கா.அப்பாத்துரை

From Tamil Wiki
Revision as of 17:53, 17 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|கா.அப்பாத்துரை கா. அப்பாத்துரை (24 ஜூன்1907 - 26 மே 1989) தமிழறிஞர். தமிழ் வரலாற்றாய்வாளர். மொழிபெயர்ப்பாளர். பன்மொழிப்புலவர் என அழைக்கப்பட்டவர். தமிழ், மலையாளம், சம்ஸ்கிர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கா.அப்பாத்துரை

கா. அப்பாத்துரை (24 ஜூன்1907 - 26 மே 1989) தமிழறிஞர். தமிழ் வரலாற்றாய்வாளர். மொழிபெயர்ப்பாளர். பன்மொழிப்புலவர் என அழைக்கப்பட்டவர். தமிழ், மலையாளம், சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் பயிற்சி உடைவர்.

பிறப்பு, கல்வி

கா.அப்பாத்துரை குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் 24 ஜூன்1907 ல் பிறந்தார். ஆரல்வாய்மொழியில் ஆரம்பக்கல்வி கற்றபின் நாகர்கோயிலில் பள்ளியிறுதிக் கல்வி முடித்து திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.இந்தி மொழியில் ‘விசாரத் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தார்.  திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார்.  சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கா.அப்பாத்துரை தன் உறவினரான அலமேலு அம்மையாரை மணந்துகொண்டார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

அப்பாத்துரை பல்வேறு கல்விநிலையங்களில் பணியாற்றியிருக்கிறார்.

  • கா.அப்பாத்துரை திருநெல்வேலி, ம.தி.தா. இந்துக் கல்லூரியில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 
  • காரைக்குடி, ‘அமராவதிப் புதூர்’-குருகுலப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது கண்ணதாசன் இவரிடம் பயின்றார்.  
  • சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
  • மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 முடிய பணியாற்றினார்.  அப்பொழுது, ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற ஆங்கில நூலை எழுதியதால் தேச ஒற்றுமைக்கு எதிராகப் பணியாற்றியதாகக் குற்றம்சாட்டப்பட்டு பணியை இழந்தார்.
  • சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 முடிய ஆசிரியராகப் பணி செய்தார். 
  • தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார்

இலக்கிய வாழ்க்கை

கா.அப்பாத்துரையின் அறிவியக்கப் பணியை நான்கு வகைகளில் தொகுக்கலாம். இதழியல் எழுத்துக்கள், இலக்கிய ஆய்வுகள், இலக்கியம் சார்ந்த வரலாற்றாய்வுகள் மற்றும் மொழியாக்கங்கள்.

இதழியல் எழுத்துக்கள்

கா.அப்பாத்துரை ஈ.வெ.ராமசாமி பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளர். திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதி வந்தார்.  ‘

உசாத்துணை

http://www.nellaikavinesan.com/2020/07/pulavar-appadurai.html

https://www.hindutamil.in/news/blogs/184597-10-2.html