னுடைய தனிமையைப் போக்கிக்கொள்ள ஏதேதோ காரணங்களை முன்வைத்து, தனிப் பயணியாக அலைந்துகொண்டே இருக்கிறார்.   அர்சுணன் எங்கும் எந்நிலையிலும் தோல்வியை எதிர்கொள்ள விரும்பாதவர். வெற்றிகொண்டு முன்னேறிச் செல்வதே அவரின் வழி. அவர் பெறும் மெய்மையும் அதுவே. அர்சுணன் தான் நாற்திசைத் தெய்வங்களிடமிருந்து பெற்ற அதிஅம்புகளைக் கொண்டு போரிட்டும் இறுதியில் தோற்பது கிராதரான சிவனிடம் மட்டுமே. ஆனால், ‘அர்சுணன் கிராதரான சிவனைத் தன் ஆசிரியராகக் கொள்வதால், இந்தப் போரில் நீ தோல்வியை அடையவில்லை. ஏனென்றால் இது போரே அல்ல; பயிற்சி, கல்வி’ என்ற கருத்தில் கிராதியான காளி கூறுகிறார்.

கதை மாந்தர்

உசாத்துணை

[[Category:Tamil Content]]