under review

கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
(changed template text)
Line 194: Line 194:
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ6juMy.TVA_BOK_0007670 தமிழ்ப்புலவர் வரிசை, இணையநூலகம்]
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ6juMy.TVA_BOK_0007670 தமிழ்ப்புலவர் வரிசை, இணையநூலகம்]
*[https://ia800903.us.archive.org/17/items/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ6juMy.TVA_BOK_0007670/TVA_BOK_0007670_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_text.pdf தமிழ்ப்புலவர் வரிசை, இணைய நூலகம்]
*[https://ia800903.us.archive.org/17/items/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ6juMy.TVA_BOK_0007670/TVA_BOK_0007670_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_text.pdf தமிழ்ப்புலவர் வரிசை, இணைய நூலகம்]
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:31, 15 November 2022

To read the article in English: Karuppankilar S.A. Ramasamy Pulavar. ‎

கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப் புலவர்

கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப் புலவர் (மார்ச் 08, 1907 - 1983) (சு.அ. இராமசாமிப் புலவர்) தமிழறிஞர். தமிழ் வரலாற்றுப் பதிவாளர், தமிழ்ப்புலவர் வரிசை என்னும் பெயரில் 31 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் மேலான தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்தவர்.

தமிழ்ப் புலவர் அகரவரிசை, மேற்கோள் அகரவரிசை (இரு தொகுதிகள்), தென்னாட்டுப் பழங்கதைகள் (எட்டு நூல்கள்), தனிப்பாடல் திரட்டு (6 நூல்கள்), சூளாமணி உரை, பிரபுலிங்க லீலை உரை, திருப்போரூர் சன்னிதிமுறை உரை, இரங்கேச வெண்பா, முதுமொழி வெண்பா என்னும் வெண்பா நூல்களுக்கு உரை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி, மலையான்குத்தகை என்ற ஊரில் வாழ்ந்த சதாசிவம் பிள்ளை(தேவர்), இரத்தினம் அம்மாள் ஆகியோருக்கு மார்ச் 08, 1907-ல் பிறந்தவர்.  நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்புவரை பயின்றவர். இதனையடுத்து கல்விபெறுவதற்குத் தில்லைக்குச் சென்றார். அங்கு அவருக்குக் கடுங்காய்ச்சல் வந்தது. இதனால் செவிப்புலன் பாதிப்புற்றது. காதுகேட்கும் திறன் கடைசிவரை இல்லாமல் போனது

தனிவாழ்க்கை

சு. அ. இராமசாமிப் புலவர் திருத்துறைப்பூண்டி அடுத்த கருப்பக்கிளர் என்ற ஊரில் திருமணம் செய்துகொண்டார். இவருக்குத் தமிழ்மணி, மங்கையர்க்கரசி, மயிலேறும் பெருமாள்,, முருகேசன், சிந்தாமணி ஆகியோர் மக்கள்.

இலக்கியப் பணிகள்

சுப்பிரமணிய அருட்டிரு இராமசாமிப் புலவர் என்பதே சுருங்கி சு.அ. இராமசாமிப் புலவர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தொடர்பு அமைந்த பிறகு பல நூல்களை எழுதித் தந்து கழகத்தின் புலவராக இருந்தார். மறைமலையடிகள் நூலகத்தில் தங்கித் தமிழ்ப்பதிப்புப் பணிகளைச் செய்தார். பிழைதிருத்தும் பணியில் தேர்ந்தவர்.இனியன் என்ற பெயரிலும் புலவர் எழுதியுள்ளார். படைப்பு, வரலாறு, தொகுப்பு, உரை, உரைநடை என்று பல வகைப்பட்டவையாகப் புலவரின் படைப்புகள் உள்ளன.

புலவர் இளமையில்

விருதுகள்

சைவசிந்த்தாந்த நூற்ப்பதிப்புக் கழகம் 1008-வது வெளியீட்டு விழாவில் (ஏப்ரல் 21, 1961) புலவருக்கு நினைவுப்பேழை வழங்கிப் பாராட்டப்பட்டது

மறைவு

இராமசாமிப் புலவர் அவர்கள் தம் எழுபத்தாறாம் வயதில் அக்டோபர் 06, 1983 (செந்தமிழ்ச் செல்வி இதழ் குறிப்பிடும் ஆண்டு; மார்ச் 24, 1983 ) மறைந்தார்

நூல்கள்

வெளிவந்தவை
  • தமிழ்ப்புலவர்வரிசை 31 பகுதிகள்
  • கதை இன்பம் 12 பகுதிகள்
  • இலக்கியச்சிறுகதைகள் 10 பகுதிகள்
  • தென்னாட்டுப்பழங்கதைகள் 8 பகுதிகள்
  • தமிழ்ப்புலவர்அகர வரிசை 6 பகுதிகள்
  • தனிப்பாடல்திரட்டு 5 பகுதிகள்
  • தமிழ்நாட்டுவள்ளல்கள் 2 பகுதிகள்
  • சூடாமணிஉரை 2 பகுதிகள்
  • பழமொழிவிளக்கக் கதைகள் 2 பகுதிகள்
  • திருக்குறள்விளக்கக் கதைகள் 2 பகுதிகள்
  • மேற்கோள்விளக்கக் கதைகள் 2 பகுதிகள்
  • கம்ப இராமாயணம் வசனம் 2 பகுதிகள்
  • ஆத்திசூடிவிளக்கக் கதைகள் 2 பகுதிகள்
  • திருக்குறள்50 கதைகள்
  • திருக்குறள்அரும்பதவுரை
  • முதுமொழிக்கதை
  • உலக நீதிக்கதைகள்
  • கொன்றைவேந்தன்கதைகள்
  • நறுந்தொகைக் கதைகள்
  • மூதுரைக்கதைகள்
  • நல்வழிக்கதைகள்
  • நன்நெறிக் கதைகள்
  • நீதிநெறிவிளக்கக் கதைகள்
  • நீதி வெண்பாக் கதைகள்
  • அறநெறிச்சாரக்கதைகள்
  • புலமை வித்தக போதினி
  • தமிழுந்தமிழரும்
  • கல்லாடஉரைநடை
  • குறுந்தொகைவசனம்
  • எழுத்தாளர்களும்பதிப்பகங்களும்
  • கந்தபுராணவசனம்
  • வில்லிபாரதவசனம்
  • சூளாமணிவசனம்
  • கோவலன்
  • தேம்பாவணிஉரைநடை
  • உரையாசிரியர்கள்
  • வளையாபதிக்கதை முதலியன
  • யசோதர காவிய கதை
  • காதல் வெறி முதலிய கதை
  • பரலோக யாத்திரைக் கதைகள்
  • நூறு நகைச்சுவைக் கதைகள்
  • புலவர்நகைச்சுவை
  • பிரபுலிங்கலீலை அரும்பதவுரை
  • பிரதோடவிளக்கம்
  • கொக்கோகரகசியம்
  • நினைத்தால்சிரிப்பு
  • பாட்டிகதைகள்
  • இலாகிரிப்பொருள்கள்
  • புறநானூற்றுக்கதைகள்
  • அகநானூறுஉரைநடை III
  • சிலேடைஅகராதி
  • ஓவியக்கலைஞர்கள்
  • செல்வத்திறவுகோல்
  • கழகத் தமிழ் அகராதி
  • இதழ் விளக்க வரிசை
  • அரிச்சந்திரபுராண உரைநடை
  • காரிய சித்தி மாலை உரை
  • திருவருட்கதைகள்
  • திருவாமாத்தூர்ப்புராண உரைநடை
  • த.ப.ர. வரலாறுஉரைநடை
  • சிவாநந்தர்வரலாறு உரைநடை
  • விநாயகபுராண வசனம்
  • திருவருட்செல்வம்
  • குமார சம்பவம்
  • இரகு வமிசம்
  • மேக சந்தேசம்
  • மாளவிகை
  • விக்கிரமோர்வசி
  • சகுந்தலை
  • பன்னூல்பாடல் திரட்டு (புதுத் தொகுப்பு)
  • சிறப்புப்பெயர் அகர வரிசை
  • ஆத்திசூடிதெளிவுரை
  • உலக நீதி தெளிவுரை
  • கொன்றைவேந்தன்தெளிவுரை
  • நறுந்தொகைதெளிவுரை
  • மூதுரைதெளிவுரை
  • நல்வழிதெளிவுரை
  • நன்னெறிதெளிவுரை
  • விநோதக் களஞ்சியம்
  • பதினோராந் திருமுறைக்குறிப்புரை
  • திருத்தொண்டர்மாக்கதை குறிப்புரை
  • திருக்குறள்சொற்பொருள்
  • சிவப்பிரகாசர்பிரபந்தத் திரட்டு குறிப்புரை
  • நல்லறிவுக்கதைகள்
  • விநாயககவச குறிப்புரை
  • சிறைவிடத்தந்தாதிகுறிப்புரை
  • அபிராமியந்தாதிஉரை
  • மறையசையந்தாதிஉரை
  • இராமாயணம்பாலகாண்ட உரை
  • இலக்கணஅகராதி
  • இரங்கேசவெண்பா உரை
  • முருகேசர்முதுமொழி வெண்பா உரை
  • இளைஞர்பாரதக் கதை
  • இளைஞர்கந்தபுராணக் கதை
  • சோழநாட்டுப்புலவர்கள் I
  • சோழநாட்டுப்புலவர்கள் II
  • தமிழ்நாட்டுக்கவிஞர்கள்
  • தொண்டைநாட்டுப்புலவர்கள்
  • தமிழ்நாட்டுப்பெண்மணிகள்
  • நளன் கதை
  • இசுலாமியக்கதை
  • குசேலர்கதை
  • அரிச்சந்திரன்கதை
  • மதுரை மாலை உரை
  • செல்வத்திருமகளேவருக
  • நாலடியார்விளக்கக் கதை
  • சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு
செய்யுள்நூல்கள்
  • கவிதைக்கலம்பகம்
  • வீரசேகரபஞ்சரத்தினம் (I)
  • அருணாசலஅட்டகம் (II)
  • தட்சணாமூர்த்திதசகம்
  • குன்றைவெண்பாவந்தாதி
  • கட்டளைக்கலித்துறையந்தாதி
  • குன்றைக்குருபரமாலை
  • குன்றைஇருவர் இரட்டை மணி மாலை
  • சிவானந்தர்வரலாறு (3)
  • த.ப. இராமசாமிப் பிள்ளைவரலாறு (4)
  • குமாரவிநாயகர் பதிகம்
  • செங்கமலநாயகி பதிகம்
  • மெய்யப்பசதகம்
  • மகாதேவபதிகம்
  • திருவேங்கடநாதர் புராணம்
  • முத்துராமலிங்கர்பதிகம்
  • அருணாசலப்பதிகம்
வெளிவராதவை
  • முற்காலப்போரும் தற்காலப் போரும்
  • பன்னிருவர்பகை
  • இன்பக்கோவை
  • இனியன்சிறுகதைக் கோவை
  • இனியன்கதைகள்
  • நாயின்கதைகள்
  • நூலாசிரியர்கள்
  • மெய்ஞ்ஞானச்செல்வர்கள்
  • நாலடியார்பொழிப்புரை
  • திருக்காளத்திப்புராண வசனம்
  • வெளிநாட்டுக்கதைகள்
  • கடவுளைப்பற்றிய கதைகள்
  • மண்வண்டி
  • நானூறுநகைச்சுவைக் கதைகள்
புகழ்பெற்றவை
  • மீனாட்சிதிருமணம்
  • முத்தத்தின்இரகசியங்கள்
  • திருக்குறள்பொழிப்புரை
  • அகநானூறுவசனம் (1)
  • குடும்பத்திட்டம்
  • பொது அறிவு
  • வீரவனப்புராண வசனம்
  • வாழத்தெரியாதவர்
  • வீரபாண்டியக்கட்டபொம்மன்
  • கிருட்டிணசைதன்யர்

உசாத்துணை


✅Finalised Page