காந்தி காதை

From Tamil Wiki
Revision as of 22:46, 4 November 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ருச்சிராப்பள்ளி திருக்குறள் கழகத்தின் தலைவர் ஆ. சுப்பராயலு செட்டியாரின் உறுதுணையால், 1979-ல், இந்த நூல் வெளியானது. காந்தி பிறந்த மற்றும் வாழ்ந்த பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ருச்சிராப்பள்ளி திருக்குறள் கழகத்தின் தலைவர் ஆ. சுப்பராயலு செட்டியாரின் உறுதுணையால், 1979-ல், இந்த நூல் வெளியானது. காந்தி பிறந்த மற்றும் வாழ்ந்த பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, பல மக்களை நேரில் கண்டு உரையாடி உருவான நூல் இது. இந்த நூல், பால காண்டம், தகுதிக் காண்டம், அறப்போர்க் காண்டம், அரசியற் காண்டம், விடுதலைக் காண்டம் என ஐந்து காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுபத்தேழு படலங்களையும் 5000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் கொண்டது.

இந்த நூல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் மற்றும் சில தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாட நூலாக வைக்கப்பட்டது. தமிழகப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் ’காந்தி காதைப் படலம்’ பாடமாக வைக்கப்பட்டது.