being created

கரிகாலன்

From Tamil Wiki
Revision as of 17:45, 1 February 2024 by Ramya (talk | contribs) (Created page with "கரிகாலன் (பிறப்பு: ஜூலை 28, 1965) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். == வாழ்க்கைக் குறிப்பு == கரிகாலன் கடலூர் மாவட்டம் மருங்கூரில்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கரிகாலன் (பிறப்பு: ஜூலை 28, 1965) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

கரிகாலன் கடலூர் மாவட்டம் மருங்கூரில் இரத்தினசபாபதி, இராசலட்சுமி இணையருக்கு ஜூலை 28, 1965-இல் பிறந்தார். விருத்தாசலம் பெரியார் நகரில் வசிக்கிறார். கரிகாலன் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கரிகாலன் மே 9, 2023-இல் ஆசிரியரும், எழுத்தாளருமான சு.தமிழ்ச்செல்வி அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். மகள்கள் சிந்து, சுடர். மகன் கார்க்கி.

இதழியல்

களம் புதிது இதழின் ஆசிரியர். 12 இதழ்கள் வந்தன. தற்போது இதழ் வெளியாகவில்லை. சிறந்த கவிஞர்களுக்கு களம்புதிது விருது வழங்கி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இவரது ஊராகாலி எனும் சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஜெ.என்.யு பல்கலைக் கழகத்தின் மொழிபெயர்ப்புத்துறையின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இவரது சில கவிதைகள், ஆங்கிலம், மலையாளம், இந்தி, வங்க மொழிகளில் வெளியாகியுள்ளன. பண்பாடு, கலை, நுண் அரசியல் வெளிகளில் தொடர்ந்து இயங்கிவருபவர்.

விருதுகள்

  • கதா விருது
  • ஏலாதி இலக்கிய விருது
  • ஜெயந்தன் நினைவு விருது

நூல் பட்டியல்

நாவல்
  • எக்ஸ் (வேரல்)
குறுங்கதை
  • எக்ஸிசம் (படைப்பு)
கவிதைத் தொகுப்பு
  • புகைப்பட மனிதர்கள் (களம் புதிது)
  • அப்போதிருந்த இடைவெளியில் (களம் புதிது)
  • புலன் வேட்டை (ஸ்நேகா)
  • இழப்பில் அறிவது (ஸ்நேகா)
  • தேவதூதர்களின் காலடிச்சத்தம் (மருதா)
  • ஆறாவது நிலம் (மருதா)
  • அபத்தங்களின் சிம்பொனி (புதுமைப்பித்தன்)
  • கரிகாலன் கவிதைகள் (உயிர் எழுத்து)
  • பாம்பாட்டி தேசம் (சால்ட்)
  • மெய்ந்நிகர் கனவு (டிஸ்கவரி)
  • தாமரை மழை (நான்காவது கோணம்)
  • செயலிகளின் காலம் (டிஸ்கவரி)
  • உயிர் நன்று, சாதல் இனிது (படைப்பு)
  • மகள் வீடு திரும்பும் பாதை (வேரல்)
  • கிரின்ஞ் (வேரல்)
  • பிக்காஸோ ஏன் அழுகிறார் (வேரல்)
சினிமா
  • திரையும் வாழ்வும் (வாசகசாலை)
  • திரையும் வாழ்வும் - பாகம் 2 (படைப்பு)
  • தெய்வத்திண்டே திர (படைப்பு)
  • சமகால மலையாள சினிமா(படைப்பு)
சங்க இலக்கியம்
  • என்மனார் புலவர் (படைப்பு)
  • நோம் என் நெஞ்சே (படைப்பு)
  • அகத்தொற்று (படைப்பு)
பண்பாட்டுக் கட்டுரைகள்
  • தையலைப் போற்றுதும் (உயிர் எழுத்து)
  • துயில் கலைதல் (படைப்பு)
  • இடர் ஆழி நீங்குக (வேரல்)

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.